மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் படுகாயம்
வேடசந்தூர், ஆக. 2: வேடசந்தூர் அருகே திருக்கம்பட்டியை சேர்ந்தவர் சசிகுமார் (37). தனியார் நூற்பாலை எலக்ட்ரீசியன். நேற்று நூற்பாலையில் உள்ள மின்பெட்டியில் திடீரென பழுது ஏற்பட்டது. இதனை சரிசெய்யும் பணியில்சசிகுமார் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்டு சசிகுமார் படுகாயமடைந்தார். உடனே சக பணியாளர்கள் அவரை...
பழநியில் மீண்டும் பரவும் பிளாஸ்டிக்
பழநி, ஆக. 2: கோயில் நகரான பழநியில் பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள், தட்டுகள் போன்றவற்றின் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. இதனை நகராட்சி, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு தடையை மீறி பயன்படுத்துவர்களிடம் பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து வந்தனர். இந்நிலையில் பழநி பகுதியில் கடந்த சில நாட்களாக பிளாஸ்டிக் பைகள்,...
ரெட்கிராஸ் பொதுக்குழு கூட்டம்
திண்டுக்கல், ஆக. 2: திண்டுக்கல் மாவட்ட ரெட் கிராஸ் கிளையின் பொதுக்குழு கூட்டம் மற்றும் கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. ரெட் கிராஸ் அவை தலைவர் நாட்டாமை காஜா மைதீன்,மாவட்ட துணை தலைவர் சுந்தரமகாலிங்கம், உதவி அவை தலைவர் ஷேக் தாவூது, செயலாளர் ராஜகுரு, பொருளாளர் சுசீலா மேரி முன்னிலை வகித்தனர். சிறப்பு...
திண்டுக்கல்லில் மதிமுக செயற்குழு கூட்டம்
திண்டுக்கல், ஆக. 1: திண்டுக்கல்லில் மதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட அவை தலைவர் சுதர்சன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் பழனிச்சாமி, தீர்மானக்குழு உறுப்பினர் தமிழ்வேந்தன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் செல்வராகவன் வாழ்த்தினார். கூட்டத்தில், பொது செயலாளர் வைகோ 30 ஆண்டுகளாக பாராளுமன்றத்தில் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுள்ளதையொட்டி அவருக்கு நன்றி தெரிவித்தனர்....
பழநியில் சாலை பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பழநி, ஆக. 1: பழநி நெடுஞ்சாலை துறை கோட்ட அலுவலகம் முன்பு சாலை பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பாண்டி கோரிக்கை விளக்கவுரையாற்றினார். தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் ஜோதிமுருகன் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் நெடுஞ்சாலை துறையில் பணிபுரியும் இரவு காவலர் மற்றும் அலுவலக...
பழநி மலைக்கோயிலில் தீத்தடுப்பு பயிற்சி
பழநி, ஆக. 1: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 90 நாட்களுக்கு ஒருமுறை தீத்தடுப்பு பயிற்சி முகாம் நடைபெறுவது வழக்கம். இதன்படி மலைக்கோயிலில் தீத்தடுப்பு பயிற்சி முகாம் நேற்று நடந்தது. பழநி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமை வகித்தார். நிலைய அலுவலர் காளிதாஸ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கோயிலில் பணிபுரியும் கோயில் ஊழியர்கள், செக்யூரிட்டிகள்,...
திண்டுக்கல்லில் மாதர் சங்க மாநாடு
திண்டுக்கல், ஜூலை 31: திண்டுக்கல்லில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 13வது மாவட்ட மாநாடு கடந்த 2 நாட்களாக நடந்தது. துவக்க விழா நிகழ்வாக எம்விஎம் அரசு கலைக்கல்லூரி முன்பு பேரணி நடந்தது. பேரணியை முன்னாள் எம்எல்ஏ கே.பாலபாரதி கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து புறவழிச்சாலை ரவுண்டானா அருகில் உள்ள எஸ்எஸ்எஸ் மண்டபத்தில் பிரதிநிதிகள் மாநாடு...
பழநி சாலைகளில் விபத்துகளை தவிர்க்க கலெக்டர் ஆய்வு
பழநி, ஜூலை 31: பழநி அருகே ஆயக்குடி பகுதியில் அதிகளவில் சாலை விபத்துகள் நடந்து வருகின்றன. குறிப்பாக ஆயக்குடி காவல் நிலையம், பழைய ஆயக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஆயக்குடி கொய்யா மார்க்கெட், புது ஆயக்குடி ஆகிய பகுதிகளில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் இப்பகுதிகளை கலெக்டர் சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு...
மீன் பிடிக்க சென்ற வாலிபர் சாவு
ரெட்டியார்சத்திரம், ஜூலை 31:கன்னிவாடி அருகே வெள்ளம்பட்டி சங்கம் குளத்தில் வாலிபர் ஒருவர் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற எஸ்ஐ கோட்டைராஜன் மற்றும் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தவர் கசவனம்பட்டியை சேர்ந்த கருத்தபாண்டி...