மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் மிதந்த ஆண் சடலம் மீட்பு
மேட்டுப்பாளையம், அக்.14: மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுப்பாலத்தின் அடியில் பாறை இடுக்கில் ஆண் சடலம் ஒன்று சிக்கி இருப்பதாக நேற்று போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னக்காமனனுக்கு தகவல் வந்தது. அதன்பேரில், விரைந்து சென்ற எஸ்.ஐ ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலத்தை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உதவியுடன் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு...
காட்டு தேனீ கொட்டியதில் 10 பக்தர்கள் காயம்
தொண்டாமுத்தூர், அக்.13: பேரூர் அருகே தீத்திபாளையம் பெருமாள் குன்றில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சாமி கும்பிட சென்ற பக்தர்களை காட்டு தேனீக்கள் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம், பேரூர் அருகே தீத்திபாளையம் பெருமாள் குன்றில் உள்ள பெருமாள் கோயிலுக்கு கடைசி சனிக்கிழமையான நேற்று முன்தினம் பக்தர்கள் சாமி கும்பிட சென்றனர். அன்னதானம் நடைபெற்ற...
பஸ் மோதி வாலிபர் பலி
கோவை,அக்.13: கோவை நஞ்சப்பா ரோடு பார்க்கேட் அருகே நேற்று வாலிபர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சத்தியமங்கலத்தில் இருந்து கோவை காந்திபுரம் நோக்கி வந்த தனியார் பஸ் எதிர்பாராத விதமாக வாலிபர் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த...
காங்கிரஸ் சிறுபான்மை துறை சார்பில் ஓட்டு திருட்டை கண்டித்து கையெழுத்து இயக்கம்
கோவை, அக். 13: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஒன்றிய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்தின் ஓட்டு திருட்டை கண்டித்து மாபெரும் கையெழுத்து இயக்கம் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை சார்பில் சிறுபான்மை துறை தேசிய ஒருங்கிணைப்பாளரும், ஆந்திர பிரதேசம் பொறுப்பாளருமான டென்ஸ்டன்...
தீபாவளி கூட்டம்: அவுட் போஸ்டில் கண்காணிப்பு
கோவை, அக்.12: கோவை நகரில் சட்ட விரோத செயல்கள், திருட்டு, சட்டம் ஒழுங்கு பாதிப்புகளை தவிர்க்க கண்காணிப்பு பணி நடக்கிறது. தீபாவளியை முன்னிட்டு கடந்த காலங்களில் செயல்படாமல் சும்மா கிடந்த புறக்காவல் நிலையங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவிடப்பட்டுள்ளது. நகரில் 70க்கும் மேற்பட்ட புறக்காவல் நிலையங்கள் இருக்கிறது. உக்கடம், கோட்டை மேடு, கரும்புக்கடை, போத்தனூர், செல்வபுரம்,...
கட்டிடம், மனை அபிவிருத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி
கோவை, அக். 12: தமிழ்நாடு கட்டிடம் மற்றும் மனை ஒழுங்குமுறை ஆணையம் சார்பில், கட்டிடம் மற்றும் மனை அபிவிருத்தி செய்யும் மேம்பாட்டாளர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவையில் நேற்று நடந்தது. ஒழுங்குமுறை ஆணைய தலைவர் சிவ்தாஸ் மீனா தலைமை தாங்கி, விழிப்புணர்வு கையேடு வெளியிட்டார். ஆணைய உறுப்பினர்கள் சுப்பிரமணியம், கிருஷ்ணமூர்த்தி, ஜெகநாதன், சுகுமார் சிட்டி பாபு, மாநகராட்சி...
கிராம சபை கூட்டத்தில் சாலை பாதுகாப்பு உறுதிமொழி
கோவை, அக். 12: கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிட்டாம்பாளையம் ஊராட்சியில் நேற்று கிராம சபா கூட்டம் நடந்தது. ஊராட்சி செயலர் மாருக்குட்டி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வி.எம்.சி.சந்திரசேகர் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில், சமூக நலத்துறை அதிகாரி நீலவேணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.இக்கூட்டத்தில், “வினோப நகரில் சுமார் 500க்கும் மேற்பட்ட...
மண்ணுளி பாம்பு மீட்பு
கோவை, அக்.11: கோவை மாவட்டம் ஆனைகட்டி சாலையில் உள்ள கோவில்மேடு பகுதியில் சாலையோரத்தில், நேற்று முன்தினம் இரவு இரண்டரை அடி நீளமுள்ள ஒரு மண்ணுளி பாம்பு இருந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் கீரின் கேர் என்ற தன்னார்வ அமைப்பினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், அப்பகுதிக்கு சென்ற அவ்வமைப்பினர் மண்ணுளி பாம்பினை பத்திரமாக மீட்டனர்....
மாநகராட்சியில் 14ம் தேதி மாமன்ற கூட்டம்
கோவை, அக். 11: கோவை மாநகராட்சியில் மாதந்தோறும் மாமன்ற கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். இதேபோல், வருகிற 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) சாதாரண மாமன்ற கூட்டம், மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள விக்டோரியா ஹால் கூட்டரங்கில் நடைபெற உள்ளது. கூட்டம் காலை 10.30 மணிக்கு துவங்குகிறது. மேயர் ரங்கநாயகி தலைமை தாங்குகிறார். மாநகராட்சி கமிஷனர்...