கல்குவாரியில் அழுகிய நிலையில் மூதாட்டி சடலம் மீட்பு
மேல்மலையனூர், நவ. 26: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அடுத்த சாத்துபுத்தூர் கிராமத்தில கல்குவாரி உள்ளது. இந்த கல்குவாரி பகுதியில் நேற்று சுமார் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி சடலம் கிடந்தது. அங்கு துர்நாற்றம் வீசியதால் அப்பகுதியில் ஆடு மேய்த்தவர்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் இதுகுறித்து மேல்மலையனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து...
விஜய் பேசுவது சினிமா வசனங்கள் ஜெகத்ரட்சகன் எம்பி தாக்கு
புதுச்சேரி, நவ. 25: சினிமாவில் பேசும் வசனங்கள் போன்று நடிகர் விஜய் பேசுகிறார் என ெஜகத்ரட்சகன் எம்பி கூறினார். புதுச்சேரியில் திமுக சார்பில், மாநில அமைப்பாளர் சிவா தலைமையில் மண்ணாடிப்பட்டு, திருபுவனை, நெட்டப்பாக்கம், மற்றும் மங்கலம் உள்ளிட்ட 4 தொகுதிகளில் 4ம் கட்ட திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டு...
யார்... முக்கிய தலைவர்...? செங்கோட்டையன், மனோஜ் பாண்டியன் எல்லாம் அதிமுகவே கிடையாது
விழுப்புரம், நவ. 25: அதிமுகவில் முக்கிய தலைவர்கள் மாற்றுக் கட்சியில் இணைவது குறித்து கேள்விற்கு கோபமான சி.வி.சண்முகம் எம்பி, யார்... முக்கிய தலைவர்... செங்கோட்டையன், மனோஜ் பாண்டியன் எல்லாம் அதிமுகவே கிடையாது என்று கூறியுள்ளார். தமிழகத்தில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல்கள் காரணமாக மூத்த நிர்வாகிகள் பலரும் மாற்றுக்கட்சியில் இணைந்து வருகின்றனர். பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி...
தமிழ்நாட்டின் மீது பற்றுபோல் போலி நாடகத்தை நடத்தும் பிரதமர் மோடி வைகோ ஆவேசம்
புவனகிரி, நவ. 22: தமிழ்நாட்டின் மீது பற்று இருப்பது போல் போலி நாடகத்தை பிரதமர் மோடி நடத்துக்கிறார் என மதிமுக பொதுசெயலாளர் வைகோ ஆவேசமாக கூறியுள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஜனவரி மாதம் சமத்துவ நடைபயணம் மேற்கொள்ள இருப்பதையொட்டி தொண்டர்களை தேர்வு செய்யும் நிகழ்ச்சி புதுச்சத்திரம் அருகே ஆணையம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் விடுதியில்...
மங்கலம்பேட்டை அருகே சோகம் வீடு தீ பிடித்து எரிந்து மாற்றுத்திறனாளி கருகி பலி
மங்கலம்பேட்டை, நவ. 22: மங்கலம்பேட்டை அருகே வீடு தீப்பிடித்து எரிந்து மாற்றுத்திறனாளி கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை அருகே எடசித்தூர் கிராமத்தில் பட்டியலின மக்களின் குலதெய்வமான இருசாயி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு அருகில் அதே ஊரைச் சேர்ந்த முருகேசன் மகன் அழகேசன் (50) என்கிற மாற்றுத்திறனாளி...
போலி இ-சலான், பிரதம யோஜனா செயலி அனுப்பி நூதன முறையில் 8 பேரிடம் ரூ.9.56 லட்சம் மோசடி
புதுச்சேரி, நவ. 22: போலி இ-சலான், பிரதம யோஜனா செயலி அனுப்பி, புதுச்சேரியில் பெண்கள் உட்பட 8 பேரிடம் ரூ.9.56 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த ஆண் நபர் ஒருவரை, மர்ம நபர்கள் அவரது பங்குசந்தை குரூப்பில் இணைந்து, எவ்வாறு முதலீடு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இதனை நம்பி, மேற்கூறிய...
10வது முறையாக பதவியேற்றுள்ள பீகார் முதல்வருக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வாழ்த்து
புதுச்சேரி, நவ. 21: பீகார் முதல்வராக மீண்டும் பதவியேற்ற நிதிஷ்குமாருக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அனுப்பியுள்ள வாழ்த்து கடிதத்தில் கூறியிருப்பதாவது: பீகார் முதல்வராக 10வது முறையாகப் பதவியேற்றதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மகத்தான சாதனை, பீகார் மக்கள் உங்கள் தலைமை, தொலைநோக்குப் பார்வை மற்றும் பொதுச்சேவைக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றில்...
காலாப்பட்டு, கோட்டக்குப்பம் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை
காலாப்பட்டு, நவ. 21: மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு கடல் வழி தாக்குதல் நடந்ததை அடுத்து, கடலோர பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக சாகர் கவாச் மற்றும் ஆபரேஷன் ஆம்லா போன்ற தலைப்புகளில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். ஆண்டிற்கு 2 முறை இது போன்று பாதுகாப்பு ஒத்திகை நாடு முழுவதும் உள்ள கடலோர...
விசாரணை கைதி திடீர் சாவு
கடலூர், நவ. 21: கடலூர் மத்திய சிறைச்சாலையில் கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (58) என்பவர், மத்திய சிறைச்சாலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் விசாரணை கைதியாக இருந்து வருகிறார். இந்நிலையில் பாலகிருஷ்ணனுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த சில தினங்களுக்கு முன்...