துணை முதல்வர் பிறந்தநாள் தெருமுனை கூட்டங்கள்
உத்திரமேரூர், நவ.27: உத்திரமேரூர் ஒன்றிய திமுக சார்பில், உத்திரமேரூர் அடுத்த தண்டரை, மானாம்பதி கண்டிகை, இளநகர் ஆகிய கிராமங்களில் நேற்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தெருமுனை கூட்டங்கள் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். நகரச் செயலாளர் பாரிவள்ளல், பேரூராட்சி தலைவர் பொன்.சசிகுமார், ஒன்றிய கவுன்சிலர்கள் தயாளன், சுகுணா சுந்தர்ராஜன்...
வெண்ணெய் உருண்டை பாறையில் வல்லபாய் உருவம்
மாமல்லபுரம், நவ.27: இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாளையொட்டி இந்தியா முழுவதும் 75 புராதன சின்னங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் மீது லேசர் ஒளி மூலம் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் கண்டு ரசிக்கும்...
திருப்போரூரில் எஸ்ஐஆர் பணி மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
திருப்போரூர், நவ.27: திருப்போரூர் தொகுதியில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணியை, மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார் ஆய்வு செய்தார். திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர்களிடம் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் படிவங்களை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு, வாக்காளர்களிடம் வழங்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை திரும்பப்பெற்று, இணையதளத்தில் பதிவேற்றும் பணி திருப்போரூர் வட்டாட்சியர்...
பெரும்புதூர் அருகே பயங்கரம் தலையில் வெட்டி வாலிபர் கொலை
பெரும்புதூர், நவ.26: பெரும்புதூர் அருகே தலையில் வெட்டி ஒரு வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். சடலத்தை மீட்டு, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரும்புதூர் நகராட்சி அலுவலகம் அருகில், வாலிபர் ஒருவர் தலையில் வெட்டு காயங்களுடன் சடலமாக கிடப்பதை பார்த்த அப்பகுதி மக்கள், இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்...
தொடர் குற்றச்செயலில் ஈடுபட்ட வாலிபர் குண்டாசில் அடைப்பு
காஞ்சிபுரம், நவ.26: காஞ்சிபுரத்தில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த வாலிபரை, போலீசார் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். காஞ்சிபுரம் அடுத்த சதாவரம், காந்தி நகரைச் சேர்ந்தவர் பாபு என்பவரின் மகன் கணபதி (24). இவர், காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அடிதடி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட குற்ற...
மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் பலி
காஞ்சிபுரம், நவ.26: காஞ்சிபுரம் அருகே வீட்டில் மின் பழுதை சரிசெய்தபோது, மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் பரிதாபமாக பலியானார். காஞ்சிபுரம் அடுத்த தைப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயவேல் என்பவரின் மகன் கார்த்திகேயன் (28). இவருக்கு, திருமணமாகி துர்கா தேவி (19) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் தைப்பாக்கம் கிராமத்தில் ஜெயலட்சுமி என்பவரின் வீட்டில் மின்...
குறைதீர் கூட்டத்தில் 382 மனுக்கள் ஏற்பு
காஞ்சிபுரம், நவ.25: காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 382 மனுக்களை பெற்று, அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்துத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம்...
வாகனம் மோதி மூதாட்டி சாவு
காஞ்சிபுரம், நவ.25: காஞ்சிபுரத்தை அடுத்த கோனேரிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரராமன் என்பவரின் மனைவி செல்வி (65). விவசாய கூலி வேலை செய்து வந்தார். இவர், நேற்று முன்தினம் அதிகாலை 4.30 மணியளவில் ஏனாத்தூர் பகுதியில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி தன்னுடைய விவசாய நிலத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, கோ அவென்யூ அருகே சாலை வளைவில் எதிர்பாராத...
குழந்தைகள் உரிமை தின விழா
திருப்போரூர், நவ.25: திருப்போரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச குழந்தைகள் உரிமை தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில், பள்ளி தலைமை ஆசிரியர் தெமினா கிரானேப் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் கிருபாகரன் வரவேற்றார். குழந்தைகள் உரிமை செயல்பாட்டாளர் ராமச்சந்திரன் பங்கேற்று, குழந்தைகளின் உரிமைகள் குறித்து பேசினார். முடிவில் முதுகலை ஆசிரியர் குமார் நன்றி...