ஐப்பசி செவ்வாய்கிழமை முன்னிட்டு ரத்தினாங்கி சேவையில் வல்லக்கோட்டை முருகன்
பெரும்புதூர், நவ.5: பெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் புகழ்பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. பழமையான இக்கோயிலில் ஒவ்வொரு செவ்வாய்கிழமையன்றும் கிருத்திகை, சஷ்டியன்றும் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெறுகின்றன. அந்த வகையில், ஐப்பசி மாத செவ்வாய்கிழமை முன்னிட்டு, நேற்று அதிகாலை 5 மணிக்கு கோயில் சந்நிதி திறக்கப்பட்டு கோ பூஜை செய்யப்பட்டது. பிறகு, சிறப்பு பூஜைகள்...
விவசாயிகள் சங்க திறப்பு விழா
மதுராந்தகம், நவ.5: தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு ஆலோசனைப்படி மதுராந்தகம் வட்டம், குன்னங்குளத்தூர், சூரை மற்றும் இந்திராபுரம் ஆகிய 3 கிராமங்களில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் கிளைகள் திறப்புவிழா மற்றும் உறுப்பினர் கார்டு வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் செங்கல்பட்டு மாவட்ட தலைவர்...
வேடந்தாங்கல் சரணாலயத்தில் பறவைகள் சீசன் துவக்கம்: 10 ஆயிரம் பறவைகள் குவிந்தன
மதுராந்தகம், நவ.1: வேடந்தாங்கல் சரணாலயத்தில் பறவைகள் சீசன் துவங்கிய நிலையில், சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் குவிந்துள்ளன. மதுராந்தகம் அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தில் புகழ்பெற்ற பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் இனப்பெருக்கத்திற்காக ஆஸ்திரேலியா, சைபீரியா, கனடா, இலங்கை, பர்மா, உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து 21 வகையான நத்தை கொத்தி...
ரூ.4.50 கோடி கொள்ளை வழக்கில் 5 பேர் கைது 123 சவரன் நகைகள் ரூ.13 லட்சம் பறிமுதல்: தலைமறைவான 12 பேருக்கு போலீசார் வலை
காஞ்சிபுரம், நவ.1: காஞ்சிபுரம் அருகே தனியார் கொரியர் நிறுவன டிரைவர்களை கடத்தி, கத்திமுனையில் மிரட்டி ரூ.4.50 கோடி கொள்ளையடித்த வழக்கில் கேரள மாநிலத்தை சேர்ந்த 5 பேர் கைதான நிலையில், அவர்களிடமிருந்து 123 பவுன் தங்க நகைகள், ரூ.13 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய 12 பேரை தேடி...
கவுன்சிலரை ஊருக்குள் வரவிடாமல் தடுத்த விவகாரம் செங்கல்பட்டு கலெக்டர், எஸ்பி பதில்தர வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை, நவ.1: கட்டப்பஞ்சாயத்து செய்து கவுன்சிலரை ஊரை விட்டு ஒதுக்கிய விவகாரம் தொடர்பாக செங்கல்பட்டு கலெக்டர், மாவட்ட எஸ்பி பதில் தருமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், இடைக்கழிநாடு பேரூராட்சியின் 6வது வார்டு கவுன்சிலரான வீரராகவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், எங்கள் பேரூராட்சி எல்லைக்குள் உள்ள பனையூர் பெரியகுப்பம்...
செங்கல்பட்டு கொளவாய் ஏரி நிரம்பியது
செங்கல்பட்டு, அக்.31: காஞ்சிபுரம் - செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மொத்தம் 909 ஏரிகள் உள்ளன. இதில் 75 சதவீத ஏரிகள் நிரம்பியுள்ளன. இதில் மிகப் பெரிய ஏரிகளில் ஒன்றான செங்கல்பட்டு கொளவாய் ஏரி 2210 ஏக்கர் பரப்பளவு கொண்டது. செங்கல்பட்டு சுற்றியுள்ள கிராமங்களுக்கு நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. கடந்த 50 ஆண்டுகளாக வற்றாத ஏரியாகவும்...
60 சதவீதம் தண்ணீர் தேக்கிவைப்பு ரூ.172 கோடி மதிப்பில் மதுராந்தகம் ஏரி சீரமைப்பு
மதுராந்தகம், அக்.31: செங்கல்பட்டு மாவட்டத்தின் மிகப் பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரியை தூர்வாரி சீரமைக்கும் பணிக்காக தமிழ்நாடு அரசு கடந்த 2021ம் ஆண்டு ரூ.120 கோடியை ஒதுக்கீடு செய்தது. இதனைத் தொடர்ந்து அந்தப் பணி தொடங்கப்பட்டு பொதுப்பணித்துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் ஏரியை அளவீடு செய்தல், முன் கரை அமைத்தல், பாசன மதகுகள் கட்டமைத்தல் உபரிநீர் போக்கி...
காட்டாங்கொளத்தூர் அருகே நெடுஞ்சாலையில் தீப்பற்றி எரிந்த கார்
செங்கல்பட்டு, அக்.31: திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்தவர் நிர்மல் குமார் (35). இவர் குடும்பத்துடன் அவரது உறவினர் வீட்டு வீசேஷத்திற்கு புதுச்சேரிக்கு காரில் சென்றார். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, காட்டாங்கொளத்தூர் சிவானந்தா குருகுலம் அருகில் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்றபோது காரின் முன்பக்கத்தில் இருந்து புகை வருவதை கண்ட நிர்மல்குமார் காரை நிறுத்தி குடும்பத்தினரை...
காஞ்சிபுரம் அருகே பரபரப்பு தனியார் நிறுவன டிரைவர்களை கடத்தி கத்தி முனையில் ரூ.4.50 கோடி கொள்ளை: கேரளாவை சேர்ந்த 5 பேர் கைது மேலும் 12 பேருக்கு வலை
காஞ்சிபுரம், அக்.30: காஞ்சிபுரம் அருகே தனியார் கொரியர் நிறுவன டிரைவர்களை கடத்தி, கத்தி முனையில் மிரட்டி ரூ.4.50 கோடி கொள்ளையடித்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த 5 பேரை கைது செய்த போலீசார், மேலும் 12 பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகே போர்வலி பகுதியைச்...