அருணாச்சலா பள்ளியில் மழலைகளுக்கான திறமை நிகழ்ச்சி
நாகர்கோவில், அக். 31: வெள்ளிச்சந்தை அருகே காட்டுவிளையில் அமைந்துள்ள அருணாச்சலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் திறமை நிகழ்ச்சி நடைபெற்றது. மழலையர் பிரிவில் நடைபெற்ற இந்நிகழ்வில் பள்ளியின் தாளாளர் முனைவர் கிருஷ்ணசுவாமி தலைமை உரையாற்றினார். பள்ளியின் இயக்குநர் தருண்சுரத், முதல்வர் லிஜோமோள் ஜேக்கப் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பள்ளியில் பயிலும் மழலையர் தங்கள் திறமைகளை பேச்சு, நடனம்,...
வெள்ளிச்சந்தை அருகே நடந்து சென்ற முதியவர் மொபட் மோதி படுகாயம்
குளச்சல், அக்.31: வெள்ளிச்சந்தை அருகே பெருவிளை அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பண்டாரம் (73). இவர் சம்பவத்தன்று மேலசங்கரன்குழி அருகே பரப்புவிளையில் உள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மொபட் பண்டாரம் மீது மோதியது. இந்த விபத்தில் பின்தலையில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக...
உள்ளாட்சி தினம் ஊராட்சிகளில் நவ.1ல் கிராம சபை கூட்டம்
நாகர்கோவில், அக்.30 : குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: உள்ளாட்சி தினமான நவம்பர் 1ம்தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஊராட்சிகளின் எல்லைக்கு உட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையில் காலை 11 மணி அளவில் கிராம சபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே குமரி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களுக்கு...
திருவட்டார் அருகே வீட்டில் பதுக்கிய 100 கிலோ குட்கா பறிமுதல் வாலிபர் கைது
திருவட்டார், அக்.30: திருவட்டார் அருகே வீயன்னூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதில் வீயன்னூர் பகுதியில் உள்ள அஜித்குமார்(35) என்பவரது வீட்டில் குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. வீட்டில் முழுமையாக பரிசோதனை செய்த போலீசார் சிறுபொட்டலங்களாக விற்பனைக்காக...
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்ட நேரம் மாற்றம் இன்று காலை 9 மணிக்கு தொடங்கும்
நாகர்கோவில், அக்.30: குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் அக்டோபர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 30ம் தேதி (இன்று) வியாழக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நடைபெறுவதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. மாவட்ட கலெக்டர் தேர்தல் ஆணைய காணொலி காட்சி ஆய்வில் 30ம்தேதி (இன்று)...
நாகர்கோவிலில் மினி பொக்லைன் மூலம் தெருக்களில் கழிவுநீர் கால்வாய் அடைப்பு நீக்கும் பணி
நாகர்கோவில், அக்.29: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், குமரி மாவட்டத்திலும் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக மழை நீடித்து வருகிறது. நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழை காரணமாக கால்வாய்கள் நிரம்பி, சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. ஒரு சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளையும் வெள்ளம் சூழ்ந்தது. சாலைகளில் மழை...
எர்ணாகுளம் அருகே குடிபோதையில் மனைவி அடித்துக் கொலை தொழிலாளி கைது
திருவனந்தபுரம், அக். 29: கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே குடிபோதையில் மனைவியை அடித்துக் கொலை செய்த கூலித் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். மகன் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள பரவூர் பகுதியை சேர்ந்தவர் உண்ணிகிருஷ்ணன் (65). இவரது மனைவி கோமளம் (58). இவர்களுக்கு மனநலம் பாதிக்கப்பட்ட ஷிபு (30)...
தக்கலை டவுன்ஹால் புனரமைப்பு பணி தீவிரம்
தக்கலை, அக்.29 : தக்கலை பழைய பஸ் நிலையத்தில் டவுன்ஹால் என அழைக்கப்படும் சர்சிபி ராமசாமி ஐயர் அரங்கம் உள்ளது. இந்த அரங்கம் திருவிதாங்கூர் திவானாக இருந்த சர்சிபி ராமசாமி ஐயரின் 60வது பிறந்த நாளை ஒட்டி அவரது மக்கள் சேவைக்காக நகர மக்களது பங்களிப்பால் சுமார் 35 சென்ட் இடத்தில் கட்டப்பட்டது ஆகும். தமிழக...
ஆறுகாணி அருகே ஓடை மீது பாலம் அமைக்க வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை
அருமனை, அக்.28:ஆறுகாணி அருகே ஒருநூறாம்வயல் பகுதியில் இருந்து தோலடி வழியாக வண்ணத்திப்பாறை என்ற கிராமத்துக்கு செல்லும் சிறிய வழிப்பாதை உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 30 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கிராமத்துக்கு செல்லும் பாதையில் ஓடை ஒன்று உள்ளது. மழைக்காலங்களில் ஓடையில் அதிகளவில் தண்ணீர் செல்லும். அந்த சமயத்தில் வண்ணத்திப்பாறை கிராமத்துக்கு ஆம்புலன்ஸ்,...