மசக்காளிபாளையம் ரேஷன் கடையில் அரிசி திருட்டு அதிகாரிகள் விசாரணை
கோவை, செப். 3: கோவை ஹோப்காலேஜ் அடுத்த மசக்காளிபாளையம் விஸ்வநாதன் லேஅவுட்டில், சிங்காநல்லூர் கூட்டுறவு பண்டக சாலைக்கு உட்பட்ட ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த ரேஷன் கடையில் இருந்து இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோக்களில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று கடையின் முன்பு இருசக்கர வாகனத்தில் வெள்ளை நிற சாக்கு மூட்டையில்...
அமைகிறது புதிய ரவுண்டனா தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு கோவை மாவட்டத்தில் 13 ஆசிரியர்கள் தேர்வு
கோவை, செப்.3: முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் மத்திய, மாநில அரசுகள் சார்பில் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. அதன்படி, தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறையின் சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் சிறப்பாக பணிபுரிந்த...
காந்திபுரம், மைலேறிபாளையம் பகுதிக்கு நகர பேருந்தை மீண்டும் இயக்க மக்கள் கோரிக்கை
மதுக்கரை, செப்.2: தமிழகத்தில் 1971 ம் ஆண்டு திமுக ஆட்சியின் போது, பொதுமக்களின் வசதிக்காக, கோவை காந்திபுரத்தில் இருந்து, 73 பி. என்கிற எண் கொண்ட, டவுன் பஸ், ரயில்நிலையம், உக்கடம், ஆத்துப்பாலம், சுந்தராபுரம், போத்தனூர், செட்டிபாளையம், ஒக்கிலிபாளையம் வழியாக மைலேறிபாளையதிற்கு டவுன் பஸ் இயக்கப்பட்டது. தினமும் காலை 6.30, 10.30, மதியம் 2 மணி,...
கோவையில் மாநில அளவிலான வாள் வீச்சு போட்டி
கோவை, செப். 2: கோவையில் நடந்த மாநில அளவிலான வாள் வீச்சு போட்டியில், சிறுவர், சிறுமிகள் அசத்தலாக தங்களது திறமையை வெளிப்படுத்தினர். ஒலிம்பிக் விளையாட்டில் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் பென்சிங் என்னும் வாள் வீச்சு விளையாட்டு போட்டிகளில் தமிழக மாணவ, மாணவிகள் கூடுதல் கவனம் செலுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் வாள் வீச்சு போட்டி நடத்தப்பட்டு...
மாநகராட்சி குறை தீர்க்கும் கூட்டம் இன்று ரத்து
கோவை,செப்.2:கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும். மாநகராட்சி மேயர் ரங்கநாயகி தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில், பொதுமக்கள் தங்களது பகுதியில் சாலை வசதி,குடிநீர் வசதி, மின் வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் குறித்து மனு அளிக்கின்றனர். இதேபோல், இன்று(2ம்தேதி) மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற இருந்த மக்கள் குறை...
வீட்டில் விபசாரம்: முதியவர் கைது
கோவை, ஆக. 30: கோவை பொரிக்கார சந்து பகுதியை சேர்ந்த 40 வயது நபர் ஒருவர், பாப்பநாயக்கன் பாளையத்தில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை தடுத்து நிறுத்திய முதியவர் ஒருவர் வீட்டில் அழகான பெண்கள் இருப்பதாகவும், பணம் கொடுத்தால் அவர்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த...
உக்கடம் பெரியகுளத்தில் ஜிப் சைக்கிள் சவாரிக்கு ஆர்வம் குறைவு
கோவை, ஆக 30: கோவையில் உக்கடம் பெரியகுளம், குறிச்சி குளம், முத்தண்ணன் குளம், வாலாங்குளம் உள்ளிட்டவை ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டன. இதன் ஒரு பகுதியாக, உக்கடம் பெரியகுளத்தில் நீர்நிலைக்கு 200 மீட்டருக்கு மேலே குளத்தை பார்த்து பறக்கும் படி ஜிப் லைன் மற்றும் ஜிப் சைக்கிள் சவாரி 2 ஆண்டுக்கு முன்பு துவங்கப்பட்டது....
கணவருடன் பைக்கில் சென்ற பெண் தவறி விழுந்து பலி
கோவை, ஆக.30: கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் ஹரிதாஸ் (66). இவரது மனைவி கிருஷ்ணவேணி (61). இவர், நேற்று முன்தினம் பைக்கில் தனது மனைவி கிருஷ்ணவேணியை அழைத்து கொண்டு கோவை மருதமலை கோயிலுக்கு வந்தார். சட்டக் கல்லூரி அருகே வந்தபோது பைக் திடீரென தடுமாறி பின்னால் அமர்ந்து இருந்த கிருஷ்ணவேணி கீழே விழுந்தார். இதில், கிருஷ்ணவேணிக்கு...
கோவையில் மேல்நிலை வகுப்புகளுக்கு மாத தேர்வு ரத்து செய்ய மனு
கோவை, ஆக. 29: கோவை மாவட்டத்தில் மேல்நிலை வகுப்புகளுக்கு ஆகஸ்ட் மாத தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: மேல்நிலை பள்ளிகளுக்கான காலாண்டு தேர்வுகள் வரும் செப்டம்பர் 10-ம் தேதி முதல் நடக்கிறது. இந்த தேர்வுக்கு இன்னும் 7...