ராணுவ பணிக்கு தேர்வு
கோவை, செப். 15: ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நேற்று ஒருங்கிணைந்த ராணுவ தேர்வுகள் (தொகுதி-II) கோவையில் 4 மையங்களில் நடைபெற்றது. இதனை அரசுப் பணியாளர் தேர்வாணைய மாவட்ட ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர் மற்றும் கோவை மாவட்ட கலெக்டர் தலைமையில் துணை கலெக்டர் நிலையில் இரண்டு உதவி ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர்கள், வட்டாட்சியர் நிலையில் 4 தேர்வு மையங்களுக்கு...
வனப்பகுதி தோட்டங்களில் விதி மீறல்கள் கண்டறிய உத்தரவு
கோவை,செப். 14: கோவை மாவட்டத்தில் வனப்பகுதி தோட்டங்களில் விதிமீறல்களை கண்டறிய உத்தரவிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், சூரிய மின்வேலியில் நேரடியாக மின்சாரத்தை பயன்படுத்துவது பல்வேறு இடங்களில் நடக்கிறது. கோவை வன கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் நேரடி மின்சாரம் பயன்படுத்திய நிலையில், மின் வேலியில் சிக்கி யானைகள் இறப்பது அவ்வப்போது நடக்கிறது. வன எல்லை கிராமங்களில் விவசாய தோட்டம்,...
எட்டிமடையில் நகை வியாபாரியிடம் ரூ.1.25 கோடி தங்கம் வழிப்பறி: மேலும் 3 பேர் கைது
மதுக்கரை.செப்.14. கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள பாலக்கல்லை சேர்ந்த நகை வியாபாரி ஜெய்சங்க ஜேக்கப் (55). இவர் கடந்த ஜூன் 14ம் தேதி ரூ.1.25 கோடி தங்க கட்டிகளுடன் தனது ஊழியர் விஷ்ணு என்பவரை அழைத்துக்கொண்டு கோவை வழியாக திருச்சூர் காரில் புறப்பட்டார். மதுக்கரை அடுத்த எட்டிமடை அருகே 5 பேர் கும்பல் லாரியை...
காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை
கோவை,செப். 14: கோவை மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை காடுவெட்டிபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (15ம் தேதி) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை காடுவெட்டிபாளையம், நல்லகவுண்டம்பாளையம், மோளக்காளிபாளையம், செலம்பராயம்பாளையம், பாப்பம்பட்டி, சந்திராபுரம்,...
தபால் குறைதீர்ப்பு கூட்டம்
கோவை, செப்.13 : கோவை அஞ்சல் துறை முதுநிலை கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘‘டாக் அதாலத் என்ற மண்டல அளவிலான தபால் குறைதீர்ப்பு கூட்டம் கூட்ஸ்செட் சாலையில் உள்ள மூதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறும். கோவை மண்டலத்திற்கு உட்பட்ட அஞ்சல் துறையில் உள்ள குறைகள் மற்றும் புகார்களை வாடிக்கையாளர்கள் இந்த அலுவலகத்திற்கு...
கோவையில் இன்று தேசிய லோக் அதாலத்
கோவை, செப். 13: தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) இன்று (சனிக்கிழமை) நாடு முழுவதும் நடைபெற உள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்ற துவக்க விழா இன்று காலை 9.30 மணிக்கு கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள...
அடையாளம் தெரியாத ஆண் சடலம்
கோவை, செப்.13 : கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கிழக்கு லோகமான்யா தெருவில் உள்ள சிட்டி பிளைவுட் கடையின் முன்பு கடந்த ஆகஸ்ட் 27 ம் தேதி அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் ரத்தக்கறையுடன் இறந்த நிலையில் கிடந்தார். இதுதொடர்பாக ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அந்த நபர் 65 வயது...
தனியார் பூச்சி மருந்து நிறுவனத்தில் அதிகாரிகள் ஆய்வு
மதுக்கரை, செப்.12: கோவை மாவட்டம், மதுக்கரை வட்டாரத்தில் உள்ள மலுமிச்சம்பட்டி பகுதியில் ஒரு தனியார் பூச்சிமருந்து உற்பத்தி செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் வேளாண்மை தரக்கட்டுப்பாடு உதவி இயக்குநர்கள், கலைச்செல்வி, சக்திவேல், தரக்கட்டுபாடு அலுவலர்கள் சீதா, செல்வி. உமா மகேஸ்வரி ஆகியோர் கொண்ட குழுவினர், பூச்சி மருந்து உற்பத்தி நிலையத்தின் மூலக்கூறு மற்றும்...
ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கு ஹேக்கத்தான் நிகழ்ச்சி
கோவை, செப்.12 : கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் நுண்ணுயிரியல்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான ஹேக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சித்ரா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் நிலையான வளர்ச்சி இலக்குகள் குறித்த மாதிரிகள் மற்றும் யோசனைகளை முன்வைத்தனர். கோவை மண்டல அறிவியல் மையத்தின்...