ஆட்டோ கவிழ்ந்து 2 பேர் படுகாயம்
நத்தம், செப். 18: நத்தம் அருகே கும்பச்சாலையை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (30). ஆட்டோ டிரைவர். இவர் சம்பவத்தன்று ஆட்டோவில் நத்தம் வந்துவிட்டு கும்பச்சாலையை நோக்கி அதே பகுதியை சேர்ந்த அர்ஜுனன் (40), தங்கம் (32) ஆகியோரை ஏற்றிக் கொண்டு சென்றார். விரிச்சலாறு பாலம் அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையில் கவிழ்ந்து...
தையல் தொழிலாளர்கள் சங்கத்தினர் மனு
திண்டுக்கல், செப். 18: திண்டுக்கல் தையல் தொழிலாளர் சங்கம் மற்றும் சிஐடியூ சார்பில் 40க்கும் மேற்பட்டோர் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டர் சரவணனிடம் மனு அளித்தனர். அம்மனுவில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு தையல் தொழிலாளர் நலவாரியத்திற்கு தனி நிதியம் ஏற்படுத்த வேண்டும். தொழிலாளர்களுக்கு மாநில அளவில் முத்தரப்பு குழு அமைக்க வேண்டும். ஓய்வூதிய தொகையை ரூ.3000...
கோஷ்டி மோதல்: 6 பேர் கைது
நத்தம், செப். 17: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே லிங்கவாடி கிழக்குதெருவை சேர்ந்தவர் வல்லரசு (25). இவர் வடக்கு தெரு பகுதியில் டூவீலரை வேகமாக ஓட்டி சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வடக்கு தெருவை சேர்ந்த சரவணன் (20) என்பவர், ‘ஏன்டா வண்டியை வேகமாக ஓட்டி செல்கிறாய்’ எனக் கேட்டுள்ளார். இதில் இரு பிரிவினருக்கும் இடையே...
கலெக்டரிடம் மனு
திண்டுக்கல், செப். 17: திண்டுக்கல் அருகே முள்ளிப்பாடி ஆதி திராவிட மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு கலெக்டர் சரவணனிடம் மனு அளித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் கிருஷ்ணசாமி, மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் கலெக்டரிடம் அளித்தனர். மனுவில் தெரிவித்துள்ளதாவது: திண்டுக்கல் அருகே முள்ளிப்பாடி ஊராட்சி செட்டியபட்டி மற்றும்...
நள்ளிரவில் காருக்கு தீ வைப்பு
நிலக்கோட்டை, செப். 17: செம்பட்டி அருகே உள்ள சித்தையன்கோட்டையை சேர்ந்த சகோதரர்கள் அப்துல்லா (42),சபிபுல்லா (40), இந்தாதுல்லா (35) பரக்கத்துல்லா (32). இவர்கள் நான்கு பேரும் சித்தையன்கோட்டை மற்றும் திண்டுக்கல் பகுதியில் டீக்கடை நடத்தி வருகின்றனர். 4 சகோதரர்களும் ஒரே வீட்டில், ஒரே குடும்பமாக வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பரக்கத்துல்லாவுக்கு...
இன்று மின்தடை
கொடைக்கானல், செப்.16: கொடைக்கானல் துணை மின் நிலையம் மற்றும் உயரழுத்த மின் பாதைகளில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனையொட்டி கொடைக்கானல், அட்டுவம்பட்டி பள்ளங்கி, வில்பட்டி, பூம்பாறை, மன்னவனூர் பழம்புத்தூர், கவுஞ்சி, கிளாவரை, வடகவுஞ்சி, பெரும்பள்ளம், மேல் பள்ளம், சவரிக்காடு, ஊத்து, மச்சூர், பேத்துப்பாறை, பெருமாள்மலை, பிஎல் செட், சாமகாட்டு பள்ளம்,...
குஜிலியம்பாறையில் டிப்பர் லாரி மோதி விவசாயி பலி டிரைவர் மீது வழக்கு பதிவு
குஜிலியம்பாறை, செப்.16: குஜிலியம்பாறையில், டூவீலர் மீது டிப்பர் லாரி மோதியதில் விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து டிரைவர் மீது போலீசார், வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர். குஜிலியம்பாறை அருகே காட்டமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ்(55). விவசாயி. இவர் நேற்று மதியம் தனது டூவீலரில், குஜிலியம்பாறை மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றுள்ளார். குஜிலியம்பாறை யூனியன்...
வத்தலக்குண்டு அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவர் மீட்பு
வத்தலக்குண்டு, செப்.16: வத்தலக்குண்டு அருகே கட்டக்காமன்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா(70). விவசாய தொழிலாளி. இவர் நேற்று காலை, தான் வளர்த்து வரும் ஆட்டிற்கு, தீவனம் பறிக்க தோட்ட பகுதிக்கு சென்றார். அப்போது அங்குள்ள 30 அடி ஆழமுள்ள கிணற்றில், கால் தடுமாறி கிணற்றி உள்ளே விழுந்தார். கிணற்றில் தண்ணீர் இருந்தால் நீச்சலடித்து, கிணற்றின் ஓரத்தில் வந்து...
தேசிய மகளிர் கால்பந்து போட்டி கேரளாவை வென்றது தமிழகம்
திண்டுக்கல், செப். 15: கேரள மாநிலம் பாலக்காட்டில் 30வது தேசிய மகளிர் கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு அணி முதல் போட்டியில் பாண்டிச்சேரி அணியை 13:0 என்ற கோல் கணக்கில் வென்றது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் தமிழ்நாடு அணி பலம் வாய்ந்த கேரளா அணியை 2:1 என்ற கோல் கணக்கில் வென்றது....