விழுப்புரத்தில் பல்வேறு அரசுத்துறை சார்பில் 9,230 பயனாளிகளுக்கு ரூ.119.70 கோடியில் நலத்திட்ட உதவிகள் துணை முதலமைச்சர் உதயநிதி வழங்கினார்
விழுப்புரம், டிச. 7: விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு அரசுத்துறைகள் சார்பில் 9,230 பயனாளிகளுக்கு ரூ.119.70 கோடியில் நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி பேசினார். விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரி வளாகத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், கல்வி, சுயதொழில் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஆட்சியர் ஷேக் அப்துல்...
சின்னசேலம் அருகே விடிய விடிய தேடுதல் மாயமான சிறுமி சோளக்காட்டில் மயங்கிய நிலையில் மீட்பு
சின்னசேலம், டிச. 7: கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே நைனார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஹரிஹரன் மகள் கிருத்திஷா (3). இந்த குழந்தை நேற்று முன்தினம் மாலை சுமார் 5.30 மணியளவில் வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தது. பின் சிறிது நேரம் கழித்து அவரது தந்தை வந்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை. இதையடுத்து குழந்தையை அவரது உறவினர்கள்...
10ம் வகுப்பு மாணவன் மாயம்
பாகூர், டிச. 6: கடலூர் மாவட்டம் புதுக்கடையை சேர்ந்தவர்கள் ஆறுமுகம்-வளர்மதி தம்பதி. இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். ஆறுமுகம் இறந்து விட்ட நிலையில், வளர்மதியால் தனது 3 பிள்ளைகளையும் கவனிக்க முடியவில்லை. இதனால் குழந்தைகள் நலக்குழு உதவியின் மூலமாக, 3 பிள்ளைகளையும் பிள்ளையார்குப்பத்தில் உள்ள தனியார் குழந்தைகளை இல்லத்தில் சேர்த்து விட்டார். அங்கு...
பொக்லைன் டிரைவர் தற்கொலை
புவனகிரி, டிச. 6: பரங்கிப்பேட்டை அருகே உள்ள தில்லைவிடங்கன் கிராமத்தைச் சேர்ந்தவர் திருஞானசம்மந்தம்(40). பொக்லைன் டிரைவர். இவருக்கும், இவரது மனைவிக்கும் குடும்ப பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று மீண்டும் இவர்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த திருஞானசம்மந்தம் வீட்டிலேயே துாக்கில் தொங்கினார். இதையறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரத்தில் உள்ள அரசு...
தலைமை காவலருக்கு கொலை மிரட்டல் கைதி மீது வழக்கு
கடலூர், டிச. 6:கடலூர் கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இந்த சிறைச்சாலையில் தண்டனை கைதிகள் மற்றும் விசாரணைக் கைதிகள் என 500க்கும் மேற்பட்டோர் இருந்து வருகின்றனர். இதில் சிறை அலுவலராக விக்னேஷ் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மத்திய சிறையில் 10வது பிளாக்கில் மயிலாடுதுறை மாவட்டம் சேத்தூர் ரைஸ் மில் தெருவை சேர்ந்த...
பண்ருட்டி அருகே பெண் திடீர் சாவு
பண்ருட்டி, டிச. 4: பண்ருட்டியை அடுத்துள்ள கீழ்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி சுதா(31). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சுதா அவரது தாயார் இறந்த துக்கத்தில் மனஉளைச்சலில் இருந்து வந்தார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் அதிகாலை ஒரு 1 மணி அளவில் கீழ்மாம்பட்டு வீட்டில் இருந்தவர் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். இவரை...
கல்வராயன்மலை எட்டியார் ஆற்றில் வெள்ள பெருக்கு
கல்வராயன்மலை, டிச. 4: கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் வெள்ளிமலை ஒன்றியம் வஞ்சிக்குழி ஊராட்சிக்கு உட்பட்ட பாக்கனம் கிராமத்தில் சுமார் 150க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்திற்கும், வாழக்குழி கிராமத்திற்கும் இடையே எட்டியார் ஆறு ஓடுகிறது. அப்பகுதி மக்கள் அத்தியாவசிய பொருட்கள் ஏதாவது வாங்க வர வேண்டும் என்றால் இந்த ஆற்றை கடந்து வாழக்குழி...
விஷம் குடித்து வாலிபர் சாவு
வடலூர், டிச. 4: வடலூர் அருகே ராசாக்குப்பம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் மகன் இளவரசன்(27), திருமணம் ஆகவில்லை. கடந்த 20ம் தேதி இளவரசனை, வேலை எதுவும் செய்யாமல் ஊர் சுற்றி வருகிறாயே என அவரது தந்தை கண்டித்துள்ளார். இதனால் கோபம் அடைந்த இளவரசன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் களைக்கொல்லி மருந்தை குடித்து விட்டு மயங்கி...
அன்புமணி தரப்பிடமிருந்து பாமகவை மீட்டெடுக்கும் போராட்டத்தை முன்னெடுக்க 5 பேர் கொண்ட குழு ராமதாஸ் அதிரடி நியமனம்
திண்டிவனம், டிச. 3: அன்புமணி தரப்பிடமிருந்து பாமகவை மீட்டெடுக்கும் தொடர் போராட்டத்தை முன்னெடுக்க 5 பேர் கொண்ட குழுவை ராமதாஸ் நியமித்து நடவடிக்கை எடுத்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே நிலவிய தொடர் மோதல் காரணமாக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அன்புமணியை நீக்கி ராமதாஸ் நடவடிக்கை எடுத்தார்....