தொரவியில் பழமையான சிற்பம் கண்டுபிடிப்பு
விக்கிரவாண்டி, ஆக. 18: விக்கிரவாண்டி அருகே தொரவியில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தட்சிணாமூர்த்தி சிற்பம் மற்றும் 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான மண்பாண்ட ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வரலாற்று ஆய்வாளர் தகவல் தெரிவித்துள்ளார். விழுப்புரம் வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன், தேர்தல் தனி தாசில்தார் பாரதிதாசன் ஆகியோர் விக்கிரவாண்டி ஒன்றியம் தொரவியில் ஆய்வில் ஈடுபட்டபோது கேணீஸ்வரர் கோயில்...
புதுச்சேரியில் 3 பேரிடம் ரூ.1.77 லட்சம் ஆன்லைன் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை
புதுச்சேரி, ஆக. 14: புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த ஆண் நபருக்கு வங்கி அனுப்புவதுபோல் அறிமுகம் இல்லாத நபர் ஒரு லிங்க் அனுப்பியுள்ளார். அதை கிளிக் செய்து வங்கி விவரங்களை உள்ளீடு செய்தபோது, அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.75 ஆயிரம் திடீரென மாயமானது. அதேபோல், வேல்ராம்பேட் பகுதியை சேர்ந்த ஆண் நபரின் 2 வங்கிக்...
வீட்டில் இருந்த 5 பவுன் நகை மாயம்
செஞ்சி, ஆக. 14: செஞ்சி அடுத்த மேல்சேவூர் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மனைவி பச்சையம்மாள் (48). இவர் கடந்த வாரம் வீட்டு படுக்கை அறையில் உள்ள செல்பில் செயின், கம்மல், ஜிமிக்கி, மோதிரம், கோல்டு காயின் உட்பட ஐந்தரை பவுன் தங்க நகைகளை துணிப்பையில் போட்டு சுருட்டி வைத்திருந்தாராம். இந்த பையை காணவில்லை என்றும்,...
வீட்டின் படுக்கை அறையில் புகுந்த நாகப்பாம்பு கடலூர் ஆல்பேட்டையில் நெகிழ்ச்சி
கடலூர், ஆக. 14: கடலூர் ஆல்பேட்டையில் வீட்டின் படுக்கையறையில் புகுந்த நாகப்பாம்பை வழிபட்ட சம்பவத்தால் நெகிழ்ச்சி ஏற்பட்டது. கடலூர் ஆல்பேட்டை கூட்டுறவு நகரை சேர்ந்தவர் கடல் நாகராஜன். வழக்கம்போல நேற்று இரவு குடும்பத்துடன் தூங்க சென்றனர். அப்போது வீட்டின் படுக்கையறையில் உள்ள மெத்தை கட்டிலில் நாகப்பாம்பு ஒன்று கிடந்தது. இதை பார்த்த குடும்பத்தினர் பரவசம் அடைந்து...
மின்சாரம் தாக்கி பெண் பலி
காட்டுமன்னார்கோவில், ஆக. 12: காட்டுமன்னார்கோவில் அடுத்த பரிவிளாகம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (40). இவரது மனைவி சுந்தரி (35). அதே பகுதியை சேர்ந்த காமராஜர் தெருவில் வசித்து வருகின்றனர். நேற்று கணவர் வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் தனியாக இருந்த சுந்தரி பிளக் பாய்ண்டில் ஒயரை சொருகி லைட் சுவிட்சை போட்டுள்ளார். அப்போது ஒயரில் மின்கசிவு...
கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
காட்டுமன்னார்கோவில், ஆக. 12: காட்டுமன்னார்கோவில் பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து காட்டுமன்னார்கோவில் போலீசார் சாதாரண உடையில் சென்று பள்ளி வளாகத்தில் கண்காணித்தனர். அப்போது சந்தேகப்படும்படி நின்றிருந்த வாலிபரை சுற்றிவளைத்து பிடித்து சோதனை செய்தபோது, சட்டை பையில் 200 கிராம் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. கஞ்சாவை...
மதுவில் களைக்கொல்லி மருந்து கலந்து குடித்து விவசாயி சாவு
புவனகிரி, ஆக. 12: பரங்கிப்பேட்டை அருகே உள்ள பு.மடுவங்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் சௌந்தர்ராஜன்(52). விவசாயியான இவர் கடந்த 25ம் தேதி களைக்கொல்லி மருந்தை மதுவில் கலந்து குடித்துள்ளார். அதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிதம்பரத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு...
நகை கடையில் கொள்ளை சின்னசேலம் நபர் உள்பட 2 பேர் கைது துப்பாக்கி பறிமுதல்: யூடியூப் பார்த்து கைவரிசை
ஆத்தூர், ஆக. 9: நகைக்கடை உரிமையாளர் மீது மிளகாய் பொடி தண்ணீரை தெளித்து நகையை கொள்ளையடித்து தப்பிய 2 பேரை போலீசார் கைது செய்த நிலையில், துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் கடைவீதியை சேர்ந்தவர் வைத்தீஸ்வரன் (61). இவர் அதே பகுதியில் நகைக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி செண்பகலட்சுமி (55). இவர்கள் இருவரும்...
புவனகிரி பேரூராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளரை தாக்கிய விசிக கவுன்சிலர் கைது
புவனகிரி, ஆக. 9: புவனகிரி பேரூராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக ராதாகிருஷ்ணன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை பணியில் இருந்தபோது, பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புவனகிரி பேரூராட்சி 1வது வார்டு கவுன்சிலர் பாரதிதாசன் என்கிற காளிமுத்து, தனது வார்டில் செய்யப்பட்ட பணிக்கு கோப்புகள் தயார் செய்யும்படி கூறியுள்ளார்....