கஞ்சா கடத்திய 2 பேர் கைது
ஈரோடு, ஆக. 6: விஜயவாடாவில் இருந்து ஈரோட்டிற்கு ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்ய முயன்ற, கேரளாவைச் சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்து, 4.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். சமீப காலமாக, ஈரோடு வழியாக செல்லும் ரயில் மூலம் கஞ்சா கடத்தல் என்பது அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்த...
போலீஸ்காரர் படுகாயம்
ஈரோடு, ஆக. 6: ஈரோடு ஆணைக்கல்பாளையம் ஆயுதப்படை போலீசாக இருப்பவர் அருள்மணி (32). சேலம் மாவட்டத்தை சேர்ந்த இவர், ஆயுதப்படை வளாகத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்தார். நேற்று மாலை 6.30 மணி அளவில் ஆணைக்கல்பாளையம் நால்ரோட்டில் டீ குடிக்க தனது பைக்கில் சென்றார். ஆயுதப்படை வளாகத்தில் இருந்து சிறிது தூரம் சென்றபோது சாலையின் குறுக்கே...
மானியத்தில் வேளாண் கருவிகள் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
ஈரோடு, ஆக. 5: வேளாண் கருவிகளை 50 சதவீத மானியத்தில் பெற விவசாயிகள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தீவன விரயத்தைக் குறைப்பதற்காகவும், கால்நடைகளின் செரிமானத் தன்மையை அதிகரிக்கவும், உற்பத்தி திறனை பெருக்கவும், ஈரோடு மாவட்டத்தில் 200 சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.32 ஆயிரம் மதிப்புள்ள மின்சாரம் மூலம் இயங்கும் புல் நறுக்கும் கருவிகள் 50...
திண்டல் வேலாயுதசுவாமி கோயிலில் அமைச்சர் சு.முத்துசாமி ஆய்வு
ஈரோடு, ஆக. 5: ஈரோடு திண்டல் வேலாயுதசுவாமி கோயிலில் நடக்கும் திருப்பணிகளை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஈரோடு மாநகராட்சி திண்டல் வேலாயுதசாமி கோயிலில் இந்து சமய அறநிலைய துறை சார்பில் ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் புதிதாக 5 நிலை ராஜகோபுரத்துடன், மலைக்கு செல்லும் படிகட்டுகள் கட்டும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த...
மகன் பிரிந்து சென்றதால் தாய் தூக்கில் தற்கொலை
கோபி, ஆக. 5: கோபி அருகே உள்ள நஞ்சகவுண்டன்பாளையம் ராமநாதன் நகரை சேர்ந்தவர் குமார் மனைவி கோகிலா (53). கூலித்தொழிலாளி. குமார், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். இந்நிலையில் கோகிலாவின் மகன்மணிகண்டன்(19), கடந்த நான்கு மாதங்களுக்கு முன் தாயை பிரிந்து சேலம் அருகே நாக்கியம்பட்டியில் உள்ள தந்தையின் உறவினர்களுடன் சேர்ந்து...
பவானி ஆற்றில் வெள்ள அபாயம்; கொடிவேரி அணை மூடப்பட்டது
கோபி, ஆக. 4: கோபி அருகே உள்ள கொடிவேரி அணை மூடப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். கோபி அருகே உள்ள கொடிவேரி அணையானது பவானி ஆற்றின் குறுக்கே சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட அணையாகும். இங்கு ஒவ்வொரு அரசு விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் வருவது...
ஜவுளி கடையில் ரூ.32 ஆயிரம் கொள்ளை
ஈரோடு, ஆக. 4: ஈரோடு, நாடார் மேடு, விநாயகர் கோயில் வீதியை சேர்ந்தவர் சக்திவேல். இவர் ஈரோடு காந்திஜி ரோட்டில் ஜவுளி கடை நடத்தி வருகிறார். இரண்டு ஜவுளி கடை அடுத்தடுத்து உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வியாபாரம் முடிந்ததும் ஊழியர்கள் ஜவுளி கடையை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். நேற்று காலை ஜவுளிக்கடை...
பண்ணாரி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை; பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்
சத்தியமங்கலம், ஆக. 4: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். நேற்று ஆடி பெருக்கை முன்னிட்டு...
தனித்துவமான இனிப்புகளுக்கு... தஞ்சை ஸ்நாக்ஸ் அண்ட் ஸ்வீட்ஸ்
தஞ்சை ஸ்நாக்ஸ் அண்ட் ஸ்வீட்ஸ் கடை கடந்த 17 வருடங்களாக ஈரோடு, அகில் மேடு வீதி, கல்யாண் சில்க்ஸ் பின்புறம் செயல்பட்டு ஈரோடு மக்களின் இதயங்களில் நீங்கா இடம்பெற்றுள்ளது. இதன் 2வது புதிய கிளை ஈரோடு, சத்தி ரோடு, வீரப்பன்சத்திரத்தில் வெங்கட் தஞ்சை ஸ்நாக்ஸ் அண்ட் ஸ்வீட்ஸ் என்ற பெயரில் சமீபத்தில் திறக்கப்பட்டு சிறப்பாக...