நர்சரிக்குள் புகுந்த நல்ல பாம்பு மீட்பு
நத்தம், அக். 14: நத்தம் ஒன்றிய அலுவலகம் அருகே வேலம்பட்டி ஊராட்சி அலுவலகம் உள்ளது. இங்குள்ள நர்சரி பகுதியில் பாம்பு ஒன்று ஊர்ந்து சென்று பதுங்கியது. இதைப் பார்த்த அலுவலக பணியாளர் ஜெயராம் நத்தம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த நிலைய உதவி அலுவலர் அம்சராஜன் தலைமையிலான வீரர்கள் குழு...
மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்
திண்டுக்கல், அக். 14: திண்டுக்கல்லில் மாவட்ட அனைத்து மொத்த முட்டை விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை முட்டை விற்பனையாளர்கள் சங்க மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு, தென் மண்டல முட்டை விற்பனையாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் செல்லப்பாண்டி தலைமை வகித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது: தினசரி முட்டைக்கு விலை நிர்ணயம் செய்வதை தமிழக...
நத்தம் அருகே குடியிருப்புக்குள் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பு தீயணைப்பு துறையினர் பிடித்தனர்
நத்தம், அக். 13: நத்தம் அருகே சிறுகுடி கிழக்கு தெருவை சேர்ந்தவர் வீரமுத்து. நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டின் அருகில் மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து வந்துள்ளது. இதை பார்த்தவர்கள் இதுகுறித்து உடனே நத்தம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் நிலைய உதவி அலுவலர் அம்சராஜன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு...
பழநி திருஆவினன்குடி கோயில் கதவில் வெள்ளித்தகடு பொருத்தி சிறப்பு பூஜை
பழனி, அக். 13: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உபகோவயிலான திருஆவினன்குடி கோயில் மிகவும் சிறப்பு பெற்றது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். இந்நிலையில் கோயில் அர்த்த மண்டப கதவு வெள்ளி தகடுகள் சேதமடைந்திருந்து. அதை சீரமைக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. இதை தொடர்ந்து கோயில் நிர்வாகம்...
மது விற்றவர் கைது
நத்தம், அக். 13: நத்தம் பகுதிகளில் அரசு அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் நத்தம் இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் தலைமையில் எஸ்ஐ கிருஷ்ணகுமார் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நத்தம் தர்பார் நகர் பகுதியில் அய்யாபட்டியை சேர்ந்த கனகராஜ் (32) என்பவர் அனுமதியின்றி மது...
பலகாரம் தயாரிப்பில் சுகாதாரம் அவசியம்: சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
திண்டுக்கல், அக். 12: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து விதமான இனிப்பு மற்றும் கார வகை பலகாரங்கள் விற்பனைகளும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. எனவே, பலகாரங்கள் தயாரிப்பாளர்களும், விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்பு நிபந்தனைகளைப் பின்பற்றி தரமான மற்றும் பாதுகாப்பான உணவு நுகர்வோரைச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தீபாவளி...
கூட்டுறவு நிறுவனங்களின் உதவியாளர், இளநிலை உதவியாளர் பணி தேர்வை 1761 பேர் எழுதினர்
திண்டுக்கல், அக். 12: திண்டுக்கல் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்தின் மூலம் கூட்டுறவு நிறுவனங்களின் உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நேற்று ஜிடிஎன் கலைக்கல்லூரியில் நடந்தது. 92 பணியிடங்களுக்கு 2136 தேர்வர்கள் கலந்து கொள்ள தேர்வு நுழைவுச்சீட்டு வெளியிடப்பட்டது. தேர்வில் 1761 பேர் கலந்து கொண்டனர். இத்தேர்வை திண்டுக்கல் மாவட்ட இணைப்பதிவாளர்...
நிலக்கோட்டை நால்ரோடு பகுதியில் பட்டாசு கடைகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது: பொதுமக்கள் கோரிக்கை
நிலக்கோட்டை, அக். 12: நிலக்கோட்டையில் பொதுமக்கள் அதிகம் கூடும் நால்ரோடு பகுதியில் பட்டாசு கடைகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என கோரிக்கை எழுந்துள்ளது.திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்டங்களின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இதில் மதுரை, வத்தலக்குண்டு, பெரியகுளம், கொடைக்கானல், உசிலம்பட்டி, செம்பட்டி, திண்டுக்கல் உள்ளிட்ட சாலைகளை இணைக்கும் நால்ரோடு பகுதி உள்ளது. இப்பகுதி...
வத்தலக்குண்டுவில் சப்த கன்னிமார் கோயில் திருவிழா
வத்தலக்குண்டு, அக். 11: வத்தலக்குண்டு காந்தி நகர் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த பேசும் சப்தகன்னிமார் கோயிலில் புரட்டாசி மாத திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக கும்பாபிஷேகம் நடந்து முடிந்து 48ம் நாள் மண்டல அபிஷேக பூஜை, யாக வேள்வி பூஜைகள் நடந்தன. தொடர்ந்து பேசும் சப்த கன்னிமாருக்கு...