உலக ஐவிஎஃப் தினம்: பழநி பாலாஜி கருத்தரித்தல் மையத்தில் சிறப்பு முகாம்

பழநி, ஜூலை 26: பழநி பாலாஜி கருத்தரித்தல் மையத்தில் இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தையில்லா தம்பதியர் ஐவிஎஃப் சிகிச்சை மூலம் குழந்தைப்பேறு பெற்றுள்ளனர். உலகம் முழுவதும் ஜூலை 25ம் தேதி உலக ஐவிஎஃப் தினமாக கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக நேற்று உலக ஐவிஎஃப் தினத்தையொட்டி பழநி பாலாஜி கருத்தரித்தல் மையத்தில் குழந்தையின்மை பிரச்னையால் பாதிக்கப்பட்ட...

நத்தம் அருகே ஆடு திருட்டை தடுத்த விவசாயிக்கு கத்திக்குத்து

By Ranjith
24 Jul 2025

  நத்தம், ஜூலை 25: நத்தம் அருகே கரடிப்பட்டியை சேர்ந்தவர் எழுவன் (70). விவசாயியான இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். எழுவன் சம்பவ நாளன்று இரவு ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு தூங்க சென்று விட்டார். சிறிதுநேரத்தில் ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அவர் வெளியே வந்து பார்த்தார். அப்போது 3 மர்ம நபர்கள்...

நத்தம் குட்டுப்பட்டியில் விவசாயம் செழிக்க வேண்டி அன்னதானம்: 5 ஆயிரம் பேர் பங்கேற்பு

By Ranjith
24 Jul 2025

  நத்தம், ஜூலை 25: நத்தம் அருகே குட்டுப்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ளது வெங்கல நாச்சி அம்மன் கோயில். இங்கு ஆண்டுதோறும் ஆடி அமாவாசையன்று விவசாயம் செழிக்க வேண்டி அன்னதான விழா நடப்பது வழக்கம். அதன்படி நேற்று ஆடி அமாவாசையையொட்டி கோயிலில் அன்னதான விழா நடைபெற்றது. முன்னதாக வெங்கல நாச்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள்...

வத்தலக்குண்டுவில் ஆட்டோ கவிழ்ந்து 6 மாணவர்கள் காயம்

By Ranjith
24 Jul 2025

வத்தலக்குண்டு, ஜூலை 25: வத்தலக்குண்டுவில் ஆட்டோ கவிழ்ந்து 6 பள்ளி மாணவர்கள் காயமடைந்தனர். வத்தலக்குண்டு பகுதியிலுள்ள தனியார் பள்ளிகளை சேர்ந்த 11 மாணவ, மாணவிகள் ஆட்டோவில் நேற்று பழைய வத்தலக்குண்டு நோக்கி சென்று கொண்டிருந்தனர். ஆட்டோவை டிரைவர் முனியப்பன் (35) ஓட்டி வந்தார். வத்தலகுண்டு- பெரியகுளம் சாலையில் பயணிகள் விடுதி அருகே வந்த போது முன்னாள்...

திண்டுக்கல்லில் கல்லூரி சந்தை விற்பனை கண்காட்சி

By Ranjith
23 Jul 2025

திண்டுக்கல், ஜூலை 24: திண்டுக்கல் ஜிடிஎன் கல்லூரியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் கல்லூரி சந்தை விற்பனை கண்காட்சி நேற்று முன்தினம் முதல் துவங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இதன் துவக்க விழாவிற்கு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் சதீஷ் பாபு முன்னிலை வகித்தார். கண்காட்சியை உதவி ஆட்சியர் பயிற்சி...

நத்தம் அருகே இருதரப்பு மோதல் 7 பேர் மீது வழக்கு

By Ranjith
23 Jul 2025

நத்தம், ஜூலை 24: நத்தம் அருகே சேத்தூர் ஊராட்சி முசுக்கம்பட்டியை சேர்ந்தவர் லக்கையன் (54). விவசாயி. அதே ஊரை சேர்ந்தவர் செல்வராஜ் (45). இவர் ஆடு, மாடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் லக்கையன் தோட்டத்திற்குள் செல்வராஜின் ஆடு, மாடுகள் புகுந்ததில் அங்குள்ள செடி, கொடிகள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து செல்வராஜை, லக்கையன் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த...

போட்டி தேர்வுகள் மூலம் நிரப்ப கோரிக்கை

By Ranjith
23 Jul 2025

  பழநி, ஜூலை 24: பழநி கோயிலில் காலியாக பணியிடங்களை போட்டி தேர்வுகள் மூலம் நிரப்ப வேண்டுமென நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மையத்தின் மாவட்ட நிர்வாகி பழனிச்சாமி தமிழ்நாடு முதல்வருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு கடந்த 2006ம் ஆண்டு முதல் அரசு துறைகளில் காலியாக...

மாயமான மாணவிகள் திருப்பூரில் மீட்பு

By Ranjith
22 Jul 2025

  வேடசந்தூர், ஜூலை 23: அய்யலூரில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் மாணவிகள் 3 பேர் நேற்று முன்தினம் வீட்டிலிருந்து கிளம்பி பள்ளிக்கு சென்றனர். ஆனால் மாலை 3 பேரும் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர்கள் பள்ளிக்கு சென்று விசாரித்த போது 3 மாணவிகளும் பள்ளிக்கு செல்லவில்லை என்பது தெரியவந்தது. இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவிகளின்...

அய்யம்பாளையம் ராஜராஜ சோழீஸ்வரர் கோயிலில் பிரதோஷ விழா

By Ranjith
22 Jul 2025

பட்டிவீரன்பட்டி, ஜூலை 23: பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மங்களாம்பிகை உடனுறை ஸ்ரீ ராஜராஜ சோழீஸ்வரர் கோயிலில் நேற்று ஆடி மாத பிரதோஷ சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு சந்தனம், விபூதி, பால், தேன், இளநீர், மஞ்சள் உள்பட 16 வகையான அபிஷேகங்கள் நடந்தன. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம்,...

ஆண்கள் ஸ்பெஷல் திருவிழாவில் கமகமக்கும் கிடாய் கறி விருந்து

By Ranjith
22 Jul 2025

நத்தம், ஜூலை 23: நத்தம் அருகே குட்டுப்பட்டி ஊராட்சி ஒத்தினிப்பட்டி தெற்கு காட்டில் கருப்பசாமி கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி படையல் விழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு ஆடி படையல் விழா நேற்று முன்தினம் நடந்தது.  இதையொட்டி நேர்த்திக்கடனாக விடப்பட்ட 50க்கும் மேற்பட்ட ஆட்டு கிடாய்கள் வெட்டப்பட்டும், 40 சிப்பம் அரிசியிலும் சமையல்...