மங்கலம்பேட்டை அருகே சோகம் வீடு தீ பிடித்து எரிந்து மாற்றுத்திறனாளி கருகி பலி
மங்கலம்பேட்டை, நவ. 22: மங்கலம்பேட்டை அருகே வீடு தீப்பிடித்து எரிந்து மாற்றுத்திறனாளி கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை அருகே எடசித்தூர் கிராமத்தில் பட்டியலின மக்களின் குலதெய்வமான இருசாயி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு அருகில் அதே ஊரைச் சேர்ந்த முருகேசன் மகன் அழகேசன் (50) என்கிற மாற்றுத்திறனாளி...
போலி இ-சலான், பிரதம யோஜனா செயலி அனுப்பி நூதன முறையில் 8 பேரிடம் ரூ.9.56 லட்சம் மோசடி
புதுச்சேரி, நவ. 22: போலி இ-சலான், பிரதம யோஜனா செயலி அனுப்பி, புதுச்சேரியில் பெண்கள் உட்பட 8 பேரிடம் ரூ.9.56 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த ஆண் நபர் ஒருவரை, மர்ம நபர்கள் அவரது பங்குசந்தை குரூப்பில் இணைந்து, எவ்வாறு முதலீடு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இதனை நம்பி, மேற்கூறிய...
10வது முறையாக பதவியேற்றுள்ள பீகார் முதல்வருக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வாழ்த்து
புதுச்சேரி, நவ. 21: பீகார் முதல்வராக மீண்டும் பதவியேற்ற நிதிஷ்குமாருக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அனுப்பியுள்ள வாழ்த்து கடிதத்தில் கூறியிருப்பதாவது: பீகார் முதல்வராக 10வது முறையாகப் பதவியேற்றதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மகத்தான சாதனை, பீகார் மக்கள் உங்கள் தலைமை, தொலைநோக்குப் பார்வை மற்றும் பொதுச்சேவைக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றில்...
காலாப்பட்டு, கோட்டக்குப்பம் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை
காலாப்பட்டு, நவ. 21: மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு கடல் வழி தாக்குதல் நடந்ததை அடுத்து, கடலோர பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக சாகர் கவாச் மற்றும் ஆபரேஷன் ஆம்லா போன்ற தலைப்புகளில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். ஆண்டிற்கு 2 முறை இது போன்று பாதுகாப்பு ஒத்திகை நாடு முழுவதும் உள்ள கடலோர...
விசாரணை கைதி திடீர் சாவு
கடலூர், நவ. 21: கடலூர் மத்திய சிறைச்சாலையில் கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (58) என்பவர், மத்திய சிறைச்சாலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் விசாரணை கைதியாக இருந்து வருகிறார். இந்நிலையில் பாலகிருஷ்ணனுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த சில தினங்களுக்கு முன்...
எதிரியை ஓட, ஓட விரட்டி வெட்ட முயல்வதுபோல் இன்ஸ்டாகிராமில் ரவுடி போல் கத்தியுடன் ரீல்ஸ் வெளியிட்டவர் கைது
கடலூர், நவ. 19: கடலூர் முதுநகரில் கடந்த ஓராண்டாக முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த மூதாட்டி உயிரிழந்த நிலையில், சமூக வலைதளம் மூலம் அவரது மகனிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. கடலூர் முதுநகர் மீன் மார்க்கெட் பகுதியில் ஒரு வருடத்துக்கு முன்பு மூதாட்டி ஒருவர் ஆதரவற்ற நிலையில் சுற்றித்திரிந்தார். பொதுமக்கள் அவரிடம் விசாரித்தபோது, தனது பெயர் தமிழரசி என்றும்,...
திண்டிவனம் அருகே ரயில் தண்டவாளத்தை சேதம் செய்த 5 வடமாநில வாலிபர்கள் கைது
விழுப்புரம், நவ. 19: சென்னை காரைக்குடி பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 10ம் தேதி மாலை, சென்னையிலிருந்து புறப்பட்டு வந்தது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியை கடந்து வந்தபோது, திடீரென ரயில் இன்ஜினில் சத்தம் எழுந்ததால், விக்கிரவாண்டி அருகே எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டது. அப்போது, இன்ஜின் சக்கரத்தில் உடைப்பு இருந்ததால், உடனடியாக விழுப்புரத்திலிருந்து மாற்று இன்ஜின்...
திருபுவனையில் பரபரப்பு ரெஸ்டோ பார் திறப்புக்கு எதிர்ப்பு தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் மறியல்
திருபுவனை, நவ. 19: புதுச்சேரி- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் திருபுவனை மையப்பகுதியாக உள்ளது. இங்குள்ள சர்வீஸ் சாலையில் 2 மதுபான கடைகள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மேம்பாலம் அருகில் புதிதாக ரெஸ்டோ பார் ஒன்று திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதுபற்றி தகவலறிந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விசிக, தவெக உள்ளிட்ட கட்சியினர் ஒன்றுசேர்ந்து, அப்பகுதியில்...
எஸ்.ஐ. மீது தாக்குதல்
உளுந்தூர்பேட்டை, நவ. 18: விழுப்புரம் மாவட்டம் அரியூர் கண்டமானாடி பகுதியை சேர்ந்தவர் ஸ்டாலின் (33). சிறப்பு பிரிவு காவல் உதவி ஆய்வாளர். இந்நிலையில் ஒரு காரில் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் விழுப்புரத்திலிருந்து உளுந்தூர்பேட்டை நோக்கி சென்றார். உளுந்தூர்பேட்டை டோல்கேட் அருகில் சென்று கொண்டிருந்தபோது முன்னால் தாறுமாறாக காரை ஓட்டிச் சென்ற டிரைவரிடம் இதுகுறித்து ஏன்...