உலகப் புத்தொழில் மாநாடு ஒரு உலகத் தரமான நிகழ்வு
கோவை, அக்.10 : கோவை கொடிசியாவில் நடைபெறும் உலகப் புத்தொழில் மாநாடு தொடர்பாக சின்னவேடம்பட்டி தொழில் கூட்டமைப்பின் தலைவர் தேவக்குமார் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, ‘‘உலகப் புத்தொழில் மாநாடு ஒரு உலகத் தரமான நிகழ்வு. இதில் முக்கிய தொழில் பிரதிநிதிகளுடன் ஹொழில் இணைப்பு வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்தது. இம்மாநாடு...
மண்டல ஹாக்கி போட்டியில் ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூரி வெற்றி
கோவை, அக். 10: கோவை நீலாம்பூர் எல் அண்ட் டி பைபாஸ் சாலையில் உள்ள ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள், அண்ணா பல்கலைக்கழக 9வது மண்டல அளவிலான ஆண்கள் ஹாக்கி போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. கடந்த 27ம் தேதி கோவை சிஐடி கல்லூரியில் மண்டல அளவிலான ஹாக்கி...
741 தமிழ் எழுத்துகளுடன் முதல்வர் உருவப்படம்
கோவை,அக்.10:கோவையில் நடந்த நிகழ்ச்சியில் 741 தமிழ் எழுத்துகளுடன் வரையப்பட்ட முதல்வர் உருவப்படத்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் கணேஷ்(30). தமிழ் எழுத்து ஓவியர். இவர் கடந்த 2021ம் ஆண்டு தமிழி எழுத்து,வட்டெழுத்து என கி.பி. 3ம் நூற்றாண்டில் இருந்து இன்றைய தமிழ் எழுத்துகள் வரை உள்ள 741 தமிழ் எழுத்துகளை...
கோவையில் “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாம்
கோவை, அக். 9: கோவை மாநகராட்சி சார்பில், தமிழக முதல்வரின் “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ சேவை முகாம் தெற்கு மண்டலம் 87வது வார்டுக்கு உட்பட்ட குனியமுத்தூர் பாலக்காடு மெயின்ரோடு ஆயிஷா மஹாலில் நாளை மறுதினம் (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை...
கேஎம்சிஎச் மருத்துவமனை சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு
கோவை, அக். 9: கோவையில் உள்ள கேஎம்சிஎச் மருத்துவமனையில் புற்றுநோய்க்கு என ஒருங்கிணைந்த புற்றுநோய் மையம் மற்றும் பிரத்யேக மார்பக புற்றுநோய் மையம் செயல்படுகிறது. இந்நிலையில், கேஎம்சிஎச் மருத்துவமனை சார்பில் மார்பக புற்றுநோய் மாதத்தையொட்டி, பொதுமக்களிடையே மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் பிங்க் வண்ண...
மாநில கூடைப்பந்து போட்டி வீட்டில் நகை திருடிய வேலைக்கார பெண் கைது
கோவை, அக். 9: கோவை செல்வபுரம் அருகே உள்ள இந்திரா நகர் அருள்கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (40). இவரது வீட்டில் வடக்கு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வரும் புவனேஸ்வரி (24) என்பவர் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கிருஷ்ணகுமார் வீட்டில் இருந்த தங்க...
அவினாசி ரோடு மேம்பாலத்துக்கு ஜி.டி.நாயுடு பெயர் தமிழக முதல்வருக்கு தபெதிக நன்றி
கோவை, அக். 8: தந்தை பெரியார் திராவிடர் கழக (த.பெ.தி.க) பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை அவினாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்திற்கு அதிசய மனிதர் என்றும் இந்தியாவின் எடிசன் என்றும் மக்களால் போற்றப்பட்ட சுயமரியாதை இயக்கம் காலந்தொட்டு பெரியாரோடும், பெரியார் இயக்கத்தோடும் தோழமை கொண்டிருந்தவரும் கோவை தொழில் வளர்ச்சியில் மிகுந்த பங்காற்றியவரும் பல...
கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்
கோவை, அக். 8: கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். மின்வாரியத்தில் பணிபுரியும் கேங்மேன் பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாநிலம் முழுவதும் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில், கோவை மண்டல அளவிலான காத்திருப்பு போராட்டம் டாடாபாத்...
சிறுமிக்கு பாலியல் தொல்லை
கோவை, அக்.8: கோவை கரும்புக்கடை பகுதியை சேர்ந்தவர் சாஹின் (33). இவர், சிறுமி ஒருவருக்கு தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் அளித்ததால், கோவை மாநகர் அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் தெற்கு சரக காவல் துணை கமிஷனர்...