காஞ்சிபுரம் 32வது வார்டில் 30 சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்: எஸ்பி தொடங்கி வைத்தார்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 32வது வார்டு பகுதியில் குற்றச்சம்பவங்களை தடுக்க விதமாக பிரதான இடங்களில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களை மாவட்ட போலீஸ் எஸ்பி சண்முகம் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 32வது வார்டு பகுதிக்கு உட்பட்ட 9 தெருக்களில் ரூ.7 லட்சம் மதிப்பில் 30 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரும்...
சவ ஊர்வலத்தின் போது நாட்டு பட்டாசு வெடித்து பள்ளி மாணவி படுகாயம்
துரைப்பாக்கம், ஜூலை 26: அக்கரை பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் மகேஷ்குமார் (38), தனியார் நிறுவன பாதுகாப்பு பிரிவு மேலாளர். இவரது மனைவி சகாயமேரி. இவர்களது மூத்த மகள் நிஷாந்தினி (10), வெட்டுவாங்கேணியில் உள்ள தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். அப்போது...
மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் சிக்கன் பர்கரில் புழுக்கள்: உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு
போரூர், ஜூலை 26: ஆவடி அடுத்த அயப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் எப்ரின்(38). இவரது மனைவி வனிதா. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இருவரும் பருத்திப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு, 4ம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில், வனிதா நேற்று மாலை தனது மகள்களுடன் பரித்திப்பட்டில் உள்ள மெக்டொனால்ட்ஸ் உணவகத்திற்கு சென்றார். அப்போது,...
பருக்கல் கிராமத்தில் பழுதடைந்த பயணிகள் நிழற்குடை: அகற்றிவிட்டு புதிதாக கட்டித்தர கோரிக்கை
செய்யூர், ஜூலை 26: செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் அடுத்துள்ளது பருக்கல் கிராமம். இக்கிராம மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்ல பருக்கல் பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்துகின்றனர். இந்த பேருந்து நிறுத்தம் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது. மிகவும் பழமையான இந்த கட்டிடம் நாளடைவில் பழுதாகி பொதுமக்கள் பயன்படுத்த முடியாத...
சிறுமிக்கு பாலியல் தொல்லை விவசாயிக்கு ஆயுள்
செங்கல்பட்டு, ஜூலை 25: மேல்மருவத்துார் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தனது பெற்றோருடன் 12 வயது சிறுமி வசித்து வந்தார். இந்நிலையில், சிறுமியின் வீட்டிற்கு அருகில் வசித்து வருபவர் நாகதாஸ் (45), விவசாயி. இந்நிலையில் கடந்த 19.10.2018ம் தேதி சிறுமி அவரது அம்மாவின் புடவையில் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்தததாக கூறப்படுகிறது....
திமுக மாணவர் அணி சார்பில் ஓரணியில் தமிழ்நாடு பிரசாரம்
காஞ்சிபுரம், ஜூலை 24: திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின், மக்களை ஒன்றிணைக்கும் “ஓரணியில் தமிழ்நாடு” என்னும் மாபெரும் முன்னெடுப்பிற்கு வலுச்சேர்க்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் திமுக மாணவர் அணி துண்டறிக்கை விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில், காஞ்சிபுரம்...
காஞ்சிபுரத்தில் இருந்து பெங்களூருக்கு 3 அதிநவீன குளிர்சாதன பேருந்து சேவை: எம்எல்ஏ எழிலரசன் தொடங்கி வைத்தார்
காஞ்சிபுரம், ஜூலை 24: காஞ்சிபுரத்தில் இருந்து பெங்களூருக்கு தனியார் பேருந்துகளுக்கு இணையாக 3 அதிநவீன குளிர்ச்சாதன பேருந்துகள் சேவையை எம்எல்ஏ எழிலரசன் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக குளிர்சாதன சொகுசு பேருந்துகள் பச்சை நிறத்திலும், பிஎஸ் 4 பேருந்துகளின் நீலம் நிறத்திலும் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் பார்வைக்கு பளிச்சென்று தெரிய வேண்டும்...
காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே திறந்து கிடக்கும் கழிவுநீர் கால்வாய்: நோய் பரவும் என அச்சம்
காஞ்சிபுரம், ஜூலை 24: கோயிலுக்கும், பட்டுக்கும் பெயர் பெற்ற நகரம் காஞ்சிபுரம். இங்கு, கோயில்கள் நிறைந்துள்ளதால் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் உள்ளது. காஞ்சிபுரம், மாநகராட்சி பகுதிகளில் காஞ்சி காமாட்சி அம்மன் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், கச்சபேஸ்வரர் கோயில் உள்ளிட்ட உலக புகழ்பெற்ற பல கோயில்கள் அமைந்துள்ளன. ஏராளமான சுற்றுலா பயணிகள்,...
ஆட்டோ மோதி 1ம் வகுப்பு மாணவன் பலி
உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த சிறுங்கோழி கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மகன் ராகவன், அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 1ம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை பள்ளி முடித்து விட்டு தனது அண்ணன் சுரேந்தருடன் தங்களது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, வி.டி., மில் அருகே வந்தபோது பின்னால்...