2வது வாரமாக வியாழன் பிரஸ்மீட் ரத்து அன்புமணியை நீக்குவது தொடர்பாக 31ம் தேதி ராமதாஸ் முக்கிய முடிவு பாமக வட்டாரத்தில் பரபரப்பு
திண்டிவனம், ஆக. 29: பாமக நிறுவனர் ராமதாஸ் வழக்கமான தைலாபுரம் வியாழன் செய்தியாளர் சந்திப்பை 2வது வாரமாக தொடர்ந்து ரத்து செய்துள்ள நிலையில், அன்புமணியை செயல் தலைவர் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பாக வருகிற 31ம்தேதி முக்கிய முடிவு அறிவிக்கலாம் என்ற பரபரப்பு அக்கட்சி வட்டாரத்தில் எழுந்துள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே 7...
2 கூரை வீடுகள் தீயில் கருகி சேதம்
விருத்தாசலம், ஆக. 27: விருத்தாசலம் அருகே கார்குடல் அணைக்கட்டு பகுதியை சேர்ந்தவர் விஜய். கூரை வீட்டில் வசித்து வருகிறார். இவரது மனைவி செவிலியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று விஜய் இரண்டு குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, பழ வியாபாரத்திற்கு சென்றுவிட்டார். அப்போது மதியம் இவரது வீடு மர்மமான முறையில் தீ பிடித்து எரிந்துள்ளது. இதனைக் கண்ட அக்கம்...
மதில் சுவர் விழுந்து உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் வழங்கினார்
வடலூர், ஆக. 27: கடலூர் மாவட்டம் குடிகாடு கிராமத்தில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலை ஒன்றில் கடந்த 23ம் தேதி மதில் சுவர் இடிந்து விழுந்ததில் அங்கு பணி புரிந்து வந்த பூதங்கட்டி கம்பளிமேடு பகுதியைச் சேர்ந்த அன்பு மனைவி இளமதி (35), தேவர் மனைவி இந்திரா (32) ஆகியோர் உயிரிழந்தனர். உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு...
அடையாளம் தெரியாத முதியவர் சாவு
மங்கலம்பேட்டை, ஆக. 27: கடலூர் மாவட்டம், மங்கலம்பேட்டையில் உள்ள சார்பதிவாளர் அலுவலகம் முன்பு கடந்த 10ம் தேதி அன்று சுமார் 70 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் மயக்க நிலையில் இருந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்....
உளுந்தூர்பேட்டை அருகே டிராக்டர் மீது தவெக மாநாட்டுக்கு சென்று திரும்பிய பேருந்து மோதி 10 பேர் காயம்
உளுந்தூர்பேட்டை, ஆக. 23: உளுந்தூர்பேட்டை புறவழிச் சாலையில் மதுரை தவெக மாநாட்டுக்கு சென்று சென்னை திரும்பிய டிராவல்ஸ் பேருந்து டிராக்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் டிராக்டர் மற்றும் பேருந்து டிரைவர்கள் உள்ளிட்ட 10 பேர் காயமடைந்தனர். சென்னை, பெரம்பூர், வியாசர்பாடி, எழும்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்...
பாமகவில் முக்கிய பதவி தலைமை நிர்வாக குழு உறுப்பினராக மூத்த மகள் காந்தி நியமனம் ராமதாஸ் அதிரடி உத்தரவு
திண்டிவனம், ஆக. 23: பாமகவில் அன்புமணிக்கு பதிலாக காந்தியை முன்னிறுத்தும் வகையில், ராமதாஸ் அதிரடி முடிவெடுத்துள்ளார். பாமக தலைமை நிர்வாக குழு உறுப்பினராக தனது மூத்த மகள் காந்தியை நியமித்து உத்தரவிட்டுள்ளார். பாமகவில் தந்தை ராமதாஸ், மகன் அன்புமணி மோதல் தீவிரம் அடைந்துள்ளது. இருவரும் கட்சியை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையில் இறங்கி...
மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி ரூ.1.30 கோடி வசூல்
மேல்மலையனூர், ஆக. 22: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் கோயில் பிரசித்திபெற்ற அம்மன் திருத்தலமாகும். இக்கோயிலுக்கு நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசனம் செய்து செல்கின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் ஆடி மாதம் என்பதால் குலதெய்வ வழிபாட்டிற்காகவும், வெள்ளிக்கிழமைகளிலும் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான...
லாரி மோதி என்எல்சி தொழிலாளி பலி
நெய்வேலி, ஆக. 22: நெய்வேலி வட்டம் 20 பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி மகன் சிவகுமார்(34). இவர் என்எல்சி இரண்டாம் சுரங்கத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் மந்தாரக்குப்பம் கடைவீதியில் இருந்து வீட்டிற்கு செல்ல கடலூர் சேலம் தேசிய நெடுஞ்சாலை மந்தாரக்குப்பம் பேருந்து நிலையம் அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது, கடலூரில் இருந்து வந்த...
புவனகிரி அருகே வள்ளலார் கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
புவனகிரி, ஆக. 22: புவனகிரி அருகே உள்ள சொக்கங்கொல்லை கிராமத்தில் வள்ளலார் கோயில் உள்ளது. தனியாருக்கு சொந்தமான இக்கோயிலில் சம்பவத்தன்று இரவு மர்ம நபர் கோயிலின் பூட்டை உடைத்து பணத்தை திருடி சென்றுள்ளார். மேலும் அங்கிருந்த சிசிடிவி கேமரா ஒன்றையும் திருடிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த புவனகிரி போலீசார் அங்கு சென்று...