அங்கக சாகுபடியாளர் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்
ஈரோடு, அக். 30: ஈரோடு மாவட்டம், கோபியில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் அங்கக சாகுபடியாளர் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் துவக்க விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு வேளாண் அறிவியல் நிலையத்தின் தலைவரும், முதுநிலை விஞ்ஞானியுமான அழகேசன் தலைமை தாங்கி, தொடங்கி வைத்து, பயிற்சியின் முக்கியத்துவம் மற்றும்...
ரயில் மோதி படுகாயம் அடைந்த மூதாட்டி பலி
ஈரோடு, அக். 30: ஈரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கும், தொட்டிபாளையம் ரயில்வே ஸ்டேஷனுக்கும் இடைப்பட்ட ரங்கம்பாளையம் பகுதியில் நேற்று முன்தினம் 60 வயது மதிக்கதக்க மூதாட்டி ஒருவர் தலை, கை, கால்களில் பலத்த ரத்த காயங்களுடன் கிடப்பதாக தகவல் வந்தது. அதன்பேரில், ஈரோடு ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மூதாட்டியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம்...
சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணி 22 வட்டார கல்வி அலுவலர்கள் நியமனம்
ஈரோடு, அக். 30: ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற உள்ள சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணியில் 22 வட்டார கல்வி அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். தமிழகத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணி வருகிற நவம்பர் மாதம் 4ம் தேதி தொடங்கி, டிசம்பர் மாதம் 4ம் தேதி வரை நடைபெற...
செவ்வாழை விலை குறைந்தது
கோபி, அக். 29: கோபி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் செவ்வாழை விலை கணிசமாக குறைந்தது. வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற வாழைத்தார் ஏலத்தில் செவ்வாழை தார் ஒன்று ரூ.190 முதல் 810 வரை விலை போனது. தேன்வாழை தார் ரூ.160 முதல் 500 வரையிலும், பூவன் ரக வாழை...
குளிர்கால ஆடைகள் வரத்து தொடங்கியது
ஈரோடு, அக். 29: தற்போது மழை காலம் தொடங்கியுள்ளதால், குளிர் அதிகரித்துள்ளது. அதனை கணக்கில் கொண்டு ஈரோட்டில் குளிர்கால ஆடைகளான ஸ்வெட்டர், கம்பளி மற்றும் குளிரைத் தாங்கும் பெட்ஷீட் ரகங்கள் விற்பனைக்கு வரத்தொடங்கியுள்ளன. அதேபோல, அடுத்தமாதம் அய்யப்ப சீசன் தொடங்கவுள்ள நிலையில், காவி, கருப்பு ரக வேட்டிகள், துண்டுகள் மற்றும் பக்தர்கள் மாலை போடுவதற்காக...
லக்காபுரம் செண்பக மலையில் குமார சுப்பிரமணியர், வள்ளி- தெய்வானை திருக்கல்யாணம்
மொடக்குறிச்சி, அக். 29: பிரசித்தி பெற்ற செண்பகமலை குமாரசுப்பிரமணியர் கோயிலில் நடைபெற்ற குமாரசுப்பிரமணியர் வள்ளி தெய்வானை, திருக்கல்யாண வைபோக நிகழ்ச்சியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மொடக்குறிச்சி அருகே உள்ள லக்காபுரத்தில் பிரசித்திபெற்ற செண்பகமலை திருகுமார சுப்பிரமணியர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கந்தசஷ்டி விழாவானது, கடந்த 22-ம்...
மாநகராட்சியில் வார்டு சிறப்புக்கூட்டம்: மக்களின் குறைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்
ஈரோடு, அக். 28: பொதுமக்களின் குறைகளுக்கு உடடினயாக தீர்வுகாண வேண்டும் என ஈரோடு மாநகராட்சியில் நடந்த வார்டு சிறப்பு கூட்டத்தில் அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். ஈரோடு மாநகராட்சி 50வது வார்டுக்கு உட்பட்ட ஸ்டெம் பார்கில் வார்டு சிறப்புக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மேயரும் 50வது வார்டு கவுன்சிலருமான நாகரத்தினம் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், வீட்டுவசதி,...
பருவநிலை மாற்றத்தால் சளி, காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு
ஈரோடு, அக். 28: பருவநிலை மாற்றம் காரணமாக, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருமல், சளி, காய்ச்சல், உடல் வலியால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அதிகளவில் வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்தது. இதனால் ஏற்பட்ட பருவநிலை மாற்றம் காரணமாக, மாவட்டத்தில் குழந்தைகள்...
அந்தியூர் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கல்
அந்தியூர், அக். 28: அந்தியூர் வட்டார அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று துவங்கியது. கண்களில் உள்ள விழித்திரை நிறமிகளை உற்பத்தி செய்து குறைவான வெளிச்சத்தில் பார்க்கவும், வண்ணங்களை காணவும், உடலில் நோய்...