ஈரோடு மத்திய பஸ் ஸ்டாண்டில் ஏர்ஹாரன் ஒலித்த 6 பஸ்களுக்கு அபராதம்
ஈரோடு, நவ. 7: ஈரோடு மத்திய பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு இடையூறாக ஏர்ஹாரனை ஒலிக்க செய்த 6 தனியார் பஸ்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். ஈரோடு பஸ் ஸ்டாண்டில் தினசரி 700-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. இதனால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் சில தனியார் பஸ்கள் பொதுமக்கள், வாகன ஓட்டிகளின் கவனத்தை...
திமுக இளைஞரணி சார்பில் முப்பெரும் விழா தமிழக முதலமைச்சருக்கு அழைப்பிதழ்
மொடக்குறிச்சி, நவ.6: திமுக இளைஞரணி சார்பில், முத்தமிழறிஞர் பதிப்பகம் வெளியிடும் ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ நூல் வெளியீடு. ‘இருவண்ண கொடிக்கு வயது 75 எனும் இருநாள் கருத்தரங்கம், அரசியல் புத்தகங்கள் மட்டுமே இடம்பெரும் ‘ முற்போக்கு புத்தகக் காட்சி’ ஆகிய முப்பெரும் நிகழ்வுகளுக்கான அழைப்பிதழை சென்னையில் திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக துணை முதலமைச்சருமான...
சாலையோரம் வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம்
ஈரோடு, நவ. 6: ஈரோடு மாநகராட்சி பகுதியில், உரிய அனுமதியின்றியும், சாலைகளை ஆக்கிரமித்தும் வைக்கப்பட்டுள்ள விளம்பர பிளக்ஸ் பேனர்களை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உரிய அனுமதியின்றியும், சாலைகளை ஆக்கிரமித்தும் வைக்கப்பட்டுள்ள விளம்பர பிளக்ஸ் பேனர்களை அகற்ற, ஆணையர் அர்பித் ஜெயின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி, மாநகரத்தின் முக்கிய சாலைகளில் மாநகராட்சி...
மது விற்ற 2 பேர் கைது
ஈரோடு, நவ. 6: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் குய்யனூர் டாஸ்மாக் கடை அருகே சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதன்பேரில், சத்தியமங்கலம் போலீசார் நேற்று முன்தினம் அங்கு விரைந்து சென்று, டாஸ்மாக் கடை மூடிய நேரத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்த புது குய்யனூர்...
கேரளா லாட்டரி விற்றவர் கைது
ஈரோடு, நவ. 5: ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ஈரோடு சாலையில் கவுந்தப்பாடி போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, அப்பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுக்களை சட்ட விரோதமாக விற்பனை செய்து வந்த கவுந்தப்பாடி குருமூர்த்தி காலனியை சேர்ந்த சதீஷ் என்ற கண்ணன் (38) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து...
பஸ் படிக்கட்டில் பயணம் தொழிலாளி தவறி விழுந்து பலி
ஈரோடு, நவ. 5: ஈரோடு கதிரம்பட்டியை சேர்ந்தவர் நடராஜ் (65), கூலித்தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் பெருந்துறையில் இருந்து ஈரோடு செல்லும் அரசு டவுன் பஸ் படிக்கட்டில் நின்று பயணித்துள்ளார். வண்ணங்காட்டு வலசு பகுதி அருகே வந்தபோது திடீரென நடராஜ் பஸ்சில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த நடராஜ், சம்பவ இடத்திலேயே...
அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ஈரோடு, நவ. 5: ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ராதாமணி தலைமை வகித்தார். இதில், அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்களை அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணி ஓய்வின்போது அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம், உதவியாளர்களுக்கு ரூ.5...
சென்னிமலையில் நாய் கடித்து ஆடு பலி
ஈரோடு, நவ. 1: ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே முருங்கத்தொழுவு கிராமம் பனங்காடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவர், 9 ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு சென்றார். மறுநாளான நேற்று காலை வந்துபார்த்தபோது, ஒரு ஆடு இறந்து கிடந்தது. மற்ற ஆடுகள் அங்கொன்றும், இங்கொன்றுமாக மிரண்டுபோய் நின்றுகொண்டு இருந்தது....
மீன் வளம் பாதுகாக்க 4 லட்சம் மீன் குஞ்சுகள்
பவானி, நவ. 1: நாட்டின் மீன் வளங்களை பாதுகாத்து பெருக்கும் வகையில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் பவானி, காவிரி ஆறுகளில் தலா 2 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன. பவானி ஆற்றில் ஆப்பக்கூடல்- கவுந்தப்பாடி பாலம் பகுதியில் 2 லட்சம் மீன் குஞ்சுகள், காவிரி ஆற்றில் கூடுதுறை படித்துறையில் 2 லட்சம் மீன்...