காரமடை அரங்கநாதர் கோயிலில் ஆடி மாத கிருஷ்ணபட்ச ஏகாதசி உற்சவ விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு
காரமடை, ஜூலை 22: காரமடை அரங்கநாதர் கோயிலில் ஆடி மாத கிருஷ்ணபட்ச ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீஅரங்கநாதர் பெருமாள் காட்சியளித்தார். கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றாக காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோயில் இருந்து வருகிறது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் மாசி மாதத்தில்...
கோவையில் நடிகர் சிவாஜி நினைவுதினம் அனுசரிப்பு
கோவை, ஜூலை 22: கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், நடிகர் சிவாஜிகணேசன் 24வது நினைவுதினம் கோவையில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் வி.எம்.சி.மனோகரன் தலைமை தாங்கி, சிவாஜிகணேசன் படத்துக்கு மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தினார். அவரை தொடர்ந்து, மாவட்ட துணை தலைவர் கே.எல்.மணி, மாநகராட்சி கவுன்சிலர் சுண்டக்காமுத்தூர் முருகேசன், காங்கிரஸ் நிர்வாகிகள்...
இறகுப்பந்து போட்டி சர்வதேச அளவில் கோவை மாணவர்கள் 3ம் இடம்
கோவை, ஜூலை 22: சர்வதேச அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான இறகுப்பந்து போட்டி ஜெர்மன் நாட்டில் உள்ள ரைன் ரூர் என்ற இடத்தில் நடைபெற்றது. இதில், உலகில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகத்தில் இருந்து மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். கோவை பாரதியார் பல்கலை.,க்கு உட்பட்ட ஒரு தனியார் கல்லூரி மாணவர் சதீஷ்குமார் மற்றும் மாணவி ஸ்ரீவர்சினி ஆகியோர்...
கோவை சிங்காநல்லூரில் சிறுவர்கள் கற்கள் வீசியதை கண்டித்த முதியவர் மீது தாக்குதல்
கோவை,ஜூலை21: கோவை சிங்காநல்லூரில் சிறுவர்கள் கற்கள் வீசியதை கண்டித்த முதியவரை தாக்கிய பெற்றோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை சிங்காநல்லூர் உப்பிலிப்பாளையம் தந்தை பெரியார் நகரை சேர்ந்தவர் கிட்டான் (85). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டின் முன்பு அமர்ந்திருந்தார்.அப்போது அங்கு விளையாடி கொண்டு இருந்த 4 சிறுவர்கள்...
கழிவுநீர் முதல் தொழிற்சாலை கழிவுகள் வரை மாசு கட்டுப்படுத்த நிரந்தர தீர்வு
கோவை, ஜூலை 21: உலகம் முழுவதும் தினமும் ஏற்படுத்தி வரும் மாசு காரணமாக 2100ம் ஆண்டுக்குப் பிறகு, பூமியில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாமல் போகலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். மாசு இல்லாத இந்தியாவையும், உலகத்தையும் உருவாக்கும் உறுதியான நடவடிக்கையில் மேக் இந்தியா நிறுவனத்தின் தலைவரும், மனு நீதி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலருமான மாணிக்கம்...
மதுக்கரை அருகே மின்சாரம் தாக்கி தனியார் பள்ளி மாணவர் பரிதாப பலி
மதுக்கரை, ஜூலை 21: மதுக்கரை அருகே மின்சாரம் தாக்கி தனியார் பள்ளி மாணவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோவை மாவட்டம், மதுக்கரை அருகே அறிவொளி நகர் பகுதியில் உள்ள சமத்துவ நகரில் வசித்து வரும் மதன்குமார் என்பவரின் மகன் நந்தகுமார் (17). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு...
மேட்டுப்பாளையத்தில் வீட்டில் பதுங்கிய மலைப்பாம்பு மீட்பு
மேட்டுப்பாளையம், ஜூலை 20: மேட்டுப்பாளையம்-நெல்லித்துறை சாலையில் உள்ள யுபிஎல் நிறுவனம் அருகே உள்ள ஒரு வீட்டில் மலைப்பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதாக என்டபிள்யூசிடி நிறுவனர் ஒயிட் பாபுவிற்கு நேற்று முன்தினம் இரவு தகவல் வந்தது. விரைந்து சென்ற அவர் தலைமையிலான குழுவினர், அந்த வீட்டில் பயன்படுத்தப்படாத பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் மலைப்பாம்பை பதுங்கி இருந்தை கண்டனர்....
மாவோயிஸ்ட் நடமாட்டம்: வனப்பகுதியில் ரகசிய சோதனை
கோவை, ஜூலை 20: கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டத்தில் மாவோஸ்ட் நடமாட்டம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. செக்போஸ்ட், வன எல்லைப்பகுதி ரோடு, வனப்பகுதி கிராமங்கள் (ஷெட்டில்மெண்ட்) போன்றவற்றில் போலீசார் ரகசியமாக கண்காணிப்பு பணி நடத்தி வருகின்றனர். 4 மாவட்டங்களில் சுமார் 600 வன கிராமங்கள் இருப்பதாக தெரிகிறது. மலைப்பகுதியை சேர்ந்தவர்கள் காட்டிற்குள் தேன், திணை, வன...
பூக்கள் பறிக்கும் தொழிலாளர்கள் அவினாசி ரோடு மேம்பாலத்தில் பாதசாரிகளுக்காக நடை மேம்பாலம் கட்ட அனுமதியில்லை
கோவை, ஜூலை 20: கோவை அவினாசி ரோடு மேம்பாலம் 10.1 கி.மீ தூரத்திற்கு 1623 கோடி ரூபாய் செலவில் நடக்கிறது. இதில் இந்த பணிகள் 96 சதவீதம் முடிந்து விட்டது. ஹோப் காலேஜ் பகுதியில் ரயில் பாதை மீது பாலம் அமைக்க வேண்டியுள்ளது. 52 மீட்டர் தூரத்திற்கு பாலம் அமைக்க ஐதராபாத்திலிருந்து 900 டன் எடையில்...