சிறப்பு பட்டியல் திருத்த கலந்தாய்வு கூட்டம் காஞ்சிபுரத்தில் 14,01,198 வாக்காளர்கள்: கலெக்டர் கலைச்செல்வி மோகன் தகவல்
காஞ்சிபுரம், அக்.30: தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படியும், சென்னை தலைமை தேர்தல் அலுவலர், பொது தேர்தல் அரசு செயலாளர் அறிவுரையின்படியும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 01.01.2026ம் தேதியினை தகுதியேற்படுத்தும் நாளாகக்கொண்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து...
பூண்டி ஏரி உபரி நீர் திறப்பு 6,000 கன அடியாக குறைப்பு
குன்றத்தூர், அக்.29: நீர்வரத்து குறைந்ததால், பூண்டி நீர்த்தகத்திலிருந்து 7000 கன அடியில் இருந்து மீண்டும் 6,000 கன அடியாக குறைத்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. தொடர் மழை காரணமாக சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் நீர் தேக்கங்கள் நிரம்பி வருவதால், நேற்று முன்தினம் மாலை 6 மணி நிலவரப்படி பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தின் மொத்த...
சாலையில் நடந்து சென்ற தாய், மகளை கடித்து குதறிய தெருநாய்கள்: சிசிடிவி காட்சி வைரல்
பூந்தமல்லி, அக்.29: சாலையில் நடந்து சென்ற தாய், மகளை தெருநாய்கள் கடித்து குதறியது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பூந்தமல்லி, மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் யாஸ்மின். இவரது மகள் சமீராவை (9), நேற்று முன்தினம் பள்ளி முடிந்ததும் யாஸ்மின் வீட்டிற்கு அழைத்து கொண்டு மகாலட்சுமி நகர் 5வது தெரு வழியாக நடந்து சென்றார்....
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர் மழையால் 76 ஏரிகள் நிரம்பின
காஞ்சிபுரம், அக்.29: காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக 76 ஏரிகள் நிரம்பியுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர், உத்திரமேரூர் வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், நீர்வரத்து கால்வாய்கள் மூலம் நீர் வந்துகொண்டு இருக்கிறது. இதனால் தாமல் மதகு ஏரி, தாமல்...
தாம்பரம் - செங்கல்பட்டு இடையிலான 4வது புதிய ரயில் பாதை கிழக்கு புறம் அமைகிறது: குடியிருப்புகள் பாதிக்காத வகையில் நடவடிக்கை
தாம்பரம், அக்.28: சென்னை எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு புறப்படும் பெரும்பாலான ரயில்கள் செங்கல்பட்டு வழியாக செல்கின்றன. தினசரி 60க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களும், 200க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களும் இந்த வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன. ஆனால், இத்தடத்தில் 3 பாதைகள் மட்டுமே உள்ளன. ரயில்வே வாரியம் தாம்பரம் - செங்கல்பட்டு இடையிலான 3வது மற்றும் 4வது...
குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதிகளில் கால்வாய் ஆக்கிரமிப்புகளை 4 வாரத்தில் அகற்ற வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
பல்லாவரம், அக்.28: சென்னை ஜிஎஸ்டி சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட காரணமான குரோம்பேட்டை, பல்லாவரம் கால்வாய்களில் உள்ள 81 ஆக்கிரமிப்புகளை 4 வாரங்களில் அகற்ற வேண்டும், என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குரோம்பேட்டையை சேர்ந்த இயற்கை ஆர்வலர் டேவிட் மனோகர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதிகளின் ஜிஎஸ்டி சாலையில் இருந்து...
சூரசம்ஹாரம் எதிரொலி பூக்கள் விலை உயர்வு
வளசரவாக்கம், அக்.28: முருகன் கோயில்களில் நேற்று சூரசம்ஹாரம் நடைபெற்றதையொட்டி நேற்று கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை பல மடங்கு உயர்ந்தது. அதன்படி, ஒரு கிலோ மல்லி 1,300 ரூபாயில் இருந்து 1,500க்கும், ஐஸ் மல்லி 1,100 ரூபாயில் இருந்து 1,300க்கும், முல்லை மற்றும் ஜாதிமல்லி 1000 ரூபாயில் இருந்து 1,200க்கும், கனகாம்பரம் 300 ரூபாயில் இருந்து...
திருக்கழுக்குன்றம் அருகே வெள்ளப்பெருக்கு பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்ட தற்காலிக தரைப்பாலம் மூழ்கியது: 5 கிராம மக்கள் தவிப்பு உயர்மட்ட பாலப் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை
திருக்கழுக்குன்றம், அக்.26: திருக்கழுக்குன்றம் அருகே ஆற்றில் வெள்ளம் தற்காலிக பாலம் உடைந்ததால் 5 கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருவதால், ஆமை வேகத்தில் நடக்கும் புதிய பாலம் கட்டும் பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருக்கழுக்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட இரும்புலிச்சேரி பாலாற்றின் குறுக்கே கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பாலம்...
குன்றத்தூர் அருகே நூதன முறையில் திருடிய கார் மீட்பு: குற்றவாளிக்கு வலைவீச்சு
குன்றத்தூர், அக்.26: குன்றத்தூர் அருகே நூதன முறையில் திருடப்பட்ட காரை பறிமுதல் செய்து, குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர். ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்தவர் மகேந்திரகுமார் (42). இவர், சொந்தமாக கார் வைத்து, ஆன்லைனில் இணைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஒரகடத்தில் இருந்து காரை ஆன்லைனில் புக் செய்து, குன்றத்தூர்...