தூய்மை பணியாளர்களுக்கு இன்று சிறப்பு மருத்துவ முகாம்
கோவை, செப். 18: கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் இன்று தொடங்குகிறது. இந்த முகாம் (ஞாயிற்றுக்கிழமை தவிர) 33 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் வார்டு வாரியாக வருகிற 30ம் தேதி வரை நடக்கிறது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை முகாம் நடக்கும். இதில், ரத்த...
வெள்ளலூர் குப்பை கிடங்கில் நள்ளிரவில் தீ 5 மணி நேரம் போராடி அணைத்தனர்
கோவை, செப். 18: வெள்ளலூர் குப்பை கிடங்கில் நள்ளிரவில் ஏற்பட்ட தீயை சுமார் 5 மணி நேரம் போராடி அணைத்தனர். கோவை வெள்ளலூரில் உள்ள குப்பைக்கிடங்கில், மாநகரில் தினமும் சேகரமாகும் 1,100 டன் குப்பை கொட்டப்படுகிறது. இங்கு வெயிலின் தாக்கம் மற்றும் சில சமூக விரோதிகளின் செயல்களால் அடிக்கடி குப்பை தீப்பற்றி எரிவது தொடர் கதையாக...
காந்திபுரம் சிக்னலில் யாசகம் பெற்ற 16 பேர் மீட்பு
கோவை. செப். 17: கோவையில் கணபதி, மேட்டுப்பாளையம் ரோடு, எல் அண்டி பைபாஸ், காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சிலர் சிக்னல்களில் நின்று கொண்டு கார் கண்ணாடியை துடைப்பது, பொருட்களை வாங்க வற்புறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் சிலர் கையில் குழந்தையை வைத்து கொண்டு யாசகம் எடுத்து வருகின்றனர். இதனால், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு...
மதுக்கரையில் மூதாட்டி உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு
மதுக்கரை, செப். 17: கோவை அருகே மதுக்கரையில் செயல்பட்டு வரும் தனியார் சிமெண்ட் தொழிற்சாலையில் பணியாற்றிய போயர் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு சொந்தமான மயானம் கோவை, பாலக்காடு சாலையில் குவாரி ஆபீஸ் பகுதியில் உள்ளது. இந்நிலையில், சிமெண்ட் தொழிற்சாலையை வேறொரு நிறுவனத்திற்கு விற்கப்பட்டது. இதையடுத்து, மயானத்தை பயன்படுத்த தனியார் நிறுவனம் அனுமதி மறுத்து வந்தது. இந்நிலையில், குரும்பபாளையம்...
விமான நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
கோவை, செப். 17: கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத், பூனே, கோவா ஆகிய உள்நாட்டு பகுதிகளுக்கும், சிங்கப்பூர், ஷர்ஜா, அபுதாபி ஆகிய வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோவை விமான...
தெரு நாய், பாம்பு தொல்ைல அதிகமாகியிருச்சு...
கோவை, செப் 16: தெரு நாய்கள் கடிக்க துரத்துகின்றன. குடியிருப்பு பகுதிகளில் பாம்பு தொல்லை அதிகமாகி விட்டதாக பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர். கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த பாக்கியலட்சுமி (82) என்பவர் அளித்த புகார் மனுவில்,“...
வெள்ளலூரில் இன்று மின் தடை
கோவை, செப். 16: கோவை குனியமுத்தூர் மின்பகிர்மான வட்டம் தெற்கு செயற் பொறியாளர் (பொறுப்பு) சென்ராம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:குனியமுத்தூர் கோட்டத்திற்குட்பட்ட போத்தனூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று (16ம் தேதி) செவ்வாய் கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நஞ்சுண்டாபுரம், ஈஸ்வரன்நகர், வெள்ளலூர், அன்புநகர்,...
வீட்டு முன்பு நின்றிருந்த மூதாட்டியிடம் நகை பறிப்பு
கோவை, செப். 16: கோவை சிங்காநல்லூர் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் ரங்கநாயகி (65). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டு முன்பு வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நடந்து வந்த மர்ம நபர், ரங்கநாயகி கழுத்தில் கிடந்த தங்க நகையை பறிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி, கைகளால் நகையை பிடிக்க...
தபால் குறைதீர் கூட்டம்
கோவை, செப். 15: மண்டல அளவிலான தபால் குறைதீர்ப்பு கூட்டம் மேற்கு மண்டலம் அஞ்சல் துறை தலைவர் அலுவலகம், கே.பி.காலனி தபால் நிலையம் வளாகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தேதி விரைவில் அறிவிக்கப்படும். எனவே, வாடிக்கையாளர்கள் தங்களின் புகார்களை துணை இயக்குனர் (மெயில் மற்றும் டெக்), அஞ்சல் துறை தலைவர் அலுவலகம், மேற்கு...