மாநில மல்யுத்த போட்டி பழநி மாணவிகள் பதக்கங்களை அள்ளினர்
பழநி, ஆக. 9: சேலத்தில் தமிழ்நாடு அமெச்சூர் மல்யுத்த சங்கத்தின் சார்பில் மாநில அளவிலான மல்யுத்த போட்டிகள் இரண்டு நாட்கள் நடந்தது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். வயது, எடையின் அடிப்படையில் பல்வேறு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 59 கிலோ எடை பிரிவில் பழநியை சேர்ந்த...
திண்டுக்கல்லில் அரசியல் கட்சியினர் ஆய்வு கூட்டம்
திண்டுக்கல், ஆக. 9: திண்டுக்கல் மாவட்டத்தில் அரசியல் கட்சிகள், இதர அமைப்புகள் மூலம் தெருமுனை பிரசாரம், பொது கூட்டம், ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்துவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவின்படி காவல் துறையினர், அரசியல் கட்சியினர் மற்றும் இதர அமைப்பினருடன் ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட எஸ்பி பிரதீப் முன்னிலை வகித்தார். கலெக்டர்...
செம்பட்டி அருகே ஆட்டோ மீது பஸ் மோதி இளம்பெண் பலி: பெற்றோர் உள்பட 3 பேர் படுகாயம்
நிலக்கோட்டை, ஆக. 8: வத்தலக்குண்டு பெத்தானியபுரத்தை சேர்ந்த மலைச்சாமி மனைவி ராஜலட்சுமி (29). இவர், உடல்நலம் சரியில்லாததால் சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவமனைக்கு தந்தை ராமன், தாய் கருப்பாயியுடன் ஆட்டோவில் நேற்று காலை புறப்பட்டு சென்றார். ஆட்டோவை ஜெயராம் (27) ஓட்டி வந்தார். வத்தலக்குண்டு சாலையில் செம்பட்டி அடுத்த பாளையங்கோட்டை பிரிவு அருகே வந்த போது...
நத்தம் அருகே நகை, பணத்தை பறித்தவர் கைது: மேலும் 2 பேருக்கு வலை
நத்தம், ஆக. 8: நத்தம் அருகே பரளி தேத்தாம்பட்டியை சேர்ந்தவர் ராஜாங்கம் (31) காய்கறி வியாபாரி. இவர் கடந்த ஜூலை 17ம் தேதி டூவீலரில் வத்திபட்டிக்கு சென்ற போது பேட்டைக்குளம் பகுதியில் 3 பேர் வழிமறித்து அவரிடமிருந்த 2 பவுன் செயின், ரூ.10 ஆயிரத்தை பறித்து சென்றனர். இதுகுறித்து ராஜாங்கம் அளித்த புகாரில் நத்தம் எஸ்ஐ...
திண்டுக்கல்லில் விசிக மாவட்ட செயற்குழு கூட்டம்
திண்டுக்கல், ஆக. 8: திண்டுக்கல்லில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மைதீன் பாவா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் தமிழரசன், திருவளவன் தமிழ் முகம் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக முதன்மை செயலாளர் பாவரசு கலந்து கொண்டு பேசினார். இக்கூட்டத்தில், தமிழகத்தில் தொடர்ந்து நடக்கும் சாதி ரீதியான...
நத்தம் அருகே பெண்ணுக்கு அரிவாள் வெட்டு
நத்தம், ஆக. 7: நத்தம் அருகே வத்திபட்டி செக்கடிபட்டியை சேர்ந்த அழகு என்பவரது மனைவி ராமுத்தாய் (40). இவருக்கும், இவரது மாமியார் பெரியகாத்திக்கும் சொத்து சம்மந்தமாக அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பெரியகாத்தி அரிவாளால் ராமுத்தாயை வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டார்....
உறுப்பு கல்லூரிகள் பொதுக்குழு கூட்டம்
கொடைக்கானல், ஆக. 7: கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 13 கலை கல்லூரிகளுக்கான 2025- 2026ம் ஆண்டிற்கான பொதுக்குழு கூட்டம் பல்கலைக்கழகத்தில் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் ராஜம் வரவேற்றார். பதிவாளர் (பொறுப்பு) ஜெயப்பிரியா தொடக்கவுரையாற்றினார். பல்கலைக்கழக துணைவேந்தர் கலா தலைமை வகித்து பேசியதாவது, ‘மாணவிகள் படிப்பில் அதிகம் கவனம் செலுத்தி நல்ல மதிப்பெண் பெற்று...
தீ வைத்த 21 பேர் மீது வழக்கு
வடமதுரை, ஆக. 7: அய்யலூர் கருஞ்சின்னானூரில் கடந்த சில நாட்களுக்கு முன் பகவதியம்மன், பெரியகாண்டியம்மன் கோயில் திருவிழா நடந்தது. இவ்விழாவில் கலந்து கொள்ள அரசியல் பிரமுகர்களை அழைத்து வரக்கூடாது என ஊர் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் விழா கடைசி நாளில் வெளியூர் அரசியல் பிரமுகர்கள் பங்கேற்றனர். இதை கண்டித்து உள்ளூரை சேர்ந்த சிலர் கட்சியினரின்...
மாநில வூசு போட்டி திண்டுக்கல் அணி சாம்பியன்
திண்டுக்கல், ஆக. 6: கோயம்புத்தூரில் கேலோ இந்தியா மற்றும் தமிழ்நாடு வூசு சங்கம் சார்பில் மாநில அளவிலான வூசு உமன் லீக் போட்டிகள் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து 200க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து 18 மாணவிகள், பயிற்சியாளர் ஜாக்கி சங்கர் தலைமையில் கலந்து கொண்டனர்....