இரு தரப்பினர் மோதல் 17 பேர் மீது வழக்கு
கடலூர், ஜூலை 20: கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியை சேர்ந்தவர் விஜயபாலன். இவரும், கடலூர் தானம் நகர் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவரும் உறவினர்கள். இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் ஒரு வழக்கில் ராஜ்குமார் சிறைக்கு சென்று மீண்டும் வெளியே வந்துள்ளார். சம்பவத்தன்று முன்விரோதம் காரணமாக விஜயபாலனுக்கும் ராஜ்குமாருக்கும்...
கண்டாச்சிபுரம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த முதியவருக்கு 20 ஆண்டு சிறை
விழுப்புரம், ஜூலை 20: விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே சு.கொல்லூரை சேர்ந்தவர் கலியமூர்த்தி(57). இவர் கடந்த 2021ம் ஆண்டு 9ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டிலேயே இருந்து வந்த 16 வயது மதிக்கத்தக்க சிறுமியை அழைத்துச் சென்று பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் 2022 ஏப்ரல் 12ம் தேதி சிறுமிக்கு குழந்தை பிறந்தது. அப்போதுதான்...
மனநல காப்பகத்தில் வசித்த பெண் மாயம்
விழுப்புரம், ஜூலை 20: விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரில் சுதாகர் நகரில் தனியார் மனநல காப்பகம் செயல்பட்டு வருகிறது. இதனிடையே சுனிதா(49) என்பவர் பிறவியில் இருந்தே மனநலம் பாதிக்கப்பட்டு, அங்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக தங்கி இருந்துள்ளார். இதனிடையே நேற்று மனநல காப்பகத்தின் காப்பாளர் விஜயலட்சுமி மற்றும் ஊழியர்கள் மளிகை கடைக்கு செல்ல...
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளர்ச்சியை விரைவுபடுத்த ரூ.7000 கோடி என்எல்சி நிறுவன முதலீட்டிற்கு ஒன்றிய அரசு ஒப்புதல்
நெய்வேலி, ஜூலை 19: கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்திற்கு, பிரதமர் தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ஒரு முக்கிய ஒப்புதலை அளித்துள்ளது. தற்போதுள்ள பொதுத்துறை நிறுவனங்களுக்கான முதலீட்டு வழிகாட்டுதல்களில் இருந்து விலக்கு அளித்து, என்எல்சி அதன் முழு உரிமையுள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துணை நிறுவனமான என்எல்சி இந்தியா ரினியூபிள்ஸ் லிமிடெட்டில்...
நெய்வேலி அருகே பரபரப்பு காதல் விவகாரத்தில் அக்கா, தங்கைக்கு கத்தி குத்து
நெய்வேலி, ஜூலை 19: நெய்வேலி அருகே காதல் விவகாரத்தில் அக்கா, தங்கையை கத்தியால் குத்திய வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பம் அடுத்த ரோமாபுரி கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். அப்போது...
திட்டக்குடியில் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு அதிரடி அகற்றம்
திட்டக்குடி, ஜூலை 19: திட்டக்குடியில் வைத்தியநாதசுவாமி கோயில் உள்ளது. கோயிலுக்கு சொந்தமாக 150 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ளது. இந்நிலையில் கூத்தப்பன்குடிக்காடு பகுதியில் கோயிலுக்கு சொந்தமான இடத்தினை அப்பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியும், வால் பட்டறை, கடைகள் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கோயிலுக்கு சொந்தமான இடத்தை...
சிறுமி தற்கொலை முயற்சி
கடலூர், ஜூலை 18: கடலூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி பிளஸ் 2 படித்துள்ளார். இவர் தனது பாட்டி வீட்டில் தங்கி இருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறி இருவரும் ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று சிறுமியின்...
சிறுமிக்கு பாலியல் தொல்லை சித்தப்பா மீது போக்சோ வழக்கு
கள்ளக்குறிச்சி, ஜூலை 18: கள்ளக்குறிச்சி அருகே 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில் சித்தப்பா மீது போக்சோ வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி அருகே உள்ள புக்கிரவாரி கிராமத்தை சேர்ந்த ராஜூ மகன் ராமர்(34), இவர் திருமணம் ஆகாதவர். இவரது அண்ணன் மகளுக்கு (15வயது),...
கள்ளக்குறிச்சி பஸ்நிலையத்தில் பெண்ணிடம் நகை, பணம் திருட்டு
கள்ளக்குறிச்சி, ஜூலை 18: கள்ளக்குறிச்சி பஸ்நிலையத்தில் பெண்ணிடம் நகை, பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடிவருகின்றனர். கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் மனைவி சாந்தி(45). சம்பவத்தன்று இவர் கள்ளக்குறிச்சி சேலம் மெயின்ரோடு பகுதியில் உள்ள ஒரு நகை அடகு கடையில் அடகு வைத்திருந்த அரைபவுன் நகையை மீட்டு கொண்டு...