2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவலோகநாதர் கோயிலை புனரமைப்பு செய்யக்கோரி பெண்கள் தியானம்
மாமல்லபுரம், ஆக 6: மாமல்லபுரம் அருகே 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவலோகநாதர் கோயிலை புனரமைப்பு செய்யக் கோரி பெண்கள் தியானம் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. மாமல்லபுரம் அடுத்த மணமை கிராமத்தில், அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளிக்கு எதிரே சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவலோகநாதர் கோயில் உள்ளது....
காஞ்சிபுரத்தில் விதிமுறைகளை மீறி இயங்கிய 278 வாகனங்களுக்கு ரூ.22 லட்சம் அபராதம்
காஞ்சிபுரம், ஆக.6: காஞ்சிபுரம் ஆர்டிஓ எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விதிமுறைகளை மீறி இயங்கிய 278 வாகனங்களுக்கு ரூ.22 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது என்று வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் உத்தரவின்படி, காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து எல்லைக்கு உட்பட்ட காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில் பொது சாலைகளில் செல்லும்...
குடியிருப்புகளுக்கு கூட்டு மதிப்பு தொடர்பாக 15 நாட்களுக்குள் கருத்து தெரிவிக்கலாம்
செங்கல்பட்டு, ஆக. 5: அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கூட்டு மதிப்பு தொடர்பாக 15 நாட்களுக்குள் பொதுமக்கள் தங்களது கருத்துகளை 15 நாடகளுக்குள் தெரிவிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் சினேகா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு வருவாய் மாவட்டத்திற்கு உட்பட்ட செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் தென்சென்னை பதிவு மாவட்ட சார்-பதிவகங்களில் எல்லைக்குட்பட்ட அடுக்குமாடி...
மாநகராட்சி கழிப்பறையின் மாடியில் தூங்கியவர் தவறி விழுந்து பலி
போரூர், ஆக.5: சென்னை வடபழனி புலியூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (52), பெயின்டர். இவர், கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து, கடந்த 5 ஆண்டுகளாக வீட்டின் அருகே உள்ள மாநகராட்சி கழிப்பறையின் மாடியில் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் போதையில் கழிப்பறை கட்டிடத்தின் மாடியில் தூங்கிய போது, தவறி...
மானாம்பதிக்கு கூடுதல் மாநகர பேருந்து இயக்க கோரிக்கை
திருப்போரூர், ஆக.5: சென்னை அடையாறில் இருந்து திருப்போரூரை அடுத்துள்ள மானாம்பதி கிராமம் வரை தடம் எண் 102 எக்ஸ் என்ற மாநகரப் பேருந்து இயக்கப்படுகிறது. இது காலை மற்றும் மாலை ஆகிய இரு நேரங்களில் இந்த பேருந்து இயக்கப்படுகிறது. இதில் மானாம்பதி, குண்ணப்பட்டு, சிறுதாவூர், ஆமூர், அகரம், உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள்...
ஊனைமாஞ்சேரி ஊராட்சியில் கன்னியம்மன் கோயில் கூழ் வார்த்தல் விழா
கூடுவாஞ்சேரி, ஆக. 4: செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அடுத்த, ஊனைமாஞ்சேரி ஊராட்சியில் உள்ள சப்த கன்னியம்மன் கோயில் 36ம் ஆண்டு ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு கூழ் வார்த்தல் திருவிழா கடந்த 1ம் தேதி நடைபெற்றது. இதில், கன்னியம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு அம்மன் வீதி உலா வந்தது. விழாவில், 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள்...
நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் உறுப்பினராக பணிபுரிய விண்ணப்பிக்கலாம்
செங்கல்பட்டு, ஆக. 4: நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் உறுப்பினராக பணிபுரிய விண்ணப்பிக்கலாம் என செங்கல்பட்டு முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதியும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான சந்திரசேகரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள நிரந்தர மக்கள்...
மக்கள் குறை கேட்பு முகாம்களில் பெறப்பட்ட 2,430 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
காஞ்சிபுரம், ஆக. 3: காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினரின் மக்கள் குறை கேட்பு முகாம்களில் பெறப்பட்ட 2,430 மனுக்களை, கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம் வழங்கி, மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எழிலரசன் எம்எல்ஏ கோரிக்கை வைத்தார். காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காஞ்சிபுரம் மாநகரம், காஞ்சிபுரம் ஒன்றியம்,...
தொட்டிலில் இருந்து விழுந்து பச்சிளம் ஆண் குழந்தை பலி
வளசரவாக்கம், ஆக.3: முகப்பேர் பகுதியில் தனியார் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. ஆதரவற்ற குழந்தைகள், குப்பை தோட்டியில் வீசப்படும் குழந்தைகள் மீட்கப்பட்டு, இந்த காப்பகத்தில் பராமரித்து வருகின்றனர். இந்நிலையில், இங்கிருந்த 6 மாத ஆண் குழந்தைக்கு, காப்பகத்தில் பணிபுரியும் திருவேற்காடு பகுதியை சேர்ந்த பவானி (34) என்பவர், நேற்று முன்தினம் பால் பட்டியில் பால் கொடுத்து,...