மாவட்ட அளவிலான ஹேண்ட்பால் போட்டி
நாகர்கோவில், ஜூலை 8 : குமரி மாவட்ட ஹேண்ட்பால் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான ஹேண்ட்பால் போட்டி நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு பள்ளியில் 2 நாட்கள் நடந்தது. போட்டியை மாநில உணவு ஆணைய தலைவர் சுரேஷ்ராஜன் தொடங்கி வைத்தார். இந்த போட்டிகளில் மாவட்டம் முழுவதும் இருந்து 87 அணிகள் பங்கேற்றன. இதில் 44 பள்ளி அணிகள்...
சாமி சிலை சேதப்படுத்தியதை தட்டிகேட்ட பேரூராட்சி ஊழியர் மீது தாக்குதல் 2 பேர் கைது
கன்னியாகுமரி, ஜூலை 8 : கன்னியாகுமரி அருகே கொட்டாரம் அச்சன்குளம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (60). கொட்டாரம் பேரூராட்சி அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய குடும்ப கோயில் செல்வன்புதூரில் உள்ள மங்கம்மாள் சாலையில் உள்ளது. இந்த நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கோயிலில் உள்ள சுடலைமாடன் சாமி சிலைகள் புதியதாக பிரதிஷ்டை செய்யப்பட்டு...
கடையால் அருகே போதையில் இளம்பெண்கள், வாலிபர்கள் ரகளை
அருமனை, ஜூலை 7: கடையால் அருகே மதுபோதையில் இளம்பெண்கள், வாலிபர்கள் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குமரி மாவட்டம் அருமனை அருகே கடையால் காவல் எல்லைக்குட்பட்ட நெட்டா அரங்கநாடு பகுதி உள்ளது. இங்கு சிற்றாறு அணை உள்ளதால் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை 3 பைக்குகளில் 3...
கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கும் விண்ணப்பிக்கலாம்; ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட விண்ணப்பங்கள் நாளை முதல் விநியோகம்
நாகர்கோவில், ஜூலை 7: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வீடு வீடாக விநியோகம் நாளை (8ம் தேதி) முதல் நடைபெறுகிறது. குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற, ஊரகப் பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டம் வரும் 15ம் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 15ம்...
நாகர்கோவில் அருகே திமுக மாஜி பெண் கவுன்சிலரை மிரட்டியவர் மீது வழக்கு
நாகர்கோவில், ஜூலை 7 : நாகர்கோவிலை அடுத்த கணியான்குளம் பாறையடி பகுதியை சேர்ந்தவர் ஸ்டாலின். இவரது மனைவி உமா(42). ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய 1 வது வார்டு திமுக முன்னாள் கவுன்சிலர் ஆவார். சம்பவத்தன்று கணியான்குளம் சந்திப்பில் உமா நின்று கொண்டிருந்தார். அப்போது புளியடி சாலையை சேர்ந்த மணிகண்டன்(55) என்பவர் அங்கு வந்து உமாவிடம் ரப்பர்...
ரூ.4.85 கோடியில் நடந்து வரும் இரணியல் அரண்மனை புதுப்பிப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும் கலெக்டர் உத்தரவு
நாகர்கோவில், ஜூலை 6: குமரி மாவட்டம் கேரளம் மாநிலத்துடன் இணைந்து இருந்தபோது, குறிப்பிட்ட சில ஆண்டுகள் வேணாட்டரசர்களின் தலைநகராக இரணியல் விளங்கியது. பத்மநாபபுரம் தலைநகரான பின்னர், இரணியல் இரண்டாம் தலைநகரமாக இருந்தது. அப்போது கட்டப்பட்ட அரண்மனை இரணியல் மார்த்தாண்டேஸ்வரர் கோயிலுக்கு அருகாமையில் அமைந்துள்ளது. இக்கோயில் வஞ்சி மார்த்தாண்ட மன்னரால் கட்டப்பட்டதாகும். கி.பி.12-ம் நூற்றாண்டில் இருந்து இப்பகுதியை...
சாகர் மித்ரா பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
நாகர்கோவில், ஜூலை 6: குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாகர்மித்ரா என்ற முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலான பணியிடத்திற்கு பணிபுரிய குமரி மாவட்டத்தில் உள்ள கடலோர மீனவ கிராமங்களில் காலியாக உள்ள ஏழு பணியிடங்களுக்கு கல்குளம் தாலுகாவை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மீன் வள அறிவியல், கடல்...
நாடு திரும்ப இருந்த நிலையில் சவுதியில் குமரி தொழிலாளி பலி
அருமனை, ஜூலை 6: வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்ற குமரி தொழிலாளி பலியானார். குமரி மாவட்டம் அருமனை அருகே மஞ்சாலுமூடு தோட்டம்விளை பகுதியை சேர்ந்தவர் சசி (52). இவருக்கு திருமணமாகி கலா என்ற மனைவியும், ஒரு மகளும், மகனும் உள்ளனர். இவர் கடந்த 25 ஆண்டுகளாக சவுதி அரேபியா நாட்டில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். பின்னர்...
விரிகோடு ரயில்வே கிராசிங்கில் மக்கள் விரும்பும் இடத்தில் மேம்பாலம் அமைக்க வேண்டும் கலெக்டரிடம் எம்.பி., எம்.எல்.ஏ. கோரிக்கை
நாகர்கோவில், ஜூலை 5: கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பர்ட் ஆகியோர் விரிகோடு ஊர் பொதுமக்களுடன் வந்து ரயில்வே மேம்பாலம் குறித்து கலெக்டர் அழகுமீனாவை, நேற்று மாலை சந்தித்து பேசினர். அப்போது விரிகோட்டில் பாலம் அமையும் பகுதியில் பொதுமக்கள் மற்றும் பாலம் அமைய நிலம் கொடுத்தவர்கள், வீடுகளை...