வத்தலக்குண்டுவில் புதிய வழித்தடங்களில் பஸ்கள் இயக்கம்
வத்தலக்குண்டு, ஜூலை 11: வத்தலகுண்டுவில் இருந்து நடகோட்டைக்கும், தெப்பத்துப்பட்டிக்கும் 2 புதிய வழித்தடங்களில் 2 அரசு மகளிர் விடியல் பயண பேருந்துகள் விடப்பட்டுள்ளன. அந்த பஸ்களை வரவேற்கும் நிகழ்ச்சி வத்தலக்குண்டு அருகே விருவீட்டில் நடந்தது. திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் கனிக்குமார் தலைமை வகித்து, பேருந்துகளுக்கு மலர் தூவி வரவேற்றார். பின்னர் பேருந்து ஓட்டுனர்...
திண்டுக்கல்லில் கூட்டுறவு பணியாளர்களுக்கு இன்று குறைதீர்ப்பு கூட்டம்
திண்டுக்கல், ஜூலை 11: திண்டுக்கல் மாவட்டத்தில் கூட்டுறவு துறை பணியாளர்களுக்கான பணியாளர் நாள் இன்று நடைபெற உள்ளது. இதில் பணியாளர்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என மண்டல இணைப்பதிவாளர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்களின் குறைகளை தீர்வு செய்திடும் வகையில், இரு மாதங்களுக்கு...
காணாமல் போன முதியவர் கிணற்றில் சடலமாக மீட்பு
வேடசந்தூர், ஜூலை 11: குஜிலியம்பாறை தாலுகா வடக்கு தளிப்பட்டியை சேர்ந்தவர் பிச்சை (85). இவரை காணவில்லை என கடந்த ஜூலை 8ம் தேதி இவரது மகன் பெருமாள் எரியோடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் அவ்வூரில் உள்ள ஒரு கிணற்றில் முதியவர் சடலம் கிடப்பதாத குஜிலியம்பாறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில்...
ஒட்டன்சத்திரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் விண்ணப்ப படிவம் விநியோகம்
ஒட்டன்சத்திரம், ஜூலை 10: ஒட்டன்சத்திரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி வரும் ஜூலை 15ம் தேதி தமிழக முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் கலைஞர் மகளிர் உரிமை தொகை, இலவச வீட்டுமனை பட்டா மற்றும் குடிநீர், சாலை, கழிவுநீர் வடிகால், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பொதுமக்கள் மனு...
அய்யலூர் கோயிலில் ஏலம் நடத்த திடீர் தடை
வேடசந்தூர், ஜூலை 10: அய்யலூர் அருகே வண்டி கருப்பணசுவாமி கோயிலில் காணிக்கையாக எறியும் காசுகள், சிதறு தேங்காய் சேகரித்தல், வாகனங்கள் பாதுகாப்பு கட்டண வசூல் உள்ளிட்டவை இசமய அறநிலையத்துறை சார்பில் ஆண்டுதோறும் ஏலம் விடப்படும். இந்த ஆண்டிற்கான ஏலம் வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் நேற்று நடந்தது. உதவி ஆணையர் லட்சுமிமாலா தலைமை வகித்தார். ஆய்வாளர்...
திண்டுக்கல்லில் ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல், ஜூலை 10: திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முபாரக் அலி தலைமை வகித்தார். வருவாய் துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சுகந்தி, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில செய்தி தொடர்பாளர் முருகேசன், நிர்வாகிகள்...
நத்தம் செந்துறையில் மாற்றுத்திறனாளிகள் சங்க மாநாடு
நத்தம், ஜூலை 9: நத்தம் அருகே செந்துறையில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை சங்கத்தின் தாலுகா அளவிலான மாநாடு நடந்தது. ஒன்றிய தலைவர் சின்னையா தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஜெயந்தி, ஒன்றிய செயலாளர் பால்ராஜ் முன்னிலை வகித்தனர். மாநாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலைத் திட்டத்தில் தொடர்ந்து வேலை...
கொடைக்கானலில் பள்ளி முன்பு பவனி வந்த காட்டு மாடு: மாணவர்கள் அச்சம்
கொடைக்கானல், ஜூலை 9: கொடைக்கானலில் தனியார் பள்ளி முன்பு உலா வந்த காட்டு மாட்டினால் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் அச்சமடைந்தனர். கொடைக்கானலில் சமீபகாலமாக வனவிலங்குகளின் தொந்தரவும், அச்சுறுத்தலும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக காட்டு மாடு, காட்டுப்பன்றிகளின் நடமாட்டம் சர்வசாதாரணமாக இருந்து வருவதால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கடும் அச்சத்திற்குள்ளாகி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு...
நிலக்கோட்டை பகுதியில் புகையிலை விற்ற 4 பேர் கைது
நிலக்கோட்டை, ஜூலை 9: நிலக்கோட்டை அருகே விளாம்பட்டி பகுதியில் எஸ்ஐ ராமபாண்டியன் தலைமையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிலுக்குவார்பட்டி- விளாம்பட்டி சாலையில் ஒருவர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தார். போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில் தேனி மாவட்டம், ஜி.கல்லுப்பட்டியை சேர்ந்த கணேசன் (28) என்பது தெரியவந்தது. மேலும் அவர் வைத்திருந்த பையில்...