கொளப்பாக்கத்தில் திமுக பொது உறுப்பினர் கூட்டம் 15 ஆயிரம் குடும்பத்தினருக்கு விரைவில் வீட்டுமனை பட்டா : அமைச்சர் தா.மோ.அன்பரசன் உறுதி
கூடுவாஞ்சேரி: காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில், வண்டலூர் அருகே கொளப்பாக்கத்தில் நேற்று முன்தினம் இரவு திமுக பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் ஒன்றிய செயலாளர் எம்.டி.லோகநாதன் தலைமையில் நடந்தது. அவைத்தலைவர் ஜேவிஎஸ்.ரங்கநாதன், ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர்கள் குணா, ராஜேந்திரன், பொன்னுசாமி, கருணாகரன், காந்த், பத்மநாபன் ஆகியோர் முன்னிலை...
கேளம்பாக்கம்-வண்டலூர் இடையே சாலையோர முட்செடிகள் அகற்றம்
திருப்போரூர்: கேளம்பாக்கத்தில் இருந்து வண்டலூர் வரை சுமார் 20 கி.மீ., தூரம் உள்ளது. இங்கு பெரும்பாலான இடங்களில் வனப்பகுதி குறுக்கிடுகிறது. இந்நிலையில், சாலையோரத்தில் உள்ள புதர்செடிகளும், முட்செடிகளும் வளர்ந்து காணப்பட்டன. இரவு நேரங்களில் சாலையோரமாக செல்லும் இரு சக்கர வாகன ஒட்டிகளை இந்த முட்செடிகளை பதம் பார்த்தன.இதன் காரணமாக சிறு விபத்துகள் நடைபெற்ற நிலையில் இவற்றை...
அரசு பள்ளியில் திடீர் தீ விபத்து
உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த, சாலவாக்கம் கிராமத்தில் அரசினர் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சாலவாக்கம் கிராமத்தை சேர்ந்த 123 மாணவ-மாணவியர்கள் பயின்று வருகின்றனர். பள்ளி அருகே சமையற் கூடம் உள்ளது. பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு அரசின் சார்பில் வழங்கப்படும் உணவுகள் சமைப்பது வழக்கம். இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல் மாணவர்களுக்கு உணவு சமைக்கும் பணியில் சமையலர்...
சோழக்கட்டு கிராமத்தில் திமுக நிர்வாகி படத்திறப்பு: சோழக்கட்டு கிராமத்தில்
மதுராந்தகம்: காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் லத்தூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் கே.எஸ்.இராமச்சந்திரன் படத்திறப்பு விழா காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினார். காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் லத்தூர் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் கே.எஸ்.ராமச்சந்திரன் (59). திமுக கட்சியில் 2002 முதல் ஒன்றியக் கழகச் செயலாளராகவும், தொடக்க வேளாண்மைக்...
ஐடி பெண் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை
போரூர்: கோயம்பேட்டில் ஐடி பெண் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவரது கணவர் ஆறுமுகம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களது மகன் தினேஷ்(27). சினிமாவில் உதவியாளராக வேலை செய்து வருகிறார். மகள் தீபிகா(23) அம்பத்தூர் பகுதியில் உள்ள ஐடி கம்பெனியில் வேலை செய்து வந்தார். இந்நிலையில்,...
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமிற்கு விண்ணப்பங்கள் வழங்கும் பணியினை கலெக்டர் ஆய்வு
காஞ்சிபுரம்: தமிழ்நாடு முதல்வர், இந்தாண்டு சட்டமன்ற பேரவையில் மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் பணிகள் துவக்கப்படும் என அறிவித்ததன்படி, ‘‘உங்களுடன் ஸ்டாலின்” என்கிற இத்திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற பகுதிகளில் 69 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 155 முகாம்களும் என மொத்தம் 224 முகாம்கள் நடத்தப்படவுள்ளது.இதில், முதற்கட்டமாக ஜூலை 15.7.2025 முதல் ஆகஸ்ட் 14.8.2025...
பராமரிப்பு பணிகள் காரணமாக கும்மிடிப்பூண்டி-தாம்பரம், செங்கை ரயில்கள் பகுதியாக இன்று ரத்து: தெற்கு ரயில்வே தகவல்
தாம்பரம்: பராமரிப்பு பணிகள் காரணமாக தாம்பரம் மற்றும் செங்கல்பட்டில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில்கள் பகுதியாக இன்று ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:சென்னை சென்ட்ரல் கூடூர் பிரிவில் கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி ரயில் நிலையங்களுக்கு இடையே நடைபெறும் பொறியியல் பணிகள் காரணமாக, இன்று மற்றும் நாளை மறுநாள்(10ம் தேதி)...
மாதிரியம்மன் கோயில் பால்குட ஊர்வலம்
உத்திரமேரூர்: உத்திரமேரூர் பேரூராட்சி, ஈசானி மூலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மாதிரியம்மன் கோயில் 43ம் ஆண்டு பால்குட ஊர்வலம் நேற்று நடந்தது. முன்னதாக, காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் மஞ்சலாடை அணிந்தவாறு சுந்தர வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்து வாணவேடிக்கை, மேளதாளங்கள் முழங்க பால்குடங்களுடன் பக்தர்கள் சன்னதி தெரு, பஜார் வீதி, கேதாரீஸ்வரர் கோயில்...
அண்ணா வழியில் திராவிட மாடல் ஆட்சி: திண்டுக்கல் லியோனி பேட்டி
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்து சிறுகாவேரிப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு பாடநூல் கழக மண்டல அலுவலகத்தில், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, அங்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட புத்தகங்கள் போக மீதமுள்ள புத்தகங்கள் நிலை, வருங்காலத்தில் தேவைப்படும் எண்ணிக்கை குறித்தும் வட்டார அலுவலரிடம் கேட்டறிந்தார்.பின்னர், திண்டுக்கல்...