வாய்க்காலில் மூழ்கி முதியவர் பலி
ஈரோடு, அக். 18: ஈரோடு பெருந்துறை வாய்க்கால் மேடு புங்கம்பாடி பகுதியில் ஓடும் கீழ்பவானி வாய்க்காலில் நேற்று முன்தினம் முதியவர் ஒருவர் இறந்த நிலையில் சடலமாக மிதந்து கொண்டிருப்பதாக தகவல் வந்தது. அதன்பேரில், பெருந்துறை போலீசார், வேப்பம்பாளையம் விஏஓ அன்பழகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று, இறந்த நபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில்,...
பட்டாசு கடைகளில் வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு
ஈரோடு, அக். 18: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஈரோடு நகரில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு தாலுகா பகுதிகளில் மட்டும் 80 தற்காலிக பட்டாசு கடைகள் உள்ளன. இந்த கடைகளில் அரசு விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகின்றனவா? போதிய இடைவெளிகள் உள்ளனவா? பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா? என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி, ஈரோடு...
கள்ளக்காதலை கணவர் கண்டித்தால் 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்
ஈரோடு, அக்.17: ஈரோடு கருங்கல்பாளையத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி தீபா (25). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தீபாவிற்கு, சின்னு என்பவருடன் கள்ளக்காதல் இருப்பதாக தெரிகிறது. இதனால், தீபாவை பழனிசாமி கண்டித்துள்ளார். இந்நிலையில், கடந்த 12ம் தேதி, தனது இரு குழந்தைகளுடன் கடைக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற தீபா, பின்னர்...
தொடர் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர் குண்டாசில் சிறையில் அடைப்பு
ஈரோடு, அக். 17: புளியம்பட்டியில் தொடர் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி நேரு நகரை சேர்ந்தவர் ரோகித் என்ற கண்ணாடி ரோகித் (22). இவர், மீது திருட்டு, கொள்ளை, அடிதடி உட்பட 15 குற்ற வழக்குகள் பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் நிலுவையில் உள்ளன. கடந்த...
பவானி நகராட்சி ஊழியர்களுக்கு தீபாவளி பரிசுகள்
பவானி, அக். 17: பவானி நகர்மன்ற கூட்டம் தலைவர் சிந்தூரி இளங்கோவன் தலைமையில் கூட்டரங்கில் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் பிரான்சிஸ் சேவியர், துணைத் தலைவர் மணி, பொறியாளர் திலீபன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், பல்வேறு அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றுதல் தொடர்பான விவாதங்கள் நடத்தப்பட்டு, அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து, ரத்த தானம் உள்ளிட்ட பல்வேறு சமூக...
ஆசனூரில் தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு
சத்தியமங்கலம், அக்.16: வடகிழக்கு பருவமழை துவங்குவதால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று ஆசனூர் மலைப்பகுதியில் உள்ள திம்பம் பஸ் ஸ்டாப்பில் தீயணைப்புத் துறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு செயல்...
பிஎஸ்என்எல் தீபாவளி சலுகை பிரிபெய்டு ரூ.1-க்கு ரீசார்ஜ் திட்டம்
ஈரோடு, அக். 16: பிஎஸ்என்எல் நிறுவனத்தில் தீபாவளி சிறப்பு சலுகையாக பிரிபெய்டு சிம்மிற்கு ரூ.1க்கு ரீசார்ஜ் செய்தால் வரம்பில்லா அழைப்புகள் பெறலாம். இதுகுறித்து ஈரோடு மாவட்ட பிஎஸ்என்எல் பொது மேலாளர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியதாவது: பிஎஸ்என்எல் சிறப்பு தீபாவளி பிரிபெய்டு மொபைல் ரீசார்ஜ் திட்டமாக, 1 ரூபாய் செலுத்தி வரம்பில்லா அழைப்புகள், தினமும், 2 ஜிபி,...
ஈரோடு பிஎப் அலுவலக அதிகாரியாக மண்டல ஆணையர் பொறுப்பேற்பு
ஈரோடு,அக்.16: ஈரோடு மாவட்ட வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் பொறுப்பு அதிகாரியாக மண்டல ஆணையர் கே.வி.சுதர்சன் ராவ் நியமிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து சுதர்சன் ராவ் ஈரோடு மாவட்ட வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் அதிகாரியாக பொறுப்பேற்று கொண்டார். இவர், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் சமூக பாதுகாப்பு சேவை மற்றும் சமூக பாதுகாப்பு திட்டத்தில் சென்னை...
சுமை தூக்கும் தொழிலாளி பலி
ஈரோடு, அக். 14: ஈரோடு பி.பெ.அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் முபாரக் அலி(48). சுமை தூக்கும் தொழிலாளரான அவர், கடந்த 7ம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் கொடுமுடி சென்றுள்ளார். அப்போது, வேகத்தடையில் தடுமாறி கீழேவிழுந்த முபாரக்அலி படுகாயம் அடைந்தார். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர், கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில்...