சிவகிரியில் வேனில் மூட்டை மூட்டையாக 1,800 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்
ஈரோடு, ஜூலை 23: சிவகிரி அருகே 1,800 கிலோ ரேஷன் அரிசி கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் சிவகிரி தாண்டாம்பாளையம் பகுதியில் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜகுமார், எஸ்ஐ மேனகா, பறக்கும் படை தாசில்தார் ஜெயக்குமார் ஆகியோர் நேற்று வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, அவ்வழியாக...
பொது மாறுதல் கலந்தாய்வில் 12 பேர் ஆப்சென்ட்
ஈரோடு, ஜூலை 23: ஈரோடு மாவட்டத்துக்குள் நடைபெற்ற ஆசிரியர் பயிற்றுனருக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் 12 பேர் ஆப்சென்ட் ஆகினர். சமக்ர சிக்ஷா (அனைவருக்கும் கல்வி இயக்கம்) சார்பில், ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் பகுதியில் உள்ள சமக்ர சிக்ஷா அலுவலகத்தில் நேற்று பிஆர்டிஇ. எனப்படும் ஆசிரியர் பயிற்றுனர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு மாவட்டத்துக்குள் பணியிட மாறுதல்...
பவானிசாகர் அருகே 108 ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது
சத்தியமங்கலம், ஜூலை 23: பவானிசாகர் அருகே 108 ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. நீலகிரி மாவட்டம் தெங்குமரஹாடா வன கிராமத்தை சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி லாவண்யா (24). இவர்கள் இருவரும் தற்போது பவானிசாகர் அருகே உள்ள தொட்டம்பாளையம் அண்ணாநகர் பகுதியில் வசித்து வந்தனர். நிறைமாத கர்ப்பிணியான லாவண்யாவிற்கு நேற்று காலை கடுமையான...
தொழிலாளியை தாக்கிய 3 பேர் கைது
ஈரோடு, ஜூலை 22: ஈரோடு அடுத்த கஸ்பாபேட்டை கள்ள கவுண்டன்பாளையத்தை சேர்ந்த பழனிச்சாமி மகன் கார்த்தி (36). கூலி தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் முள்ளாம்பரப்பு செக்குமேடு பகுதியில் நின்று செல்போனில் பேசி கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 3 மர்மநபர்கள் கார்த்தியிடம் ஏன் சத்தமாக செல்போனில் பேசுகிறீர்கள் என கூறி வம்பு இழுத்துள்ளனர்....
பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நிறைவு
ஈரோடு, ஜூலை 22: ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் கடந்த சில தினங்களாக அரசு பள்ளி ஆசிரியர்கள் பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு மாவட்டத்திற்குள்ளும், மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கும் நடந்து வந்தது. இதில், முதுகலை ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் பங்கேற்றனர். நேற்று கணித பிரிவு பட்டதாரி...
குளியலறையில் மயங்கி விழுந்து உரக்கடை உரிமையாளர் பலி
கோபி, ஜூலை 22: கோபி அருகே உள்ள கரட்டடிபாளையத்தில் குளியலறையில் மயங்கி விழுந்து உரக்கடை உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோபி அருகே உள்ள கரட்டடிபாளையம் கொல்லங்காடு வீதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி மகன் விக்ரம் (25). இவர் காலேஜ் பிரிவில் உரக்கடை நடத்தி வந்தார். நேற்று காலை வீட்டில் இருந்த குளியலறையில்...
போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் சங்க கூட்டம்
பவானி, ஜூலை 21: கோவை போக்குவரத்து கழக ஓய்வூதியதாரர்கள் சங்கத்தின் பவானி-அந்தியூர் கிளை கூட்டம் மற்றும் கோவை பேரவைக்கு பாராட்டு விழா பவானியில் நடந்தது. மண்டலத் தலைவர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். அமைப்புச் செயலாளர்கள் பரமசிவம், துரைசாமி, தயாளன், அருள்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அந்தியூர் கிளைத்தலைவர் பாலகுரு வரவேற்றார். கோவை பேரவையின் பொதுச்செயலாளர்...
பவானிசாகர் அணை பராமரிப்பு
சத்தியமங்கலம்,ஜூலை21: தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக 2வது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு,திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்க நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்தியா சுதந்திரம் பெற்றபின் முதலாம் ஐந்தாண்டு திட்டத்தில் ரூ.10.50 கோடி செலவில் கட்டப்பட்ட பவானிசாகர் அணை கரையின்...
பாரதிதாசன் கலை கல்லூரியில் மாணவர் ஒன்றிய நிர்வாகிகள் அறிமுக விழா
ஈரோடு, ஜூலை 21: பாரதிதாசன் கலை, அறிவியல் கல்லூரியில் மாணவர் ஒன்றிய நிர்வாகிகள் அறிமுக விழா நடந்தது. விழாவுக்கு கல்லூரி செயலாளர் என்கேகேபி நரேன்ராஜா தலைமை வகித்து பேசுகையில், ‘கல்லூரியின் ஒன்றியங்களில் தேர்வான மாணவர்கள் தலைமைப் பண்போடும், பிறருக்கு வழிகாட்டியாகவும் விளங்க வேண்டும் என்றார். கல்லூரி முதல்வர் பெ.வானதி, ஒன்றிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து...