புதுச்ேசரியில் முக்கிய சந்திப்புகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய மேம்பாலங்கள் கொண்டுவரப்படும்
புதுச்சேரி, நவ. 28: புதுச்சேரியில் முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய மேம்பாலங்கள் கொண்டுவரப்படும் என்று முதல்வர் ரங்கசாமி கூறினார். புதுச்சேரி சட்டசபையில் உள்ள கேபினட் அறையில் நேற்று முதல்வர் நிருபர்களிடம் கூறியதாவது: பொதுமக்கள் எவ்வித சிரமமின்றி பாதுகாப்பாக இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு நிலை புயலாக மாறி...
சிறுவர்களுக்கு கஞ்சா விற்ற 3 பேர் கைது
புதுச்சேரி, நவ. 28: புதுச்சேரி கோரிமேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி அருகே இளைஞர்கள் சிலர் சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு ெசன்றனர். அப்போது இளைஞர்கள் போலீசாரை பார்த்துடன் தப்பி செல்ல முயன்றனர். அவர்களை போலீசார்...
மெக்கானிக் திடீர் சாவு போலீசார் விசாரணை
விக்கிரவாண்டி, நவ. 27: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தெற்கு தெருவை சேர்ந்தவர் சந்திரசேகரன்(40). இவர் விக்கிரவாண்டி அடுத்த சிறுவள்ளிக்குப்பம் பஸ் ஸ்டாப் அருகே உள்ள மெக்கானிக் ஷாப்பில் மெக்கானிக் வேலை பார்த்து வந்தார். நேற்றுமுன்தினம் மெக்கானிக் ஷாப்பில் சந்திரசேகரன் வேலை செய்து கொண்டிருந்த போது, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதை பார்த்த அருகில்...
சிதம்பரம் நடராஜர் கோயிலில் மலையாள நடிகர் ஜெயராம் சாமி தரிசனம்
சிதம்பரம், நவ. 27: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற நடராஜர் கோவிலில் நேற்று மலையாள திரைப்பட நடிகர் ஜெயராமன் குடும்பத்துடன் வந்திருந்து சாமி தரிசனம் செய்தார். முன்னதாக கீழ சன்னதி வழியாக வருகை தந்த நடிகருக்கு கோயில் பொது தீட்சிர்கள சார்பாக மரியாதை செய்து அழைத்து சென்றனர். அதனைத் தொடர்ந்து கோவிலுக்குள் சென்ற...
கனமழை எச்சரிக்கை விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் ரத்து
கடலூர், நவ. 27: கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நவம்பர் மாத விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் வரும் 28ம் தேதி புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறுவதாக இருந்தது. தற்போது விடுக்கப்பட்டுள்ள வானிலை அறிக்கையின்படி கடலூர் மாவட்டத்தில் 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும்...
கல்வராயன்மலையில் திடீர் மூடுபனி
கல்வராயன்மலை, நவ. 26: கல்வராயன்மலையில் நேற்று அதிகாலை திடீர் பனிப்பொழிவு இருந்ததால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலை பகுதியில் வெள்ளிமலை, வஞ்சிகுழி, மூலக்காடு, கரியாலூர், கிளாக்காடு, சின்ன திருப்பதி, சேராப்பட்டு உள்ளிட்ட 177 சிறிய மற்றும் பெரிய கிராமங்கள் உள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக பருவ மழை பெய்து...
விழுப்புரம் ரயில்நிலையம் அருகே கஞ்சா விற்ற வாலிபர் அதிரடி கைது
விழுப்புரம், நவ. 26: விழுப்புரம் ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். விழுப்புரம் ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்பனை செய்வதாக வந்த புகாரின்பேரில் நகர காவல் நிலைய போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தபோது முன்னுக்குபின்...
கல்குவாரியில் அழுகிய நிலையில் மூதாட்டி சடலம் மீட்பு
மேல்மலையனூர், நவ. 26: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அடுத்த சாத்துபுத்தூர் கிராமத்தில கல்குவாரி உள்ளது. இந்த கல்குவாரி பகுதியில் நேற்று சுமார் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி சடலம் கிடந்தது. அங்கு துர்நாற்றம் வீசியதால் அப்பகுதியில் ஆடு மேய்த்தவர்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் இதுகுறித்து மேல்மலையனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து...
விஜய் பேசுவது சினிமா வசனங்கள் ஜெகத்ரட்சகன் எம்பி தாக்கு
புதுச்சேரி, நவ. 25: சினிமாவில் பேசும் வசனங்கள் போன்று நடிகர் விஜய் பேசுகிறார் என ெஜகத்ரட்சகன் எம்பி கூறினார். புதுச்சேரியில் திமுக சார்பில், மாநில அமைப்பாளர் சிவா தலைமையில் மண்ணாடிப்பட்டு, திருபுவனை, நெட்டப்பாக்கம், மற்றும் மங்கலம் உள்ளிட்ட 4 தொகுதிகளில் 4ம் கட்ட திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டு...