கமிஷன் தகராறில் நிலத்தரகர் கடத்தல்: மூவர் கைது
துரைப்பாக்கம், டிச.2: நீலாங்கரை, கணேஷ் நகரை சேர்ந்தவர் பச்சையப்பன் (45). இவரும், கே.கே.நகரைச் சேர்ந்த வெற்றி என்பவரும் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகின்றனர். இவர்களுடன் வெற்றியின் நண்பர் விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சங்கர் (40) என்பவரும் சேர்ந்து தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில், நிலம் விற்று கொடுத்ததில் சங்கருக்கு பச்சையப்பன், வெற்றி ஆகியோர் கமிஷன்...
டிட்வா புயல் எதிரொலி மாமல்லபுரத்தில் காற்றுடன் கனமழை
மாமல்லபுரம், டிச.1: வங்கக்கடலில் உருவான “டிட்வா” புயல் வலுவிழந்தது எனவும், மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதில், செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. மாமல்லபுரத்தில் நேற்று...
திருமண நிச்சயதார்த்தத்திற்கு சென்றபோது பஸ் கவிழ்ந்து 3 பேர் படுகாயம்
குன்றத்தூர், டிச.1: திருமண நிச்சயதார்த்தத்திற்கு சென்றபோது பஸ் கவிழ்ந்ததில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். சென்னை மணலி, மாத்தூர், 36வது தெருவை சேர்ந்தவர் முகமது ஆரிப் (50). இவர், தனது மகன் யூசுப் என்பவருக்கு திருமண நிச்சயதார்த்தம் செய்வதற்காக நேற்று தனது உறவினர்கள் 18 பேருடன் மணலியில் இருந்து பேருந்து ஒன்றில் தாம்பரம் அடுத்த...
மழை குறைந்ததன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரிநீர் திறப்பு நிறுத்தம்
குன்றத்தூர்,டிச.1: சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளுள் செம்பரம்பாக்கம் ஏரியும் ஒன்று. டிட்வா புயல் காரணமாக நேற்று சென்னை புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதன் காரணமாக தற்போது செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் நிறைந்து, கடல்போல் ரம்யமாக காட்சியளித்து வருகிறது. இதனால், தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு...
அண்ணா அரசு மேல்நிலை பள்ளியில் இந்திய அரசியலமைப்பு நினைவு தூணுக்கு மாலை அணிவித்து மாணவர்கள் மரியாதை
வாலாஜாபாத், நவ.29: வாலாஜாபாத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் உள்ள இந்திய அரசியலமைப்பு நினைவு தூணுக்கு மாஅலை அணிவித்து மாணவர்கள் மரியாதை செலுத்தினர். வாலாஜாபாத் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், 1975ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்திய அரசியலமைப்பின் முகவுரை நினைவு தூண், அரசியலமைப்பு தினத்தை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது. மேலும்...
நெம்மேலி ஈரநில பகுதிக்கு 16 ஆயிரம் வாத்துகள் இடம்பெயர்வு
சோழிங்கநல்லூர், நவ.29: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெம்மேலி ஈரநிலத்திற்கு 16,000க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த வாத்துகள் வந்துள்ளதால் தற்போது அப்பகுதி உயிர்பெற்றுள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெம்மேலி ஈரநிலம், பல ஆண்டுகளாக பறவைகள் வசிப்பிடமாகவும், வெப்பமான பறவைகள் சரணாலயமாக மாறியுள்ளது என்றும் பறவை ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும் இங்கு வருகை தரும் பறவை...
மாமல்லபுரத்தில் திடீர் மண் அரிப்பு: மீனவர்கள் அச்சம்
மாமல்லபுரம், நவ.29: மாமல்லபுரம் முதல் புதிய கல்பாக்கம் கடற்கரை பகுதி வரை மீனவ குப்பங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு, மீன்பிடி தொழில் வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது. இப்பகுதி மீனவர்கள் தினமும் அதிகாலை கடலுக்கு சென்று மீன்களை பிடித்து வந்து விற்பனை செய்வது வழக்கம். இந்நிலையில், நேற்று அதிகாலை மாமல்லபுரம்...
கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க செயற்கை பவள பாறைகள் அமைக்க வேண்டும்: செங்கல்பட்டு மாவட்ட மீனவர்கள் வலியுறுத்தல்
மாமல்லபுரம், நவ.28: செங்கல்பட்டு மாவட்டத்தில் கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க செயற்கை பவள பாறைகள் அமைக்க மீன்வளத்துறை முன் வர வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் மீன்பிடி தொழில் பிரதான தொழிலாக விளங்கி வருகிறது. கானத்தூர் ரெட்டி குப்பம் தொடங்கி, கோட்டைக்காடு குப்பம் வரை 57 கிமீ நீளம் கடற்கரை பகுதி அமைந்துள்ளது....
காஞ்சிபுரம் சரகத்தில் 21 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்: டிஐஜி தேவராணி உத்தரவு
காஞ்சிபுரம், நவ.28: காஞ்சிபுரம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட காஞ்சிபுரம், திருவள்ளூர் , செங்கல்பட்டு மாவட்டங்களில் 21 இன்ஸ்பெக்டர்களை பணியிடமாற்றம் செய்து காஞ்சிபுரம் சரக டிஐஜி தேவராணி உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட சரக டிஐஜி தேவராணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய பாலமுருகன், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டராகவும்,...