விழிப்புணர்வு தூதர்களாக மாணவர்கள் செயல்பட வேண்டும்
மதுக்கரை, ஜூலை 26: மதுக்கரை அருகே செயல்பட்டு வரும் கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைபொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, கிருஷ்ணா கல்விக்குழுமத்தின் அறங்காவலர் ஆதித்யா தலைமை வகித்தார். சிஇஓ சுந்தரராமன் முன்னிலை வகித்தார். முதல்வர் டாக்டர் பழனியம்மாள் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில், கலந்து கொண்ட கலெக்டர் பவன்குமார், போதைபொருள் ஒழிப்பின் அவசியம்...
காரமடை அருகே கட்டிட தொழிலாளிக்கு கத்திக்குத்து
காரமடை, ஜூலை 25: காரமடை அருகே கட்டிட தொழிலாளியை கத்தியால் குத்திய தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர். காரமடை வடக்கு ரத வீதியை சேர்ந்தவர் ராஜு. இவரது மகன் புவன் பிராங்க்ளின் (23). தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியில் வசித்து வருபவர் ரஞ்சித் (28). கட்டிட தொழிலாளி....
கொடிசியாவில் புத்தகத் திருவிழா
கோவை, ஜூலை 25: கோவை பீளமேடு கொடிசியா வளாகத்தில் புத்தகத் திருவிழா நடக்கிறது. இதில் நாள்தோறும் கவியரங்கம், சொல்லரங்கம், படைப்பரங்கம், பட்டிமன்றம், நாடகம் போன்றவை நடத்தப்படுகிறது. நேற்று அறிவுக்கேணி அமைப்பு சார்பாக தொழில்நுட்பத்தால் உறவுகள் வளர்கிறதா, தளர்கிறதா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. தொடர்ந்து, ரோட்டரி கிளப் ஆப் சேஞ்ச் மேக்கர்ஸ் அமைப்பு பழங்குடி...
விஜிஎம் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மையம்
கோவை, ஜூலை 25: கோவை விஜிஎம் மருத்துவமனையில் கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை, விர்ஜீனியா காமன்வெல்த் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் அருண் சன்யால் திறந்து வைத்தார். இதில் மாடுலார் ஆபரேஷன் தியேட்டர்கள், எச்இபிஏ வடிகட்டும் காற்றோட்டங்கள், சிறப்பு ஐசியு மற்றும் பல்துறை நிபுணர்கள் கொண்ட குழுமம்...
விவசாயிகள் குறைதீர் கூட்டம் திடீர் ரத்து
கோவை, ஜூலை 24: கோவை மாவட்ட தெற்கு ஆர்டீஓ அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நேற்று நடப்பதாக அறிவிக்கப்பட்டது. இதில் பங்கேற்க விவசாயிகள் பலர் புகார் மனுவுடன் வந்திருந்தனர். ஆனால் அதிகாரிகள் யாரும் கூட்டத்திற்கு வரவில்லை. சிறிது நேரத்தில் விவசாயிகள் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. வரும் வெள்ளிக்கிழமை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள்...
கோவை ஓட்டலில் மனைவியுடன் சாப்பிட்டுக்கொண்டிருந்த கணவனுக்கு கத்திக்குத்து
கோவை, ஜூலை 24: கோவை ஓட்டலில் மனைவியுடன் சாப்பிட்டுக்கொண்டிருந்த கணவனுக்கு கத்திகுத்து விழுந்தது. 3 மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். கோவை சித்தாபுதூர் ஹரிபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜ் ஷியாம் (20). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர், தனது மனைவியுடன் நேற்று முன்தினம் சித்தாபுதூர் ஐயப்பன் கோயில் அருகே உள்ள ஒரு...
நிதியுதவி கேட்டு ஆதரவற்ற குழந்தைகள் மனு
கோவை, ஜூலை 24: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நிதியுதவி கேட்டு ஆதரவற்ற குழந்தைகள் மனு அளித்தனர். கோவை மாவட்டத்தில் தாய், தந்தையை இழந்த குழந்தைகள், தந்தை அல்லது தாயை இழந்த சிறார்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. தாய்-தந்தை, தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு...
கலெக்டர் அலுவலகத்தில் சத்துணவு ஓய்வூதியர்கள் ஒப்பாரி போராட்டம்
கோவை, ஜூலை 23: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் நேற்று கருப்பு முக்காடு அணிந்து ஒப்பாரி போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் வீரபத்திரன் தலைமை வகித்தார். இதில், மாநில பொருளாளர் ஆனந்தவல்லி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் முன்னாள் மாநில பொருளாளர் வெங்கடேசன், இன்னாசி முத்து,...
இந்திய கம்யூ. மாவட்ட செயலாளராக சிவசாமி மீண்டும் தேர்வு
கோவை, ஜூலை 23 : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள மாநில மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் தேர்வு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவது வழக்கம். இக்கட்சியின் கோவை மாவட்ட செயலாளராக சிவசாமி என்பவர் பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் நிறைவடைய இருந்த நிலையில், கடந்த 20ம் தேதி பெ.நா.பாளையம் பகுதியில் நடைபெற்ற...