கொடைக்கானல் மலைச்சாலையில் மது அருந்தினால் நடவடிக்கை: வனத்துறை எச்சரிக்கை
பழநி, செப்.30: கொடைக்கானல் மலைச்சாலையில் மது அருந்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். இவர்கள் செல்லும் பழநி-கொடைக்கானல் மலைச்சாலை இயற்கை எழில் சூழ்ந்ததாகும். இங்கு சிறுத்தை, யானை, குரங்கு உள்ளிட்ட விலங்குகளின் நடமாட்டம் அதிகளவு உள்ளது. இந்நிலையில் பழநி-...
சரக்கு வாகனங்களில் ஆபத்தான பயணம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
நிலக்கோட்டை, செப்.30: நிலக்கோட்ட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள், சரக்கு வாகனங்களில் ஆபத்தான முறையில் பயணிக்கின்றனர். மேலும் காலையில் மார்க்கெட்டுகளுக்கு செல்வோரும், சுமைகளின் மீது அமர்ந்தபடி பயணிக்கின்றனர். இதனால் விபத்து அபாயம் உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி, சரக்கு வாகனங்களில் பயணம் செய்வோர் மீது போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக...
பழநி எரமநாயக்கன்பட்டியில் மக்காச்சோள சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி
பழநி, செப். 27: பழநி அருகே எரமநாயக்கன்பட்டியில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், வாகரை மக்காச்சோள ஆராய்ச்சி நிலையம் சார்பில் ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மக்காச்சோளத்தில் உயர் விளைச்சல் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி மற்றும் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. முதுநிலை வேளாண் அலுவலர் தங்கவேலு வரவேற்று பேசினார். வாகரை மக்காச்சோள ஆராய்ச்சி நிலைய இணைப்பேராசிரியர்...
மின்கம்பியாள் உதவியாளருக்கு தகுதி தேர்வு
திண்டுக்கல், செப். 27: திண்டுக்கல் அரசு ஐடிஐயில் டிசம்பர் 2025ம் ஆண்டுக்கான மின்கம்பியாள் உதவியாளர் தகுதிக்கான தேர்வு டிச.13, 14 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது என கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: திண்டுக்கல் நத்தம் ரோட்டில் உள்ள அரசு ஐடிஐயில் டிசம்பர் 2025ம் ஆண்டிற்கான மின்கம்பியாள் உதவியாளர் தகுதிக்கான தேர்வு டிச.13, 14...
செம்பட்டியில் நூலக கட்டிடம் திறப்பு விழா
நிலக்கோட்டை, செப். 27: நிலக்கோட்டை ஒன்றியம் பச்சமலையான்கோட்டை ஊராட்சி செம்பட்டியில் புதிய நூலக கட்டிடம் கட்டி தருமாறு அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் புதிய நூலக கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. திமுக வடக்கு ஒன்றிய செயலாளர்...
பாரி வேட்டையில் ஈடுபட்டால் சிறை: பழநி வனத்துறை எச்சரிக்கை
பழநி, செப். 26: பழநி வனச்சரகம் 18 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. இங்கு யானை, சிறுத்தை, வரிப்புலி, காட்டு மாடு, காட்டுப்பன்றி, கேளையாடு, கரடி உள்ளிட்ட விலங்கினங்கள் உள்ளன. தவிர விலை உயர்ந்த மரங்களும், அரிய வகை மூலிகைகளும் அதிகளவு உள்ளன. இதனால் பழநி வனச்சரகத்திற்குள் வெளியாட்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விழா...
சாணார்பட்டி மருனூத்து முகாமில் மனுக்கள் குவிந்தன
கோபால்பட்டி, செப். 26: சாணார்பட்டி ஒன்றியம் மருனூத்து ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. திமுக மாவட்ட பொருளாளர் விஜயன் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். தொடர்ந்து பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் அந்தந்த துறை அலுவலர்களால் உடனுக்குடன் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டன. இதில் சிலரது மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு...
பழநி ரயில் நிலையத்தில் தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு
பழநி, செப். 26: பழநி ரயில் நிலையத்தில் தூய்மை இந்தியா திட்ட பணிகள் குறித்து தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகள் பிரசாரம் மேற்கொண்டனர். பழநி ரயில்வே எஸ்ஐ கணேசன் தலைமை வகித்தார். தனியார் நர்சிங் கல்லூரி முதல்வர் உமா மகேஸ்வரி முன்னிலை வகித்தார். ரயில் நிலையத்தில் நின்ற பயணிகளிடமும், ரயிலில் சென்ற பயணிகளிடமும் மாணவிகள் தூய்மை...
திண்டுக்கல்லில் முன்னாள் படைவீரர்கள் நலச்சங்கம் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல், செப். 25: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட முன்னாள் முப்படை ராணுவ வீரர்கள், வீரமங்கையர்கள் நலச்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ராஜூ தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் படை வீரர்களுக்காக செயல்படும் காக்கும் கரங்கள் திட்டம் குறித்து முறையாக தெரிவிக்க வேண்டும், முன்னாள் படைவீரர்கள்...