விவேகானந்தா வித்யாலயா பள்ளி சார்பில் ஆதரவற்ற குழந்தைகள், கழைக் கூத்தாடிகளுக்கு தீபாவளி பரிசு
மதுராந்தகம், அக்.18: விவேகானந்தா வித்யாலயா பள்ளி சார்பில் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் கழைக் கூத்தாடிகளுக்கு தீபாவளி பரிசுகள் வழங்கப்பட்டது. மதுராந்தகம் விவேகானந்தா வித்யாலயா சிபிஎஸ்இ மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் சார்பில் கடவுளின் குழந்தைகள் என்ற தலைப்பில் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் கழைக் கூத்தாடிகளுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரிசி, புத்தாடை, மளிகைப் பொருட்கள், பட்டாசு...
குற்ற வழக்குகளில் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது
மதுராந்தகம், அக்.18: மதுராந்தகம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மாம்பட்டு பகுதியை சேர்ந்த சிவா(எ) சிவநேசன்(22), பாரூக்(26), மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த சஞ்சய்(22), மேலவலம் பேட்டை பகுதியை சேர்ந்த சேது(எ) சேதுராமன்(27) ஆகிய நான்கு பேர் மீதும் படாளம், மதுராந்தகம் காவல் நிலையங்களில் கஞ்சா விற்பனை, பணம் பறிப்பு, திருட்டு உள்ளிட்ட குற்ற வழக்குகளில் கைது...
தீபாவளிக்கு புத்தாடை வாங்கி தராததால் சாணம் பவுடர் சாப்பிட்ட சிறுமி சீரியஸ்
சோழிங்கநல்லூர், அக்.17: தீபாவளிக்கு புத்தாடை வாங்கித் தராததால் சாணம் பவுடரை சாப்பிட்டு மயங்கிய 14 வயது சிறுமி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். காசிமேடு சிங்காரவேலர் நகர் பள்ள பகுதியைச் சேர்ந்த ஒரு 14 வயது சிறுமி, தீபாவளியை முன்னிட்டு, புத்தாடை வாங்கித் தரும்படி பெற்றோரிடம் கேட்டுள்ளார். ஆனால், அவர்கள் எடுத்து கொடுக்காததால் மனமுடைந்து, வீட்டில் இருந்த...
புதுப்பட்டினம் ஊராட்சியில் வடிகால்வாய் அமைக்க தீர்மானம் நிறைவேற்றம்
திருக்கழுக்குன்றம், அக்.17: திருக்கழுக்குன்றம் ஒன்றியம், புதுப்பட்டினம் ஊராட்சியில் சென்னை - புதுச்சேரி இணைக்கும் பழைய கிழக்கு கடற்கரை சாலை உள்ளது. இங்குள்ளவர்கள், சென்னை மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட வெளியூர்களுக்குச் செல்ல கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டியுள்ள பேருந்து நிறுத்தத்தைத்தான் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த, கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் மழைநீர் வடிகால்வாய் இல்லாததால்,...
அரசு பேருந்து விபத்து: 5 பயணிகள் காயம்
மதுராந்தகம், அக்.17: மதுராந்தகம் ஜிஎஸ்டி சாலையில் புதிய சுரங்கப்பாதை அமைப்பதற்காக, சர்வீஸ் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் அப்பகுதியில் ஜிஎஸ்டி சாலை குறுகியுள்ளதால், அனைத்து வாகனங்களும் மெதுவாக செல்கின்றன. இந்நிலையில், புதுக்கோட்டையில் இருந்து நேற்று முன்தினம் இரவு அரசு பேருந்து ஒன்று சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்து...
காமாட்சி அம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.53.41 லட்சம் வசூல்
காஞ்சிபுரம், அக்.16: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். கோயிலுக்கு வரும் பக்தர்கள் பணம் மற்றும் தங்கம், வெள்ளி பொருட்களை கோயில் உண்டியல்களில் காணிக்கையாக செலுத்திவிட்டுச் செல்வார்கள். நவராத்திரி உற்சவம் நடைபெற்று முடிந்த நிலையில் கோயில் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இந்து...
நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் 700 கனஅடி உபரிநீர் வெளியேற்றம்
காஞ்சிபுரம், அக்.16: பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருவதால், 700 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னை மக்களின் குடிநீர் வழங்கும் முக்கிய ஆதாரங்களில் ஒன்றான பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம் 34.58 சதுர கிமீ பரப்பளவில் அமைந்துள்ளது. நீர்த்தேக்கத்தின் நீர் மட்ட மொத்த உயரம் 36 அடியாகும். இதன் முழு...
போதை மறுவாழ்வு மையத்தில் காவலாளியை தாக்கிவிட்டு 35 பேர் தப்பியோட்டம்: மாங்காட்டில் பரபரப்பு
குன்றத்தூர், அக்.16: மாங்காட்டில் போதை மறுவாழ்வு மையத்தில் காவலாளியை தாக்கிவிட்டு தப்பியோடிய 35 பேரை, போலீசார் தேடி வருகின்றனர். மாங்காடு அடுத்த சக்கரா நகர் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான போதை மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் 100க்கும் மேற்பட்டோர் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை ஒரே...
தமிழ்நாடு - ஆந்திர எல்லையில் பெய்த கனமழையால் செவிலிமேடு பாலாற்றில் வெள்ளப்பெருக்கு: விவசாயிகள் மகிழ்ச்சி
காஞ்சிபுரம், அக்.14: தமிழக - ஆந்திர எல்லை பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து கோடைகாலத்திலும் பாலாற்றில் தொடர்ந்து நீரோட்டம் இருந்த...