ஆட்டோ மோதி 1ம் வகுப்பு மாணவன் பலி
உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த சிறுங்கோழி கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மகன் ராகவன், அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 1ம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை பள்ளி முடித்து விட்டு தனது அண்ணன் சுரேந்தருடன் தங்களது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, வி.டி., மில் அருகே வந்தபோது பின்னால்...
பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1.25 கோடி மதிப்பு கஞ்சா அழிப்பு
தாம்பரம்: காவல் துறையால் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1.25 கோடி மதிப்பிலான 833.5 கிலோ கஞ்சா, தென்மேல்பாக்கம் எரியூட்டு மையத்தில் எரித்து அழிக்கப்பட்டது. தாம்பரம் மாநகர காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட கூடுவாஞ்சேரி, தாம்பரம், பள்ளிக்கரணை, மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலையங்களில், கடந்த மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை 55...
மாமல்லபுரத்தில் பலத்த கடல் சீற்றம்: படகுகளை பாதுகாப்பாக நிறுத்திய மீனவர்கள்
மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் நேற்று காலை கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால், பல மீட்டர் தூரம் கரைப்பகுதி வரை ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வந்தன. இந்த, ராட்சத அலையால் கடல் நீர் முன்னோக்கி வந்து கடற்கரையையொட்டி உள்ள ஓட்டல், ரெஸ்ட்டாரன்ட் மற்றும் ரிசார்ட்டுகள் வரை கடல் நீரால் சூழப்பட்டு குளம் போல் காட்சி அளித்தது. மாமல்லபுரம்...
தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் நடந்த மாநில அளவிலான போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு: கலெக்டர் வழங்கினார்
காஞ்சிபுரம், ஜூலை 22: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 439 மனுக்களை பெற்று, அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதன்படி, நேற்று நடைபெற்ற வாராந்திர மக்கள்...
குடும்ப தகராறில் மாமனாரை வெட்டிய மருமகன் கைது
சோழிங்கநல்லூர், ஜூலை 22: குடும்ப தகராறில் மாமனாரை வெட்டிய மருகமனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை ஓட்டேரி ஏகாம்பிபுரம் 4வது தெருவை சேர்ந்தவர் சண்முகம் (60). இவரது மனைவி கீதா. இவர்களது மகள் அம்சவேணி (38), மகன் விமல்குமார் (35). சண்முகம் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கீதா,...
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கார் தொழிற்சாலை தொழிலாளர்கள் உண்ணாவிரதம்
செங்கல்பட்டு, ஜூலை 22: செங்கல்பட்டு மாவட்டம், மகேந்திரா சிட்டியில் செயல்பட்டு வரும் பிஎம்டபிள்யூ கார் தொழிற்சாலையில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். இத்தொழிற்சாலையில் உயர்ரக கார்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. தொழிற்சாலையில் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஊதிய உயர்வு வழங்கப்படாமல் உள்ளது. இதுகுறித்து நிலுவையில் உள்ள ஊதிய...
பைக்கில் குட்கா கடத்திய வடமாநில வாலிபர்கள் கைது
உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த, பென்னலூர் கிராமம் அருகே நேற்று முன்தினம் இரவு பெருநகர் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை மடக்கி பிடித்து சோதனை செய்ததில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 5 கிலோ அளவு கொண்ட குட்கா பொருட்களை விற்பனைக்காக கொண்டு சென்றது தெரியவந்தது. இதனையடுத்து,...
டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் தொடங்கி நடக்கவுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்...
நெடுங்குன்றம் ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அடுத்த நெடுங்குன்றம் ஊராட்சியில், நெடுங்குன்றம், கொளப்பாக்கம், அண்ணா நகர், சதானந்தபுரம், ஆலப்பாக்கம், மப்பேடுபுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், தாம்பரம் வனச்சரகம் மற்றும் நெடுங்குன்றம் ஊராட்சி மன்றம் சார்பில் மக்களிடையே பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி சதானந்தபுரம்-நெடுங்குன்றம்...