சிதம்பரம் நடராஜர் கோயிலில் பரபரப்பு ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண் திடீரென மயங்கி விழுந்தார்
சிதம்பரம், டிச. 2: சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வந்த ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோயில் உள்ளது. இங்கு நாள்தோறும் உள்ளூர், வெளியூர், வெளிநாடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள், பக்தர்கள் உட்பட பல...
புதுச்சேரி தனியார் விடுதியில் பணம் வைத்து சூதாடிய 10 பேர் கொண்ட கும்பல் கைது
புதுச்சேரி, டிச. 2: புதுச்சேரி எஸ்.வி.பட்டேல் சாலையில் உள்ள தனியார் விடுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக பெரியக்கடை போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது தனியார் விடுதியில் உள்ள ஒரு அறையில் 10 பேர் கொண்ட கும்பல் பணம்...
முஷ்ணம் அருகே சோகம் வடிகால் வாய்க்காலில் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை பலி
முஷ்ணம், டிச. 2: முஷ்ணம் அருகே வடிகால் வாய்க்காலில் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. கடலூர் மாவட்டம் முஷ்ணம் அருகே பாளையங்கோட்டை கீழ்பாதி ஊராட்சியை சேர்ந்தவர் பழனி. மெக்கானிக். இவரது மனைவி தீபா. இவர்களுக்கு திருமணம் நடந்து 6 ஆண்டு ஆகிறது. சாய் லோகேஷ் (4), சாய்ரக்க்ஷன் என்கிற...
புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட எலெக்ட்ரிக் பஸ்சில் திடீர் புகை
புதுச்சேரி, டிச. 1: புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி எலெக்ட்ரிக் பேருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு நேற்று காலை சென்று கொண்டிருந்தது. கிழக்கு கடற்கரை சாலை மடுவுபேட் சந்திப்பில் பெட்ரோல் பங்க் அருகே காலை 7.50 மணியளவில் சென்றபோது, திடீரென இன்ஜினில் இருந்து புகை வந்துள்ளது. இதனால் பயந்து போன டிரைவர், பஸ்சை உடனடியாக...
கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
ரெட்டிச்சாவடி, டிச. 1: கடலூர் மாவட்டம் தூக்கணாம்பாக்கம் அடுத்த நல்லாத்தூரில் பிரசித்தி பெற்ற நாகமுத்து மாரியம்மன் கோயிலில் அதே பகுதியை சேர்ந்த தரணிதரன் (27) என்பவர் பூசாரியாக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு பூசாரி கோயிலை பூட்விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் நேற்று காலை வழக்கம் போல் கோயிலை திறந்தார். அப்போது கோயில்...
குடும்ப பிரச்னையில் எலி பேஸ்ட் சாப்பிட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
வானூர், டிச. 1: வானுார் தாலுகா திருச்சிற்றம்பலம் கூட்ரோடு இரும்பை ரோடு முதல் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (43). இவரது மனைவி மஞ்சுளா, (43) திருமணமாகி 21 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு, ராஜேஸ்வரி (21), வேல்விழி (18) இரு மகள்களும், அப்பு (15) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் ரமேஷிக்கும், மஞ்சுளாவிற்கும் அடிக்கடி பிரச்னை...
கடலூரில் கடல் சீற்றம்
கடலூர், நவ. 29: புயல் சின்னம் எதிரொலியாக கடலூரில் கடல் சீற்றமாக காணப்படுவதால், தேவனாம்பட்டினத்தில் கடல் நீர் உட் புகுந்தது. இதனால் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலூர் மாவட்டத்தில் இன்று அதிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயல் நாளை...
அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு
மங்கலம்பேட்டை, நவ. 29: பண்ருட்டியில் இருந்து விருத்தாசலத்திற்கு ஆலடி வழியாக நேற்று முன்தினம் இரவு அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. ஆலடி அடுத்த புதுப்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே இரவு 10 மணியளவில் வந்து கொண்டிருந்த போது பேருந்தின் பின்புற கண்ணாடியை மர்ம நபர் கல்லை வீசி உடைத்துவிட்டு தப்பியோடி விட்டார்.இதுகுறித்து அரசு பேருந்து...
கடலூர் அருகே வீட்டில் தனியாக இருந்த 6 வயது சிறுமியை சீரழித்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை
கடலூர், நவ. 29:கடலூர் அருகே வீட்டில் தனியாக இருந்த 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள வரகூர்பேட்டையை சேர்ந்தவர் ரவி (60), கூலி தொழிலாளி. இவர் கடந்த 2019ம் ஆண்டு அதே...