11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அசல் சான்றிதழ் இன்று முதல் பள்ளிகளில் விநியோகம்
கோவை, ஆக. 7: தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்தது. இந்த தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியிடப்பட்டது. இதில், கோவை மாவட்டத்தில் 11ம் வகுப்பு தேர்வை 366 பள்ளிகளை சேர்ந்த மொத்தம் 36 ஆயிரத்து 82 மாணவ, மாணவிகள் எழுதினர். பிளஸ் 2 தேர்வை...
ரேஷன் அரிசி முறைகேடு; விற்பனையாளர் சஸ்பெண்ட்
கோவை, ஆக.7: கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு ரேஷன் கடையில் முறைகேடாக தனி நபர்களுக்கு அரிசி விற்கப்படுவதாக பொதுமக்கள் தரப்பில் இருந்து புகார் வந்தது. இது தொடர்பாக கூட்டுறவு சங்க சார் பதிவாளர்கள் ஆய்வு செய்தனர். இதில் முறைகேடாக அரிசி கையாண்ட விற்பனையாளர் சாந்தாமணி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இவர் பணியாற்றிய கடைகளில் உணவு பொருட்கள்...
கொடி நாளில் அதிக நிதி வசூல் ஊராட்சி உதவி இயக்குநருக்கு கலெக்டர் பாராட்டு சான்று
கோவை, ஆக.6: கோவை மாவட்டத்தில் பல்வேறு அரசு துறையினர் கொடி நாள் நிதி வசூல் செய்ய உத்தரவிடப்பட்டது. இதற்கு இலக்கு வைத்து நிதி வசூல் செய்யப்பட்டு வந்தது. இதில், கோவை மாவட்ட ஊராட்சி நிர்வாகத்தினர் 12.65 லட்சம் ரூபாய் வசூல் செய்தனர். 12 லட்சம் ரூபாய் இலக்கு வைத்த நிலையில் கூடுதலாக நிதி வசூல் செய்து...
அன்னூர் பேரூராட்சியில் குடிநீரில் கழிவுநீர் கலப்பதை கண்டித்து மக்கள் போராட்டம்
அன்னூர், ஆக.6: அன்னூர் பேரூராட்சியில் 5-வது வார்டில், சத்தி ரோட்டில் சில வீடுகளில் கழிவுநீர் குடிநீருடன் கலந்து வருவதாக கடந்த இரு வாரங்களாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கட்டபொம்மன் நகரில் மின் மோட்டார் பழுதானதால் 15 நாட்களாக போர்வெல் நீர் வழங்கப்படவில்லை. இதுகுறித்து புகார் செய்தும் நடவடிக்கை இல்லை எனக்கூறி, நேற்று மாலை...
கல்லூரி மாணவர்கள் அறைக்குள் புகுந்து செல்போன், லேப்டாப் பறிப்பு: 4 பேர் கும்பலுக்கு கைவரிசை
கோவை, ஆக 6: கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர்கள் அறைக்குள் புகுந்து செல்போன், லேப்டாப்பை பறித்து தப்பிய 4 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். கேரளாவை சேர்ந்தவர் ஆதித்ய நாராயணன் (18). இவர் பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது அறையில், நண்பர்கள் ஹரி பெருமாள், ஸ்ரீஹரி...
சர்வதேச பளு தூக்கும் போட்டிக்கு கோவை டாஸ்மாக் ஊழியர் தேர்வு
கோவை, ஆக.5: தேசிய மற்றும் சர்வதேச அளவிலான பளு தூக்கும் போட்டியில் பங்கேற்க தகுதி தேர்வு போட்டி ராஜஸ்தானில் சமீபத்தில் நடந்தது. இதில், இந்தியா முழுவதும் இருந்து 300க்கும் மேற்பட்ட பளு தூக்கும் வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர். யூத், சப் ஜூனியர்ஸ் மற்றும் மாஸ்டர்ஸ் பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. இதில், தமிழகம் சார்பில்...
மாநகராட்சி மக்கள் குறைதீர் கூட்டம் இன்று ரத்து
கோவை, ஆக.5: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும். மாநகராட்சி மேயர் ரங்கநாயகி தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில், பொதுமக்கள் தங்களது பகுதியில் சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் குறித்து மனு அளிக்கின்றனர். இதேபோல், இன்று மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற இருந்த...
வேளாண் பல்கலை.யில் உயிர்ம வேளாண் பயிற்சி
கோவை, ஆக. 5: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் சார்பில் ஒரு நாள் உயிர்ம வேளாண்மை பயிற்சி வரும் 7ம் தேதி அளிக்கப்படுகிறது. பயிற்சி கட்டணம் ரூ.700 ஆகும். இந்த பயிற்சிக்கு முன்பதிவு செய்ய 0422 2455055/ 6611206 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது பயிற்சிக்கு...
கேஸ் அடுப்பு வெடித்து மூதாட்டி பரிதாப பலி
கோவை, ஆக. 4: கோவை ஆர்எஸ் புரம் அடுத்த சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் மாரியம்மாள் (85). இவர் தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டில் கேஸ் அடுப்பில் வெந்நீர் வைத்துள்ளார். பின்னர் அதனை அணைக்க மறந்து விட்டார். இதனால் கேஸ் அடுப்பு வெடித்து மாரியம்மாள் படுகாயம் அடைந்தார். தகவலறிந்து வந்த அவரது மகன் மனோகர்,...