வத்தலக்குண்டுவில் ஆட்டோ கவிழ்ந்து 6 மாணவர்கள் காயம்
வத்தலக்குண்டு, ஜூலை 25: வத்தலக்குண்டுவில் ஆட்டோ கவிழ்ந்து 6 பள்ளி மாணவர்கள் காயமடைந்தனர். வத்தலக்குண்டு பகுதியிலுள்ள தனியார் பள்ளிகளை சேர்ந்த 11 மாணவ, மாணவிகள் ஆட்டோவில் நேற்று பழைய வத்தலக்குண்டு நோக்கி சென்று கொண்டிருந்தனர். ஆட்டோவை டிரைவர் முனியப்பன் (35) ஓட்டி வந்தார். வத்தலகுண்டு- பெரியகுளம் சாலையில் பயணிகள் விடுதி அருகே வந்த போது முன்னாள்...
திண்டுக்கல்லில் கல்லூரி சந்தை விற்பனை கண்காட்சி
திண்டுக்கல், ஜூலை 24: திண்டுக்கல் ஜிடிஎன் கல்லூரியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் கல்லூரி சந்தை விற்பனை கண்காட்சி நேற்று முன்தினம் முதல் துவங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இதன் துவக்க விழாவிற்கு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் சதீஷ் பாபு முன்னிலை வகித்தார். கண்காட்சியை உதவி ஆட்சியர் பயிற்சி...
நத்தம் அருகே இருதரப்பு மோதல் 7 பேர் மீது வழக்கு
நத்தம், ஜூலை 24: நத்தம் அருகே சேத்தூர் ஊராட்சி முசுக்கம்பட்டியை சேர்ந்தவர் லக்கையன் (54). விவசாயி. அதே ஊரை சேர்ந்தவர் செல்வராஜ் (45). இவர் ஆடு, மாடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் லக்கையன் தோட்டத்திற்குள் செல்வராஜின் ஆடு, மாடுகள் புகுந்ததில் அங்குள்ள செடி, கொடிகள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து செல்வராஜை, லக்கையன் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த...
போட்டி தேர்வுகள் மூலம் நிரப்ப கோரிக்கை
பழநி, ஜூலை 24: பழநி கோயிலில் காலியாக பணியிடங்களை போட்டி தேர்வுகள் மூலம் நிரப்ப வேண்டுமென நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மையத்தின் மாவட்ட நிர்வாகி பழனிச்சாமி தமிழ்நாடு முதல்வருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு கடந்த 2006ம் ஆண்டு முதல் அரசு துறைகளில் காலியாக...
மாயமான மாணவிகள் திருப்பூரில் மீட்பு
வேடசந்தூர், ஜூலை 23: அய்யலூரில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் மாணவிகள் 3 பேர் நேற்று முன்தினம் வீட்டிலிருந்து கிளம்பி பள்ளிக்கு சென்றனர். ஆனால் மாலை 3 பேரும் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர்கள் பள்ளிக்கு சென்று விசாரித்த போது 3 மாணவிகளும் பள்ளிக்கு செல்லவில்லை என்பது தெரியவந்தது. இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவிகளின்...
அய்யம்பாளையம் ராஜராஜ சோழீஸ்வரர் கோயிலில் பிரதோஷ விழா
பட்டிவீரன்பட்டி, ஜூலை 23: பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மங்களாம்பிகை உடனுறை ஸ்ரீ ராஜராஜ சோழீஸ்வரர் கோயிலில் நேற்று ஆடி மாத பிரதோஷ சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு சந்தனம், விபூதி, பால், தேன், இளநீர், மஞ்சள் உள்பட 16 வகையான அபிஷேகங்கள் நடந்தன. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம்,...
ஆண்கள் ஸ்பெஷல் திருவிழாவில் கமகமக்கும் கிடாய் கறி விருந்து
நத்தம், ஜூலை 23: நத்தம் அருகே குட்டுப்பட்டி ஊராட்சி ஒத்தினிப்பட்டி தெற்கு காட்டில் கருப்பசாமி கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி படையல் விழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு ஆடி படையல் விழா நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி நேர்த்திக்கடனாக விடப்பட்ட 50க்கும் மேற்பட்ட ஆட்டு கிடாய்கள் வெட்டப்பட்டும், 40 சிப்பம் அரிசியிலும் சமையல்...
தொழிலாளி தற்கொலை
ஆண்டிபட்டி, ஜூலை 22: ஆண்டிபட்டி அருகே வைகை அணை கே.கே.காலனி பகுதியை சேர்ந்தவர் உதயகுமார்(32). கூலித்தொழிலாளி.உதயகுமாருக்கு மது பழக்கம் இருந்ததால் அடிக்கடி கணவன்-மனைவிக்கிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 19ம் தேதி வழக்கம் போல், கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் உதயகுமாரின் மனைவி அவரது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். மறுநாள் காலையில் வந்து...
சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது
வடமதுரை , ஜூலை 22: வடமதுரை அருகே உள்ள தாமரைப்பாடி பகுதியில், வடமதுரை போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தாமரைப்பாடி ரயில் நிலையம் அருகே சேவல்களை வைத்து சேவல் கட்டு சூதாட்டம் நடத்தியதாக கன்னிவாடி அருகே உள்ள கோனூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்(35), குட்டத்துபட்டியைச் சேர்ந்த வசந்தகுமார்(28), லோகநாதன்(20) உள்ளிட்ட...