தாளவாடி மலை பகுதியில் அரசு பள்ளி வளாகத்தில் நுழைந்த காட்டு யானை
சத்தியமங்கலம், ஆக.3: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் நடமாடும் காட்டு யானைகள் இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் நுழையும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தாளவாடி மலைப் பகுதி சிக்கஹள்ளி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு காட்டு யானை நேற்று அதிகாலை சிக்கஹள்ளி கிராமத்திற்குள் நுழைந்தது. இது குறித்த தகவல்...
ஈரோட்டில் திடீர் மழை
ஈரோடு, ஆக 2: ஈரோடு நகரில் நேற்று மாலை பெய்த திடீர் மழையால் வெப்பம் தணிந்தது. வங்கக்கடலில் ஏற்பட்ட கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக கடந்த வாரங்களில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு வெப்பம் நிலவும் என வானிலை ஆய்வு மையம் நேற்று முன்தினம்...
ஆடி 3வது வெள்ளி அம்மன் கோயில்களில் பக்தர்கள் குவிந்தனர்
ஈரோடு, ஆக.2: ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். அந்த மாதத்தில் வரும் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் சிறப்பு பூஜைகள் நடக்கும். அதன்படி, நேற்று ஆடி மாதம் 3வது வெள்ளிக்கிழமை என்பதால் ஈரோடு பெரிய மாரியம்மன் கோயிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு பால், தயிர், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு...
வெள்ளோட்டில் நாளை குணாளன் நினைவேந்தல் நிகழ்ச்சி
ஈரோடு, ஆக. 2: வெள்ளோட்டில் சுதந்திர போராட்ட வீரர் குணாளன் 220வது நினைவேந்தல் நிகழ்ச்சி நாளை (3ம் தேதி) நடைபெற உள்ளது. இதுகுறித்து நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவன தலைவர் பொன்.விஸ்வநாதன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, சுதந்திர போராட்ட வீரரான குணாளன், தீரன் சின்னமலையோடு இணைந்து ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடினார். கடந்த 1805ம்...
புகார் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை: ஆணையர் உத்தரவு
ஈரோடு, ஆக.1: ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளுடனான கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. மாநகராட்சி ஆணையர் அர்பித் ஜெயின் தலைமை வகித்தார். துணை ஆணையர் தனலட்சுமி, மாநகர நல அலுவலர் கார்த்திகேயன், தலைமை பொறியாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் கலந்துக்கொண்டனர். அப்போது, மாநகராட்சியில் நடைபெற்று...
கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்
ஈரோடு, ஆக. 1: ஈரோடு மாநகராட்சியில் கொசு உற்பத்தியை தடுக்க மருந்து அடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மிதமான மழை பெய்தது. இதனால் கொசு ஒழிப்பு பணியாளர்கள், வீடு வீடாக சென்று கொசு மருந்து அடித்தும், மருந்துகளை தண்ணீர் தேங்கும் பகுதிகளில் ஊற்றியும் வருகின்றனர். தேவையில்லாத...
ஆக.3ல் தீரன் சின்னமலை அரசு விழா: 630 போலீஸ் பாதுகாப்பு
ஈரோடு, ஆக.1: அறச்சலூர் ஓடாநிலையில் நடக்கும் தீரன் சின்னமலை அரசு விழாவில் 630 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாள், நாளைய மறுதினம் (3ம் தேதி) அரசு விழாவாக கொண்டாடப்பட உள்ளது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் கந்தசாமி தலைமையில் அமைச்சர்கள்,...
மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ வழக்கு
ஈரோடு, ஜூலை 31: பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போலீசார் போக்சோ வழக்கு பதிந்து தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் டி.என்.பாளையத்தை சேர்ந்த சந்திரன் மகன் ராம் (23). தொழிலாளி. இவர் கோபியை சேர்ந்த பிளஸ் 2 படிக்கும் 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தின் மூலம்...
பு.புளியம்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை: பட்டப்பகலில் துணிகரம்
சத்தியமங்கலம், ஜூலை 31: புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள செல்லம்பாளையம் தளபதி நகரரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (51). நேற்று காலை ஆறுமுகத்தின் மனைவி கவிதா வழக்கம்போல் அப்பகுதியில் உள்ள விவசாய தோட்டத்திற்கு பூப்பறிக்கும் பணிக்கு சென்று விட்டார். காலை 9 மணிக்கு ஆறுமுகம் வீட்டை பூட்டிவிட்டு மனைவியிடம் வீட்டின் சாவியை கொடுத்துவிட்டு நம்பியூருக்கு வேலைக்கு...