மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 230 மனுக்கள்
ஈரோடு, டிச. 2: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் ச.கந்தசாமி தலைமை வகித்தார். இதில், முதியோர், விதவை, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட உதவித் தொகைகள் கேட்டும், வீட்டுமனை பட்டா, கல்விக்கடன், அடிப்படை வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் 230 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து வரப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர்...
ஆரம்ப சுகாதார நிலையங்கள் அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் ரேபிஸ் தடுப்பூசி
ஈரோடு, டிச. 2: ரேபிஸ் நோய் என்பது வைரஸ் தாக்குதல். இது, மனித நரம்பு மண்டலத்தை பாதிக்கும் ஓர் உயிர் கொல்லி நோயாகும். ரேபிஸ் பாதிக்கப்பட்ட மிருகங்கள் கடிப்பதன் மூலமாகவோ, அவற்றின் எச்சில் வழியாகவோ மனிதர்களுக்கும் மற்ற மிருகங்களுக்கும் ரேபிஸ் நோய் பரவுகிறது. இந்தியாவில் பெரும்பாலும் நாய்களின் மூலமாகவே மனிதர்களுக்கு இந்த நோய் பரவுகிறது....
சந்தன மரங்களை வெட்டி கடத்தும் கும்பல்
சத்தியமங்கலம், டிச.2: சத்தியமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள சந்தன மரங்களை இரவு நேரங்களில் வெட்டி கடத்தும் கும்பலால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சத்தியமங்கலம் அருகே இக்கரை நெகமம் புதூர் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள சந்தன மரங்கள் வளர்ந்துள்ளன. கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் சந்தன மரங்களை மர்ம நபர்கள் வெட்டி...
பழனி முருகன் கோயிலுக்கு ரூ.39 லட்சம் நாட்டு சர்க்கரை கொள்முதல்
ஈரோடு,டிச.1: பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு ரூ. 39 லட்சம் மதிப்பிலான நாட்டுச் சர்க்கரை நேற்று முன் தினம் கொள்முதல் செய்யப்பட்டது. பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பிரசாதங்கள் தயாரிக்க ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருந்து கரும்புச் சர்க்கரை எனப்படும் நாட்டுச் சர்க்கரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி,...
கொடுமுடி காவிரி ஆற்றில் மீன் பிடித்த வாலிபர் மூழ்கி பலி
கொடுமுடி, டிச.1: ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ளது வெங்கம்பூர். இங்குள்ள வடக்குபுதுப்பாளையம் தண்ணீர்பந்தலைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சம்பத் (30). இவரது நண்பர் பூவேந்திரன் (41). இவர்கள் 2 பேரும் நேற்று பைக்கில் காசிபாளையம் காவிரி ஆற்றுப் படித்துறைக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது மதுபோதையில் ஆற்றில் இறங்கிய சம்பத் நீரில் மூழ்கினார். தகவல் அறிந்து சம்பவ...
ஈரோட்டில் வெல்லட்டும் சமூகநீதி மாநாடு
ஈரோடு, டிச.1: புதிய திராவிட கழகம் சார்பில் வெல்லட்டும் சமூக நீதி 6வது மாநில மாநாடு, எழுமாத்தூரில் நேற்று நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு, அக்கழகத்தின் நிறுவன தலைவர் ராஜ்கவுண்டர் தலைமை வகித்தார். இதில்,வேட்டுவக்கவுண்டரின் உட்பிரிவுகளான வேட்டைக்காரர்,வேட்டைக்கார்கவுண் பூலுவர், பூலுவக்கவுண்டர், புன்னம் வேட்டுவக்கவுண்டர், வேட்டைக்கார நாயக்கர்,வேட்டுவர். வில்வேடுவர். மலைவாழ் வேட்டுவர், வால்மீகி, வலையர் ஆகிய பெயர்கள் தமிழகத்தில் ஆகிய...
மாற்று கட்சியினர் திமுகவில் இணைந்தனர்
ஈரோடு, நவ. 29: ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில், பெருந்துறை சட்டமன்ற தொகுதி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சரும், திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளருமான தோப்பு வெங்கடாச்சலம் முன்னிலையில் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர்....
தோனிமடுவு பள்ளத்தின் குறுக்கே தடுப்பணை, நிபந்தனை பட்டா நீக்கம்
அந்தியூர், நவ.29: பர்கூர் மலைப்பகுதியில் பெய்யும் மழைநீர் காட்டாற்று வெள்ளமாக ஓடும் தோனிமடுவு பள்ளத்தில் தடுப்பணை கட்டி, அந்தியூர் தொகுதியில் உள்ள ஏரிகள், குளங்களில் நிரப்ப வேண்டும் என விவசாயிகள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும், அந்தியூர் தொகுதியில் நீண்ட காலமாக நிபந்தனையுடன் உள்ள நிலங்களுக்கு நிபந்தனை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்...
மது விற்றவர் கைது
ஈரோடு, நவ. 29: ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி போலீசார் தங்களது காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பொம்மன்பட்டி வாய்க்கால் ரோடு அருகே உள்ள டாஸ்மாக் கடை அருகில் ஒரு நபர், அரசு மதுபானத்தை சட்ட விரோதமாக பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. விசாரணையில்...