குடிநீர் வழங்க கோரி மறியல்
சின்னசேலம், அக். 24: கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது க.அலம்பளம் கிராமம். இந்த கிராமத்தில் 9வது வார்டு பகுதியில் ஜல் ஜீவன் திட்டத்தில் பைப் லைன் புதைத்தும் இன்னும் குடிநீர் வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள்...
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 77 கிலோ பறிமுதல் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
கடலூர், அக். 24: கடலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன. இதையடுத்து மாநகராட்சி ஆணையர் முஜிபூர் ரகுமான், கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் நகர்நல அலுவலர், துப்புரவு...
புவனகிரியில் தக்காளி ஏற்றி வந்த வாகனத்தில் மதுபாட்டில் கடத்தி வந்தவர் கைது
புவனகிரி, அக். 24: புவனகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லெனின் மற்றும் போலீசார், கீரப்பாளையம் கடைவீதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக தக்காளி ஏற்றி வந்த ஒரு மினி டெம்போவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 10 மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மினி டெம்போவை பறிமுதல் செய்த போலீசார், மது பாட்டிலை...
தனியார் கம்பெனி ஊழியர் மர்ம சாவு
வானூர், அக். 23: சென்னை பட்டாபிராம் சூரஞ்சேரி அண்ணா நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் கிருபாகரன் (35). இவர் வானூர் அருகே உள்ள ராவுத்தன்குப்பத்தை சேர்ந்த ஆனந்தி என்பவரை திருமணம் செய்து கொண்டு மாமியார் வீட்டில் வசித்து வந்தார். சேதராப்பட்டில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தவர் மனைவியுடன் சண்டை போட்டுக் கொண்டு வானூரில்...
நெல்லிக்குப்பம் அருகே விஷம் குடித்து மூதாட்டி சாவு
நெல்லிக்குப்பம், அக். 23: நெல்லிக்குப்பம் அடுத்த வெள்ளக்கரை அரசடிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதன் மனைவி அஞ்சலை(68). இவர் தனது மருமகன் வீரமுத்து வீட்டில் தங்கி வசித்து வந்தார். கடந்த 30 ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதி அடைந்து வந்துள்ளார். பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று அஞ்சலை, வீட்டில் யாரும்...
செவிலியர் மாணவி மாயம்
தியாகதுருகம், அக். 23: தியாகதுருகம் அடுத்த விருகாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராக்கன்(52). இவருக்கு 3 பெண் பிள்ளைகள் உள்ளனர். இரண்டாவது மகள் தனியார் கல்லூரியில் செவிலியர் படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 21ம் தேதி அருகில் உள்ள கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் வெகு நேரம் ஆகியும் மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதுகுறித்து...
தீபாவளி பண்டிகையையொட்டி செஞ்சி வாரச்சந்தையில் ரூ.6 கோடி வரை ஆடுகள் விற்பனை
செஞ்சி,அக்.18: செஞ்சி வாரச்சந்தையில் தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.6 கோடி வரை ஆடுகள் விற்பனை ஆனது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வெள்ளிக்கிழமைதோறும் நடைபெறும் வாரச்சந்தை மிகவும் பிரசித்திபெற்றதாகும். 150 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறும் பழமையான இந்த வாரச்சந்தையில் ஆடு, மாடுகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக செஞ்சி பகுதியில் வளர்க்கப்படும் வெள்ளாடுகள் மேய்ச்சலுக்காக மலைப்பகுதிகளில்...
பல்வேறு இடங்களில் போதையில் ரகளை 11 பேர் அதிரடி கைது
புதுச்சேரி, அக். 18: புதுச்சேரி முத்தியால்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது முத்தியால்பேட்டை பாப்பம்மாள் கோயில் வீதி சுடுகாடு அருகே ஒரு நபர் குடிபோதையில் அவ்வழியே செல்லும் மக்களுக்கு இடையூறாக, முகம் சுளிக்கும் வகையில் அநாகரிகமாக சத்தம் போட்டுக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது....
ஆன்லைனில் பகுதிநேர வேலை, உடைகள் விற்பனை எனக்கூறி 3 பெண் உள்பட 7 பேரிடம் ரூ.2.35 லட்சம் மோசடி
புதுச்சேரி, அக். 18: புதுச்சேரியில் ஆன்லைனில் பகுதிநேர வேலை மற்றும் ஆடைகள் விற்பனை எனக்கூறி 3 பெண்கள் உள்பட 7 பேரிடம் ரூ.2.35 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி பாகூர் பகுதியை சேர்ந்த ஒருவரை வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் மூலமாக மர்ம நபர் தொடர்பு...