சிபில் ஸ்கோர் முறையை ரத்து செய்யக் கோரி நெற்கதிர், கரும்புகளுடன் ரயில் மறியலுக்கு முயன்ற கொ.ம.தே.க.வினர்
ஈரோடு,ஜூலை28: தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் சிபில் ஸ்கோர் முறையை ரத்து செய்யக் கோரி, ஈரோட்டில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் நெற்கதிர்,கரும்புகளுடன் ரயில் மறியலுக்கு முயன்றனர். தமிழ்நாட்டில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பயிர்கடன் பெறுவதில் இருக்கும் சிபில் ஸ்கோர், என்.ஓ.சி குளறுபடிகளை ஒன்றிய, மாநில அரசு சரி செய்ய வலியுறுத்தியும்,...
ரூ.19.89 கோடி செலவில் பவானிசாகர் அணை புனரமைப்பு, மேம்பாட்டு பணிகள் தீவிரம்
சத்தியமங்கலம்,ஜூலை 26: பவானிசாகர் அணையில் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை, இந்தியா சுதந்திரம் பெற்ற பின் முதலாம் ஐந்தாண்டு திட்டத்தில் கட்டப்பட்டதாகும்.1948ம் ஆண்டு கட்டுமான பணி தொடங்கி, 1955ம் ஆண்டு பணிகள் முடிந்து நாட்டுக்கு அர்பணிக்கப்பட்டது.ரூ.10.50 கோடி செலவில் கட்டப்பட்ட...
பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயிலில் ஆன்மிக பயணம் நிறைவு
கோபி, ஜூலை 26: ஈரோடு மாவட்டத்தில் ஆன்மிக பயணம் மேற்கொண்டவர்கள் பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயிலில் பயணத்தை நிறைவு செய்தனர்.ஆடி வெள்ளியை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் புகழ்பெற்ற பெற்ற 5 அம்மன் கோயில்களில் 60 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் ஒரே நாளில் தரிசனம் செய்ய இந்து சமய அறநிலையத்துறை ஏற்பாடு செய்திருந்தது. ஈரோட்டில் பெரிய மாரியம்மன்...
பெருந்துறையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்
ஈரோடு, ஜூலை 26: ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஒன்றியத்திற்கு உட்பட்ட திருவாச்சி ஊராட்சியில் வாவிக்கடை பைபாஸ் சாலையில் உள்ள மண்டபத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமில், முன்னாள் அமைச்சரும், ஈரோடு மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளருமான தோப்பு வெங்கடாச்சலம் பங்கேற்று, முகாமில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் உடனடியாக கணினியில் பதிவேற்றம்...
வலிப்பால் பள்ளி மாணவி உயிரிழப்பு
அந்தியூர், ஜூலை 25: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பிகே புதூர் புரவிபாளையம் கிழக்குத் தெருவை சேர்ந்த முருகேசன் மகள் சுகன்யா (15). இவர், குரும்பபாளையம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த. இவர், நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்ல பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தார். அப்போது,...
ஈரோட்டில் மருந்தாளுநர்கள் ஆர்ப்பாட்டம்
ஈரோடு, ஜூலை 25: ஈரோடு அடுத்த திண்டலில் உள்ள மாவட்ட சுகதார அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் சண்முகம் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில், மாநில பிரதிநிதித்துவ பேரவையின்...
காவிரி ஆற்றங்கரையில் ஆடி அமாவாசை வழிபாடு
ஈரோடு,ஜூலை25: ஆடி மாதம் அம்மன் கோயில்களில் வழிபாடு என்பது சிறப்பு வாய்ந்ததாகும். அந்த வகையில் ஆடி அமாவாசை நாளும் பக்தர்களின் வழிபாட்டுக்கும், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கும் மிகவும் முக்கியமான நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் நீர் நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது பித்ரு தோஷங்களை போக்குவதற்கும், அவர்களது ஆசியை பெறுவதற்கும் உகந்த நாள் என்பது...
லிப்ட்டில் சிக்கிய 3 பேர் பத்திரமாக மீட்பு
ஈரோடு, ஜூலை 24: ஈரோடு அரசு மருத்துவமனையில் பல்நோக்கு மருத்துவபிரிவு உள்ளது. இங்குள்ள லிப்ட்டில் குமாரபாளையத்தை சேர்ந்த பழனியம்மாள் (49), பொன்னுசாமி (59), பவானி, மாயபுரத்தை சேர்ந்த கோபி (28), ஆகியோர் நேற்று முன்தினம் மாலை 2வது தளத்துக்கு சென்றனர்.அப்போது இடையில் திடீரென லிப்ட் நின்றுவிட்டது. இதனால், லிப்ட்டில் இருந்தவர்கல் பீதியில் சத்தம் போட்டனர்....
நெல் கொள்முதல் செய்து ரூ.24.84 லட்சம் மோசடி: மண்டி உரிமையாளர் புகார்
ஈரோடு, ஜூலை 24: தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா மேப்பரிப்பட்டியை சேர்ந்த தானிய மண்டி உரிமையாளர் சென்னகிருஷ்ணன் (41), விசிக மண்டல துணை செயலாளர் ஜாபர் அலி தலைமையில் ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தார். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: எனக்கு தொழில் ரீதியாக ஈரோடு மாவட்டம் சோலார் பகுதியை...