பைக் திருடிய சிறுவன் உள்பட 3 பேர் கைது
கோவை, டிச. 1:கோவை ஈச்சனாரியை சேர்ந்தவர் ராகுல் சக்ரவர்த்தி (20). ஆட்டோ டிரைவர். இவர் தனது விலை உயர்ந்த பைக்கை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். அதனை மர்ம நபர்கள் திருடிவிட்டு சென்றனர். அதன் மதிப்பு ரூ.3 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் சுந்தராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து...
பணிகள் முழுமையாக நிறைவடைந்த பின் கோவை செம்மொழி பூங்கா விரைவில் திறப்பு
கோவை, டிச.1: கோவை காந்திபுரம் பகுதியில் 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.208.50 கோடி செலவில் அமைக்கப்பட்ட செம்மொழிப் பூங்காவை மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் திறக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். கோவையில் கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில், அன்றைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, மத்திய சிறைச்சாலை வளாகத்தில் 165...
எஸ்.ஐ.ஆர். பணிகள் குறித்து திமுக நிர்வாகியிடம் கேட்டறிந்த முதலமைச்சர்
கோவை,நவ.29: எஸ்.ஐ.ஆர் எனப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,திமுக நிர்வாகிகளிடம் தொலைபேசி மூலம் கேட்டறிந்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் தொண்டாமுத்தூர் அ.ரவியிடம் நேற்று முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசி மூலம் பேசினார். அப்போது கோவை வடக்கு மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகள் எந்தளவு முடிந்துள்ளது?,...
குறிச்சி குளத்தில் மிதந்த பெண் சடலம் மீட்பு
கோவை, நவ. 29: கோவை போத்தனூரை அடுத்து குறிச்சி குளக்கரையில் நேற்று முன்தினம் காலை பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொண்டு இருந்தனர். அப்போது, குளத்தில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சடலமாக மிதந்து கொண்டு இருந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போத்தனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து குளத்தில்...
நீதிமன்றத்தின் முதல் மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை முயற்சி
கோவை, நவ.29: கோவை நீதிமன்றத்தின் முதல் மாடியில் இருந்து குதித்து வாலிபர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவை சாயிபாபா காலனி பகுதியை சேர்ந்தவர் மாதேஷ் (22). இவர் சமீபத்தில் கஞ்சா வழக்கில் சாயிபாபா காலனி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு நேற்று மாதேசை போலீசார் கோவை கோர்ட்டுக்கு...
விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு
கோவை, நவ.28: தமிழக வேளாண்மை, உழவர்நலத்துறை அமைச்சர் தலைமையில் 87வது வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் விரிவாக்க அலுவலர்களுக்கான மாநாடு சென்னையில் இன்று நடக்கவுள்ளது. இதில், பங்கேற்க அனைத்து வேளாண்மை துறை மற்றும் அதை சார்ந்த துறை தலைமை அலுவலர்கள் செல்ல இருப்பதால், கோவை மாவட்டத்தில் இன்று நடைபெற இருந்த வேளாண்மை உற்பத்திக்குழு கூட்டம் மற்றும் விவசாயிகள்...
சாய்பாபா காலனி மேம்பால பணி ஆகஸ்டில் முடியும்
கோவை, நவ.28: கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில் ஜிஎன் மில்ஸ், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளில் மேம்பாலம் கட்டி திறக்கப்பட்டது. இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஓரளவு குறைந்துள்ளது. இந்த நிலையில், மேட்டுப்பாளையம் ரோடு பஸ்நிலையம் அருகே உள்ள சந்திப்பு பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை குறைக்க புதிய...
ஆசிரியை, டாக்டருக்கு இழப்பீடு; தலா ரூ.1 லட்சம் வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவு
கோவை, நவ. 28: கோவை அடுத்த கருமத்தம்பட்டி வேட்டைக்காரன் குட்டை பகுதியை சேர்ந்தவர் ஷர்மிளா(37). அரசு பள்ளி ஆசிரியை. இவர் கோவை நுகர்வோர் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:- கருமத்தம்பட்டியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கடன் வாங்கி இருந்தேன். இந்த கடனுக்காக மாதாந்திர தவணை தொகையும் செலுத்தி வந்தேன். கடந்த 2021ம் ஆண்டு...
பிரசவ கால பாதிப்பு தவிர்க்க உடனடியாக சிகிச்சை
கோவை, நவ.27: கோவை மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான பரிசோதனை, சிகிச்சை முறையாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. சர்க்கரை நோய், ரத்த சோகை, போதுமான ஊட்டச்சத்து, உடல் எடை குறைவு போன்ற பாதிப்புகள் உள்ள கர்ப்பிணிகளுக்கு பிரசவ காலத்தில் ஏற்படும் சிக்கல்கள், அதை தீர்க்க அரசு மருத்துவமனையின் தாய் சேய் நல பிரிவினர் தீவிரம் காட்ட வேண்டும். கூடுதல்...