தோவாளை சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு
நாகர்கோவில், ஜூலை 23: குமரி மாவட்டம் தோவாளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை மாவட்ட கலெக்டர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து, நோயாளிகளின் வருகை பதிவேடு, அலுவலக பதிவேடுகளை ஆய்வு செய்தார். வார்டுகளின் தரை மற்றும் சுவர் பகுதியில் கறைகள் இல்லாதவாறு தினமும்...
ஆகஸ்ட் முதல் வாரம் மருத்துவ இயக்குநரக குழு குமரி வருகை
நாகர்கோவில், ஜூலை 23: மருத்துவ இயக்குநரக உயர்நிலை குழு ஆகஸ்ட் முதல் வாரம் குமரி மாவட்டம் வருகை தருகிறது. தமிழ்நாடு அரசின் உத்தரவின் அடிப்படையில், ஒன்றிய மற்றும் மாநில அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் நலத்திட்டங்கள் பொதுமக்கள் அனைவருக்கும் சிறப்பான முறையில் சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு...
திருமண ஆசை காட்டி சிறுமி பலாத்காரம்: குளச்சல் அருகே பரபரப்பு
குளச்சல், ஜூலை 23: நித்திரவிளை அருகே காஞ்சாம்புறத்தை சேர்ந்தவர் விஷ்ணு (29). கூலி தொழிலாளி. அதே பகுதியில், பெற்றோர் பிரிந்து பிரிந்து சென்றதால், தாய் வழி பாட்டி வீட்டில் வசித்து வந்த 17 வயது சிறுமிக்கும் விஷ்ணுவிற்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறி உள்ளது. இந்தநிலையில் சிறுமி நேற்று முன் தினம் வயிறு வலிப்பதாக...
கல்வி வளர்ச்சி நாள் விழா’ முளகுமூடு புனித ஜோசப் பள்ளி
தக்கலை, ஜூலை 22: முளகுமூடு புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் காமராஜரின் 123வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. தொடர்ந்து கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது. கல்விக் குழுவின் சார்பாக ஆசிரியர் லாசர் கலந்து கொண்டு காமராஜரை பற்றி சிறப்புரை ஆற்றினார். தாளாளர் அருட்தந்தை கில்பர்ட் லிங்சன் உரையாற்றினார். மேலும்...
களியக்காவிளை அருகே இளம்பெண் மாயம்
மார்த்தாண்டம், ஜூலை 22: கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை பகுதியை சேர்ந்தவர் சாகுல் அமீது. இவருக்கு செய்யது அலி (22) என்ற மகனும், ஆசனா பீவி (21) என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் தாய் இறந்து விட்டதாலும், தந்தை நோய்வாய் பட்டதாலும் ஆசனா பீவி களியக்காவிளை அருகே ஒற்றாமரத்தில் உள்ள தனது தாய் வழி...
பத்மநாபபுரம் நகராட்சியில் தூய்மை பணியின் போது கிடைத்த நகை போலீசில் ஒப்படைப்பு பணியாளருக்கு பாராட்டு
தக்கலை,ஜூலை 22: பத்மநாபபுரம் நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளராக பணிபுரிந்து வரும் பரமேஸ்வரி என்பவர் தக்கலை மேட்டுக்கடை பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கீழே 3 1/2 பவுன் தங்க நகை கிடந்தது. அதை பரமேஸ்வரி எடுத்து தக்கலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அந்த நகை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தினை...
இரணியல் அருகே பைக் மோதி மரப்பட்டறை அதிபர் காயம்
திங்கள்சந்தை, ஜூலை 21: இரணியல் அருகே நுள்ளிவிளையை சேர்ந்தவர் சேகர் (55). இவர் சொந்தமாக மரப்பட்டறை வைத்து உள்ளார். சம்பவத்தன்று கடைக்கு செல்வதற்காக நுள்ளிவிளை சகாய மாதா குருசடி அருகே மாநில நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது தோட்டியோட்டில் இருந்து வேகமாக வந்த பைக் எதிர்பாராத விதமாக சேகர் மீது மோதியது. இதில் அவருக்கு...
வெள்ளிச்சந்தை அருகே கொத்தனார் மீது வெந்நீர் வீச்சு: டீக்கடைக்காரர் மீது வழக்கு
குளச்சல், ஜூலை 21: வெள்ளிச்சந்தை அருகே காரங்காடு ஆலன்விளையை சேர்ந்தவர் கிராஸ்ராஜ் (48). கொத்தனார். அதே பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (45). இவர் குருந்தன்கோடு அடுத்த ஆசாரிவிளையில் டீக்கடை நடத்தி வருகிறார். கிராஸ்ராஜூம், ரமேசும் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இதனால் கிராஸ்ராஜ் சிறிது சிறிதாக ரமேசுக்கு ரூ.40 ஆயிரம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கிராஸ்ராஜ்...
குறும்பனையில் ரூ.7.5 லட்சம் மதிப்பீட்டில் உயர் கோபுர மின் விளக்கு: விஜய் வசந்த் எம்.பி. திறந்து வைத்தார்
குளச்சல், ஜூலை 21 : குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியம் சைமன்காலனி ஊராட்சி குறும்பனை மீனவர் கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாடு நிதி ரூ.7.5 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட உயர் கோபுர மின் விளக்கு திறப்பு விழா நடந்தது. குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைத் தலைவர் எனல்ராஜ் தலைமையில் விஜய் வசந்த் எம்.பி.திறந்து வைத்தார்....