பெண் மாயம்
புவனகிரி, நவ. 11: புதுச்சத்திரம் அருகே உள்ள சிலம்பிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மனைவி சந்தியா(26). இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு புவனகிரி செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. அதனால் பல இடங்களில் தேடிப் பார்த்தும் சந்தியா கிடைக்கவில்லை. இதையடுத்து சம்பவம் குறித்து அவரது கணவர் ஜெயராமன் புதுச்சத்திரம் காவல் நிலையத்தில்...
சிறுமி கர்ப்பம்: வாலிபர் மீது போக்சோ வழக்கு
பண்ருட்டி, நவ. 11: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள சேடப்பாளையத்தை சேர்ந்தவர் அஜய் (20). இவர் தற்போது நெல்லிக்குப்பம் ரத்தினம் பிள்ளை தெருவில் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். கடந்த ஜூலை மாதம் நெல்லிக்குப்பம் அங்காளம்மன் கோயிலில்...
பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்
கடலூர், நவ. 11: கடலூர் மஞ்சக்குப்பம் இளம்வழுதி நகரை சேர்ந்தவர் ரமேஷ் மனைவி மலர்விழி (30). இதே ஊரைச் சேர்ந்தவர் அன்பு என்கின்ற ராதாகிருஷ்ணன். இவர்கள் இருவருக்கும் பக்கத்து பக்கத்தில் வீட்டுமனை உள்ளது. இருவருக்கும் வீட்டுமனை அளப்பது சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. தற்பொழுது, மலர்விழி அவரது இடத்தில் வீடு கட்டிக்கொண்டு இருக்கிறார். இந்நிலையில் சம்பவத்தன்று...
ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்
வடலூர், நவ. 7: வடலூர் பார்வதிபுரம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்(62). இவர் ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளர். கடந்த ஜனவரி மாதம் 26ம் தேதி அவரது வீட்டின் அருகில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் 200 குடும்பங்கள் செல்வதற்கான வழிபாதையை செம்மண் அடித்து சீர் செய்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை...
மீண்டும் பணி வழங்கக்கோரி வடிசாராய ஆலை ஊழியர்கள் தேசிய நெடுஞ்சாலையில் மறியல்
புதுச்சேரி, நவ. 7: புதுச்சேரி வடிசாராய ஆலை பணி நீக்க ஊழியர்கள், தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி அடுத்த ஆரியபாளையத்தில் அரசுக்கு சொந்தமான வடிசாராய ஆலை உள்ளது. இந்த ஆலையில் கடந்த 2009ம் ஆண்டில் 53 ஊழியர்கள் நேரடியாக நியமிக்கப்பட்டு, பணி...
நுகர்பொருள் வாணிப கழக தரக்கட்டுப்பாடு இளநிலை ஆய்வாளர் பணியிடை நீக்கம்
விருத்தாசலம், நவ. 7: கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் விருத்தாசலம் பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை விருத்தாசலத்தில் அமைந்துள்ள அரசு சேமிப்பு கிடங்கிற்கு லாரிகளில் ஏற்றி கொண்டுவரப்பட்டு மூட்டைகளை இறக்காமல் லாரிகளிலேயே நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது பெய்த கனமழையின் காரணமாக லாரிகளிலிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து...
பேருந்து நிலையத்தில் ரகளை செய்த பண்ருட்டி நபர் கைது
புதுச்சேரி, நவ. 6: புதுச்சேரி உருளையன்பேட்டை உதவி சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் புதிய பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கடலூர் பேருந்துகள் நிற்கும் இடத்தில் ஒரு ஆண் குடிபோதையில் தகாத வார்த்தைகளை பேசி பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்துள்ளார். போலீசாரை பார்த்ததும் அவர், அங்கிருந்து தப்பியோட முயன்றார். போலீசார் அவரை...
சிறைக்கு செல்ல பயந்து போக்சோ வழக்கு ரவுடி விஷம் குடித்து தற்கொலை
புதுச்சேரி, நவ. 6: புதுச்சேரி அடுத்த கோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சரத் (எ) சரத்ராஜ் (26). இவர் மீது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 கொலை, அடிதடி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. இதற்கிடையே கடந்த 2021ல் புதுச்சேரி உருளையன்பேட்டை பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு அந்த...
தாம்பரம்- விழுப்புரம் பயணிகள் ரயில் ரத்து
திண்டிவனம், நவ. 6: தாம்பரத்திலிருந்து தினந்தோறும் பயணிகள் ரயில் காலை 9.40 மணியளவில் செங்கல்பட்டு, திண்டிவனம், மயிலம், பேரணி வழியாக சென்று 1.30 மணியளவில் விழுப்புரம் சென்றடையும். மீண்டும் விழுப்புரத்திலிருந்து அந்த ரயில் காலை 5.45 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்திற்கு காலை 8.20 மணிக்கு சென்றடைவது வழக்கம். இந்த நிலையில் திண்டிவனம் பகுதிகளில் ரயில்வே தண்டவாளம்...