திண்டுக்கல்லில் புத்தக திருவிழா இலச்சினை வெளியீடு
திண்டுக்கல், ஆக. 4: திண்டுக்கல் அங்கு விலாஸ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாவட்ட நிர்வாகம், பொது நுாலக இயக்ககம் மற்றும் இலக்கிய களம் சார்பில் 12வது புத்தக திருவிழா ஆக.28ம் தேதி துவங்கி செப்.7ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த ஆண்டு புத்தக திருவிழா இடநெருக்கடி இன்றி, வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில், அனைவரும்...
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்; 45.50 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து சாதனை: ஒட்டன்சத்திரத்தில் அமைச்சர் அர.சக்கரபாணி தகவல்
ஒட்டன்சத்திரம், ஆக. 3: ஒட்டன்சத்திரத்தில் தொகுதி வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்த நபர்களுக்கு குடும்ப அட்டைகள், கலைஞர் கனவு இல்ல திட்ட பயனாளிகளுக்கு பணி ஆணைகளை வழங்கி பேசியதாவது: 1972ம் ஆண்டு ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில்...
திண்டுக்கல் அருகே கொலையில் கைதான 3 பேருக்கு குண்டாஸ்
திண்டுக்கல், ஆக. 3: திண்டுக்கல் அருகே ராஜக்காபட்டி கல்லுப்பட்டியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (39). பாரதிய ஜனதா கட்சி பிரமுகர். இவர், கடந்த ஜூலை 3ம் தேதி மடூர் பிரிவில் நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு 2 டூவீலர்களில் வந்த கும்பல், அவரை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடியது. இதுகுறித்து சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து 10...
பழநி வணிகர்கள் கவனத்திற்கு
பழநி, ஆக. 3: பழநி நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மளிகை கடை, ஹோட்டல், டீக்கடை, லாட்ஜ், திருமண மண்டபம், கறிக்கடை உள்ளிட்ட அனைத்து தொழில் செய்யும் வணிக நிறுவனத்தார் நடப்பு ஆண்டிற்கான தொழில் உரிமம் புதுப்பித்து, தொழில் வரித்தொகையை நகராட்சி அலுவலகத்தில் உடனடியாக செலுத்தியிருக்க வேண்டும். தவறும் பட்சத்தில் செலுத்தக்கூடிய உரிமத்தொகையில் 50% அபராத தொகையாக...
மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் படுகாயம்
வேடசந்தூர், ஆக. 2: வேடசந்தூர் அருகே திருக்கம்பட்டியை சேர்ந்தவர் சசிகுமார் (37). தனியார் நூற்பாலை எலக்ட்ரீசியன். நேற்று நூற்பாலையில் உள்ள மின்பெட்டியில் திடீரென பழுது ஏற்பட்டது. இதனை சரிசெய்யும் பணியில்சசிகுமார் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்டு சசிகுமார் படுகாயமடைந்தார். உடனே சக பணியாளர்கள் அவரை...
பழநியில் மீண்டும் பரவும் பிளாஸ்டிக்
பழநி, ஆக. 2: கோயில் நகரான பழநியில் பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள், தட்டுகள் போன்றவற்றின் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. இதனை நகராட்சி, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு தடையை மீறி பயன்படுத்துவர்களிடம் பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து வந்தனர். இந்நிலையில் பழநி பகுதியில் கடந்த சில நாட்களாக பிளாஸ்டிக் பைகள்,...
ரெட்கிராஸ் பொதுக்குழு கூட்டம்
திண்டுக்கல், ஆக. 2: திண்டுக்கல் மாவட்ட ரெட் கிராஸ் கிளையின் பொதுக்குழு கூட்டம் மற்றும் கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. ரெட் கிராஸ் அவை தலைவர் நாட்டாமை காஜா மைதீன்,மாவட்ட துணை தலைவர் சுந்தரமகாலிங்கம், உதவி அவை தலைவர் ஷேக் தாவூது, செயலாளர் ராஜகுரு, பொருளாளர் சுசீலா மேரி முன்னிலை வகித்தனர். சிறப்பு...
திண்டுக்கல்லில் மதிமுக செயற்குழு கூட்டம்
திண்டுக்கல், ஆக. 1: திண்டுக்கல்லில் மதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட அவை தலைவர் சுதர்சன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் பழனிச்சாமி, தீர்மானக்குழு உறுப்பினர் தமிழ்வேந்தன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் செல்வராகவன் வாழ்த்தினார். கூட்டத்தில், பொது செயலாளர் வைகோ 30 ஆண்டுகளாக பாராளுமன்றத்தில் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுள்ளதையொட்டி அவருக்கு நன்றி தெரிவித்தனர்....
பழநியில் சாலை பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பழநி, ஆக. 1: பழநி நெடுஞ்சாலை துறை கோட்ட அலுவலகம் முன்பு சாலை பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பாண்டி கோரிக்கை விளக்கவுரையாற்றினார். தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் ஜோதிமுருகன் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் நெடுஞ்சாலை துறையில் பணிபுரியும் இரவு காவலர் மற்றும் அலுவலக...