ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சி
பழநி, செப். 14: பழநி பகுதியில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு யோகா, தியான பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு உடல் ஆரோக்கியத்திற்கான யோகாசன பயிற்சி மற்றும் மன அழுத்தத்தை குறைப்பதற்கான தியான பயிற்சி அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஆசிரியர்களுக்கு மனதை ஒருநிலைபடுத்துவதற்கான...
திண்டுக்கல் அருகே மாயமான விவசாயி சடலமாக மீட்பு
திண்டுக்கல், செப். 13: திண்டுக்கல் அருகே நல்லமநாயக்கன்பட்டி சவேரியார் கோயில் தெருவை சேர்ந்தவர் அருள்சாமி (67). விவசாயி. இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் அதன்பின் திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகள் உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் அவரை காணவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டருகே உள்ள தோட்டத்து கிணற்றில் அவரது சடலம்...
நத்தம் அரசு கல்லூரியில் விழிப்புணர்வு முகாம்
நத்தம், செப். 13: நத்தம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய இளைஞர் தினத்தையொட்டி பால்வினை நோய் தொற்று குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. கல்லூரி முதல்வர் ராஜாராம் முன்னிலை வகித்தார். செந்துறை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய நம்பிக்கை மைய ஆலோசகர் மீனா கலந்து கொண்டு பால்வினை நோய், காசநோய் மற்றும்...
ஆத்தூர் அக்கரைப்பட்டியில் இலவச வீட்டு மனை பட்டா இடத்தில் ஆய்வு
நிலக்கோட்டை, செப். 13: ஆத்தூர் அருகே அக்கரைப்பட்டி பகுதியில் சுமார் 11.52 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இதில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏழை, எளிய பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால் இந்த நிலத்தை பயன்படுத்தி யாரும் குடியேறவில்லை. இதனால் அப்பகுதி முழுவதும் சீமை கருவேல மரங்கள்...
ஒட்டன்சத்திரத்தில் சோளம் மேலாண்மை செயல் விளக்கம்
ஒட்டன்சத்திரம், செப். 12: ஒட்டன்சத்திரத்தில் திண்டுக்கல் வேளாண்மை துணை இயக்குனர் அலுவலக உழவர் பயிற்சி நிலையம் சார்பில் மக்காச்சோள பயிர் மேலாண்மை செயல் விளக்க முகாம் நடைபெற்றது. உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குனர் ரமேஷ் தலைமை வகித்தார். இம்முகாமில் விவசாயிகளுக்கு அரசின் அனைத்து திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து மக்காச்சோள பயிர் மேலாண்மை...
வடமதுரை விபத்தில் விவசாயி பலி
வடமதுரை, செப். 12: வடமதுரை அருகே சாலையூரை சேர்ந்தவர் வேலுச்சாமி (65). விவசாயி. இவர் நேற்று அப்பகுதியில் உள்ள ஒரு கடைக்கு டீ குடிக்க சென்றார். திண்டுக்கல்- திருச்சி நான்கு வழிச்சாலையில் ஓரமாக நடந்து சென்ற போது, வடமதுரை அண்ணா நகரை சேர்ந்த பாண்டியராஜன் (19) என்பவர் ஓட்டி வந்த டூவீலர் அவர் மீது மோதியது....
பழநி அருகே நாய்கள் கடித்து ஆடு பலி
பழநி, செப். 12: பழநி அருகே கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் புகழேந்தி. ஆடுகள் வளர்த்து வருகிறார். இவர் நேற்று தனது 5 ஆடுகளை அப்பகுதியில் உள்ள குளத்தில் மேய்ச்சலுக்காக அழைத்து சென்றுள்ளார். அப்போது குளத்திற்குள் புகுந்த வெறி நாய்கள் கூட்டம் ஆடுகளை விரட்டி கடிக்க துவங்கின. ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த புகழேந்தி நாய்களை விரட்ட...
மண்புழு உர உற்பத்தி பயிற்சி முகாம்
பழநி, செப். 11: பழநி அருகே ஆயக்குடியில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், வாகரை மக்காச்சோள ஆராய்ச்சி நிலையம் சார்பில் ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கான மண்புழு உர உற்பத்தி பயிற்சி முகாம் நடந்தது. முகாமில் வாகரை மக்காச்சோள ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியர் சதீஷ்குமார் கலந்து கொண்டு மண்புழு உரத்தின் முக்கியத்துவம், பயன்பாடுகள் மற்றும்...
பழநியில் லாரி மோதி பெண் பலி
பழநி, செப். 11: திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே உரல்பட்டியை சேர்ந்த சேதுபதி மனைவி பொன்மலர் (39). இவர் நேற்று முன்தினம் தனது உறவினரான வெள்ளியங்கிரியுடன் நாடி ஜோதிடம் பார்ப்பதற்காக டூவீலரில் பழநிக்கு வந்து கொண்டிருந்தார். பழநி- கொழுமம் சாலை அ.கலையம்புத்தூர் பகுதியில் ஒரு வேகத்தடையில் ஏறிய போது திடீரென நிலை தடுமாறிய டூவீலர், எதிரே...