மது, குட்கா, கஞ்சா விற்ற 6 பேர் கைது
ஈரோடு, ஜூலை 17: பவானி அடுத்த மைலம்பாடி பகுதியில், கோபி மதுவிலக்கு போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் சட்ட விரோதமாக மது விற்றுக்கொண்டிருந்த, லட்சுமி நகரைச் சேர்ந்த அம்மாசை (32) என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 26 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். புளியம்பட்டி பஸ் ஸ்டாண்ட் பகுதியில்...
தெருநாய்கள் கடித்து ஆடு பலி
கோபி, ஜூலை 16: கோபி அருகே உள்ள நம்பியூரில் நாய்கள் கடித்து ஒரு ஆடு உயிரிழந்த நிலையில், நான்கு ஆடுகள் உயிருக்கு போராடி வருகிறது. கோபி அருகே உள்ள நம்பியூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக தெருநாய்கள் கடித்து 20க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்து உள்ளன. நம்பியூர் அருகே உள்ள மின்னகாட்டுபாளையத்தில்...
கோயில் வளாகத்தில் பூக்கடைகள் அகற்றம்
ஈரோடு, ஜூலை 16: ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோயில் முன், மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் இருந்த பிளக்ஸ் பேனர்களை, மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர், கஸ்தூரி அரங்கநாதன் கோயில் வளாகத்தில், 13 பூக்கடைகள் இருந்தன. இந்நிலையில், ஈரோட்டைச் சேர்ந்த பார்த்தசாரதி என்பவர், நேற்று முன்தினம் இரவு ஆருத்ர கபாலீஸ்வரர்...
ரயில் டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
ஈரோடு, ஜூலை 16: ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் அகில இந்திய ரயில்வே தொழிலாளர்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்க கிளை செயலாளர் பிரோஸ் ரஹ்மான் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். இதில், பழைய ஓய்வூதியத்தை நடைமுறைப்படுத்தி, புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும். பணி நேரத்தில் மட்டுமே பணி...
பெருந்துறை போலீஸ் டிஎஸ்பி டிரான்ஸ்பர்
ஈரோடு, ஜூலை 15: தமிழகம் முழுவதும் 39 போலீஸ் டிஎஸ்பி.க்களை பணியிடம் மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இதில், ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை போலீஸ் சப் டிவிசன் டிஎஸ்பி.யாக பணியாற்றி வந்த ஆர்.கோகுலகிருஷ்ணன், கோவை சிட்டி காட்டூர் ரேஞ்சில் டிஎஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து திருப்பூர் கொங்குநகர் ரேஞ்சில் டிஎஸ்பி.யாக...
பவானிசாகர் அருகே கங்காதீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா
சத்தியமங்கலம், ஜூலை 15: பவானிசாகர் அருகே உள்ள இக்கரை தத்தப்பள்ளி துண்டன்சாலை கிராமத்தில் கங்காதீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. முன்னதாக நேற்று முன்தினம் மகா கணபதி யாகபூஜையுடன் விழா தொடங்கியது. இதைத்தொடர்ந்து வருண பூஜை, மகாலட்சுமி பூஜை, நவகிரக சாந்தி மற்றும் சகல தேவதை யாகத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று...
பவானியில் லாட்டரி விற்றவர் கைது
பவானி, ஜூலை 15: பவானி நகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். பவானி, தேவபுரம் பகுதியில் ரோந்து சென்றபோது லட்சுமணன் மகன் சண்முகசுந்தரம் (65), வெள்ளை நிற துண்டு சீட்டுகளில் எண்களை எழுதி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, சண்முகசுந்தரத்தை கைது...
ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டாஸ்
ஈரோடு, ஜூலை 14: ஈரோடு மாவட்டம், கோபி, கலிங்கியம், கோட்டுபுள்ளாம்பாளையம் பகுதியில் ரேஷன் அரிசியை விற்பனைக்காக கார் மற்றும் வேனில் கடத்தி வந்த கோபி, ராம்நகரை சேர்ந்த அப்துல்லா (45), அதேபகுதி பகுதியை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் (39), கோவை பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த அபி (எ) அபிலாஷ் (35) ஆகியோரை கடந்த ஜூன் 23ம் தேதி,...
சென்னை அருகே சரக்கு ரயில் விபத்து ஈரோடு வழியாக செல்லும் 6 ரயில்கள் ரத்து
ஈரோடு, ஜூலை 14: சென்னை தண்டையார்பேட்டையில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி சென்ற சரக்கு ரயில், திருவள்ளூர் பகுதியில் சென்றபோது தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக சென்னையில் இருந்து ஈரோடு வழியாக செல்லும் 6 ரயில்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. அதன்படி, சென்னை-கோவை எக்ஸ்பிரஸ் (வண்டிஎண்-12675), கோவை - சென்னை எக்ஸ்பிரஸ் (வண்டி எண்-12676), சென்னை-கோவை...